உங்களைப் பற்றி உங்கள் கணவர் மட்டுமே அறிந்த 7 உண்மைகள்.!

பூமியில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களும்சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்பட்டிருக்க வேண்டும்; ஏனெனில், அனைவரின் வாழ்விலும் எதிர்பாராத மாற்றங்கள், திருமணம் அல்லது திருமண வாழ்க்கையாலே தான் நிகழ்கிறது. அப்படி, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு, நடத்தப்படும் திருமணங்களில் இணையும் தம்பதியர் தங்கள் வாழ்நாள் முழுதும் இணைந்தே வாழ்க்கை நடத்துகின்றனர். அதனால், ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்து கொள்ள, அதிக சந்தர்ப்பம் அமைந்திருக்கும். இப்படி உங்களை பற்றி உங்கள் கணவர் மட்டுமே அறிந்த அந்த 7 விஷயங்களைப் பற்றிக் காண்போம்..!!
1. சுயரூபம்..!
உங்கள் பெற்றோர் மட்டுமே அறிந்திருந்த , ஏன் பெற்றோரும் அறியாத.. உங்கள் உண்மை ரூபம் தெரிந்த ஒரே நபர், உங்கள் கணவர் மட்டுமே! நட்டநடு பகலிலும், நடுநிசியிலும் நீங்கள் எந்த மாதிரி நடந்து கொள்வீர், எப்படி யோசிப்பீர் என அனைத்தும் அறிந்திருப்பார்.
2. இலட்சியங்கள்..!
உங்கள் மனதைக் கவர்ந்த கணவர், உங்களின் ஆசைகளையும், வாழ்க்கை இலட்சியங்களையும் நீங்கள் சொல்லியோ அல்லது உங்கள் நடத்தைகளைக் கொண்டோ அறிந்திருப்பார். நீங்கள், உங்கள் இலக்கை அடைய, ஒரு நல்ல கணவராய் இருந்தால் நிச்சயம், உறுதுணையாய் இருக்கவும் செய்வார்.

3. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்..!
உங்கள் உணர்ச்சிகளை, அதாவது, உங்கள் கோபதாபங்களை, சந்தோசத்தை நீங்கள் எப்படி வெளிப்படுத்துவீர் என உங்கள் கணவரை வீட்டா வேறு யாரும் நன்கு அறிந்திருக்க இயலாது.
4. உங்கள் மனநிலை..!

உங்கள் முகத்தைப் பார்த்தே, உங்களின் மனநிலையை அறிவார்.. உங்கள் கணவர்...! ஒரு நல்ல கணவர், எப்பொழுதும் தன் மமனைவியை சோகமாகவோ அல்லது உடல் நலமில்லாதோ காண விரும்பமாட்டார். உங்களுக்கு என்ன சாக்லேட் பிடிக்கும், எங்கு அழைத்து சென்றால், உங்கள் மனநிலை சரியாகும் என அறிந்திருப்பார்..! உங்கள் கணவர்..!
5. உங்களுக்கான இடம்..!
சில நேரம் உங்களுக்கு சமைக்கவோ அல்லது வேறு ஏதேனும் செய்ய விருப்பமில்லாது இருந்தால், உங்கள் கணவர் உங்களைப் புரிந்து கொண்டு, உங்களுக்கான இடம் அளிப்பார். உங்களுக்காக அவர் சமைத்துத் தருவார்...

6. எல்லைகள்..!
உங்களின் பலம் மற்றும் பலவீனம் அறிந்திருப்பார். உங்களிடம் எப்பொழுது எதைக் கூறினால், நீங்கள் காது கொடுத்து கேட்பீர் இல்லை, காட்டுக்கத்தல் கத்துவீர் என அனைத்தும் அறிந்திருப்பார்..! உங்கள் மனமறிந்த, மணாளன்..!
7. பயம்..!
நீங்கள் கொண்ட சிறுவயது பயம் முதல், அனைத்தும் அறிந்த உங்கள் கணவர், அந்த பயத்தோடு நீங்கள் போராடவும் கற்றுக் கொடுத்து, கடைசி வரை உங்களுக்கு உறுதுணையாய் இருப்பார்.. உங்களின் கணவரான காதலர்..!
