Link copied!
Sign in / Sign up
2
Shares

உங்களை கோபப்படுத்தும் மாமியாரின் 5 செயல்கள்

நம் மாமியார்கள் பல நேரங்களில் நமக்கு கோபம் வரும் படி நடந்துகொள்வார்கள். திருமணத்திற்கு பிறகு நீங்களும் உங்கள் தோழிகளும் சந்தித்தால், கண்டிப்பாக அவரவர் மாமியார் பற்றி பகிர்ந்து கொள்வீர்கள். மாமியாரின் சில நடவடிக்கைகள் நம்மை அதிகமாக கோபப்படுத்தும். அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது, நம்மை குறைவாக மதிப்பீடு செய்வது, எதை செய்தாலும் நம்மை பாராட்டாமல் குற்றம் கூறுவது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மாதிரி நம்மை கோபப்படுத்தும், நம் மாமியாரின் சில செயல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1 அனைத்து விஷயங்களிலும் தலையிடுவது

நீங்களும் உங்கள் கணவரும் சண்டையிடும் போது, அதில் உங்கள் மாமியாரின் தலையீடு மிகவும் ஆபத்தானது என்றே சொல்ல வேண்டும். அவர் யார் பக்கமாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும். இதுமட்டுமில்லாமல், நீங்கள் அவரை தலையிட வேண்டாம் என்றும் சொல்ல முடியாது, ஏனெனில், அது மரியாதைக்குறைவாக பார்க்கப்படும்.

2 வீட்டை அலங்கோல படுத்துதல்

நீங்கள் உங்களுக்கு என்று நேரம் ஒதுக்கி வெளியே சென்று விட்டு (எ.கா.) ஸ்பா போன்ற இடங்களுக்கு சென்று விட்டு புத்துணர்ச்சியுடன் வீடு திரும்பும் போது, வீடே தலைகீழாக இருக்கும். குறிப்பாக சமையல் அறையில் இருக்கும் பொருட்கள் இடம் மாறி இருக்கும் காட்சியை சொல்லவே வேண்டாம். ஆனால் உங்கள் மாமியாரோ அறையை சுத்தம் செய்ய நினைத்தேன் என்று சொல்லிவிட்டு படுக்க சென்றுவிடுவார். உங்களுக்கு தான் அதை பார்த்த பிறகு தூக்கமே வராது.

3 பரிசு பொருட்கள்

தாய்க்கு நிகரான உங்கள் மாமியார் உங்களுக்காக பரிசு வாங்கி வரும் போது, அதை பார்க்க நீங்கள் மிகவும் ஆவலாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆனால், அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? உங்கள் மாமியார், நீங்கள் வாழ்நாள் முழுவதும் அணியவே விரும்பாத ஒரு புடவையை தான் உங்களுக்கு பரிசளிப்பார். உங்களிடம் மாற்று புடவையை இல்லை என்றாலும், அந்த புடவையை நீங்கள் கண்டிப்பாக அணிய மாட்டீர்கள். கண் கூசுகின்ற நிறத்தை தான் உங்கள் மாமியார் உங்களுக்காக தேர்ந்தெடுப்பார்.

4 உங்கள் கணவர் / அவரின் மகன் எப்போதும் தப்பே செய்யாதவர்

உங்கள் மாமியார் தான் உங்கள் கணவரை பெற்றார் என்பதால், உங்கள் கணவர் எப்போதுமே தவறு செய்யவே மாட்டார் என்று நினைப்பார். அவர் தப்பே செய்தாலும், உங்கள் மாமியாரின் கண்களுக்கு அது சரியாக தான் இருக்கும். உங்கள் கணவர் தவறு செய்யும் போது உங்களுக்கு துணையாக உங்கள் மாமியார் இருக்க வேண்டுமென்றால் அது நிச்சயமாக நடக்காது.

5 சமையலில் குற்றம் கண்டுபிடித்தல்

நீங்கள் என்ன தான் உங்கள் உழைப்பையெல்லாம் கொட்டி சமைத்தாலும், உங்கள் மாமியார் அதில் குற்றம் கண்டுபிடிப்பார். அவர் உங்களின் உணவு நன்றாக உள்ளது என்று கூறினால் போதும், உங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் அதே சமயம், உங்களின் மாமியாரை தவிர மற்ற அனைவரும் உங்களின் உணவை ரசித்து ருசித்து உண்ணும் போது, உங்கள் மாமியாரின் மேல் கோபம் தான் வரும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon