Link copied!
Sign in / Sign up
2
Shares

உங்கள் வீட்டு உபயோகப் பொருட்களின் காலாவதி தேதி தெரியுமா?

நாம் கடைகளில் வாங்கும் உணவு பொருட்களை காலாவதி தேதி பார்த்து வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்போம். காலாவதி தேதி முடிந்த பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அவற்றை பயன்படுத்த மாட்டோம். ஆனால், வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களுக்கும் காலாவதி தேதி இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் பயன்படுத்தும் ஆடைகள் முதல் பாத்திரங்கள் வரை அனைத்திற்கும் காலாவதி இருக்கிறது. இங்கு வீட்டு உபயோகப் பொருட்களின் காலாவதி பற்றி பார்க்கலாம்.

1 பிளாஸ்டிக்

வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான தண்ணீர் பிடித்து வைக்கும் குடம், குழந்தைகளின் தண்ணீர் பாட்டில், உணவு டப்பா போன்றவை பிளாஸ்டிக் பொருட்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லையேல் நச்சு தன்மை அதிகமாகிவிடும்.

2 டெப்லான் பாத்திரங்கள்

வீட்டில் சமையல் செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல, சமையல் செய்ய நாம் உபோயோகப்படுத்தும் பாத்திரங்களுக்கும் கூட காலாவதி நாள் இருக்கிறது டெப்லான் பாத்திரங்களை மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

3 பிரஷ்

மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் பல் துலக்கும் பிரஷை மாற்ற வேண்டும். இல்லையேல் இதனால் கூட நோய் தொற்று, உடல்நலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக குழந்தைகள் உபயோகப்படுத்தும் பிரஷ்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

4 தலையணை

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய தலையணை மாற்ற வேண்டும். ஒன்று, அதன் வடிவம் மாறி கழுத்து வலி உண்டாக காரணியாக இருக்கும். மற்றொன்று வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான். அதன் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்த இரண்டு - மூன்று வருட இடைவேளையில் சீராக மாற்றி, அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம்.

5 உள்ளாடை

வருடத்திற்கு ஒரு முறை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும். முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும்.

6 தேன் இரப்பர்

குழந்தைகளுக்கு பால் தர, அழாமல் இருக்க நாம் பயன்படுத்தும் தேன் இரப்பரை நான்கு அல்லது எட்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் கிழிசல், கீறல் போன்றவை குழந்தைகளுக்கு சுகாதாரமற்றதாக மாறும். எனவே, ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அதை கட்டாயம் மாற்ற வேண்டும்.

7 சீப்பு

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சீப்பை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். முக்கியமாக வீட்டில் அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது அவசியம்.

8 காலணிகள்

ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி காலணிகளை கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

9 ஸ்பாஞ்

குளியல் அறை, சமையல் அறை, தரைகளை துடைக்க, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லாவிடில், பூஞ்சை தொற்று அதிகரிக்கும். முக்கியமாக இதன் காரணத்தால் வீட்டில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

10 சுத்தம் செய்யும் பொருட்கள்

வீடு, கழிவறை மற்றும் தரையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ், குச்சிகள், கையுறைகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதிகமாக இரசாயனங்கள் ஓட்டும் காரணத்தால், இவை சுகதாரமற்ற பொருளாக இருக்கும்.

11 விரிப்பு

மெத்தை விரிப்பு, நம்மில் பலரும் பல வருடங்கள் மாற்றாமல் பயன்படுத்தும் பொருள். ஐந்தில் இருந்து எட்டு வருடத்திற்கு ஒருமுறை மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மெத்தை விரிப்பை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon