Link copied!
Sign in / Sign up
0
Shares

உங்கள் வயது உறவினர்களுடனான அழகிய 10 தருணங்கள்..!

கசின்ஸ் என்று சொல்லப்படும் உங்கள் வயது உறவினர்கள் எப்பொழுதும் உங்களுக்கு ஒரு சிறந்த உறவாய், உற்ற நண்பர்களாய் வாழ்வில் இருந்து வந்திருப்பர்; நீங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தாலோ அல்லது தொலைதூர நகர்களில் வாழ்ந்து திருவிழாவிலோ, திருமண விழாக்களிலோ சந்திக்கும் போதோ உங்கள் மனது அடையும் சந்தோசத்திற்கு அளவே இல்லை..! அப்படி உங்கள் வயது உறவினர்களுடன் நீங்கள் கொண்ட அழகிய 10 தருணங்கள் குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

1. வாழ்நாள் நண்பர்கள்..

நீங்கள் வளரத்தொடங்கிய கணம் முதல் உங்கள் முதுமைக் காலம் வரை, இந்த உறவினர்கள் - நண்பர்கள், வாழ்வில் எப்பொழுதும் உங்களுக்கு துணையாகவே இருப்பர்..! அவர்களுடன் பால்ய பருவத்தில் நீங்கள் அடித்த கும்மாளத்திற்கு அளவே இருக்காது; வளர்ந்த பின்னும் கூட நீங்கள் அடிக்கும் அட்டகாசம் அழகான அத்யாயமாய் நீண்டு கொண்டே இருக்கும்..!

2. தொலையாத பால்யம்..

உங்கள் அழகான குழந்தைப்பருவ நாட்கள், சேஷ்டைகள் என எதுவும் அழியாத சித்திரமாய் புகைப்பட ஆல்பங்களிலும், நீங்கா நினைவுகளாக உங்கள் நெஞ்சத்திலும் இடம் பெற்றிருக்கும்..!

3. கூட்டாளிகள்..

நீங்கள் எந்தவொரு குறும்புத்தனம் செய்தாலும், தவறான விஷயம் கலந்த குறும்பாக இருந்தாலும் உங்களுக்குத் தோள் கொடுத்து, உற்ற கூட்டாளியாக இருப்பது உம் வயது உறவினர்களே!

4. பாட்டி வீடு..

விடுமுறை நாட்களில் நீங்கள் பாட்டி வீட்டிற்கு செல்லுகையில் இந்த உறவு நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்து, நீங்கள் அடிக்கும் கொட்டத்திற்கு எல்லையே இல்லை..!

5. தேர்வு - விருப்பம்..!

உங்கள் வயது உறவுகள் இரத்தத்தால் உறவுகள், மனதால் சகோக்கள், உங்கள் தேர்வால், அவர்கள் உமது நண்பர்கள்..!

6. அலுப்பு..

உங்கள் உறவு நண்பர்கள் உடனிருந்தால், அலுப்போ களைப்போ வாழ்வில் எந்நாளும் ஏற்படாது; நீங்கள் செய்யும் ரகளைகள் உங்களை கலகலவென சிரிக்க வைத்து சந்தோஷமாகவே இருக்க வைக்கும்..!

7. ரெடிமேட் நண்பர்..

உங்கள் வயது உறவு, உமது வாழ்வின் தேடத் தேவையில்லாத, உங்களுக்கு குறைவான வலி, ஏமாற்றம் தரும் ரெடிமேட் நண்பர்..!

8. கடவுளும் - அன்னையும்..

கடவுள் உங்களை உறவாக படைத்தார்; ஆனால், அன்னை உங்களை உறவாக அல்லாமல், சகோக்களாக வளர்த்தார்..!

9. உறவின் வலிமை..!

உங்கள் வயது உறவு நண்பனின் பாசத்திலோ அல்லது அவரின் வலிமையிலோ சந்தேகம் வேண்டாம்; வாழ்வில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் உங்களுக்குத் துணையாக இருந்து, அவர்தம் பாசத்தால் உம்மைக் காப்பார்..!

10. காலம்..

காலத்தால் நீங்கள் சேர்ந்து இருந்த தருணங்கள் மாறி உங்களின் இடையே தற்காலிக பிரிவு ஏற்படலாம்; ஆனால், மனதால் உங்களுக்குள் என்றும் பிரிவு ஏற்படாது; உங்களிடையே இருக்கும் பாசத்தை காலத்தால் குறைக்க இயலாது, கொழுந்துவிட்டு வளரும் தீயாய் உங்கள் பாசம் பிரிவால் மேலும் மேலும் வளர மட்டுமே செய்யும்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon