Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்கள் உடலில் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் 7 பழங்கள்..!!

இயற்கையிலேயே உருவாகி கிடைக்கும் இயற்கையான பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக, நோய் நொடிகளில்லாமல் வாழ முடியும். அந்நாளில் காட்டில் வாழ்ந்த சித்தர்கள் 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர், இது பலவித சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டும் உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் உருவான காய்கள் மற்றும் பழங்களை உட்கொண்டது தான். எனவே, இப்பதிப்பில் நம் முன்னோர்கள் வழிமுறையான இயற்கை முறையில் உருவான பழங்களை உண்டால், என்னென்ன பழங்கள் கிடைக்கும் என்பதை படித்தறிவோம்..!   

ஆப்பிள் 

இது இருதய நோய், மூட்டுவலி, இரத்தக் கொதிப்பு, தலைவலி போன்றவை உங்கள் உடலில் ஏற்படாமல் தடுக்கும்.

திராட்சை 

இப்பழம் மனித உடலில் பசியின்மை, சிறுநீரக கல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுத்து, பாதுகாக்கும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழம் காய்ச்சல், முகப்பரு, எலும்பு நோய்கள் வராமல் தடுக்கும்; மேலும் இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது, இதை வளரும் குழந்தைகளுக்கு அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை

இது அஜீரணக்கோளாறு, வயிற்றில் பூச்சி, சிறுநீரகக்கல், பித்தப்பை, புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம்

இப்பழம் மூட்டுவலி, காசநோய், சிறுநீரகக்கோளாறு, ஒவ்வாமை ஆகியவற்றில் இருந்து குணமளிக்கிறது.

பப்பாளி

பப்பாளி பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்த்து, மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி

நெல்லிக்கனி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்; இது தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க பெரிதும் உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon