Link copied!
Sign in / Sign up
5
Shares

உங்கள் தாய்மையை சிறப்பாக்கும் 5 அழகுநிலைய யோசனைகள்

பிரசவத்திற்கு பிறகு குழந்தைகளை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால், தங்களை கவனித்து கொள்ள தாய்மார்களுக்குநேரம் கிடைக்காது. புதிய தாய்மார்களுக்கு, திடீரென்று நிகழும் இந்த மாற்றங்களை பழகி கொள்வதற்க்கு சில காலம் ஆகும். இந்த மாற்றங்களால் கண்டிப்பாக தாய்மார்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதை சரி செய்ய தனக்கென்று சிறிது நேரத்தை தாய்மார்கள் ஒதுக்க வேண்டும். குழந்தைகள் உள்ளதால் உங்களால் ஸ்பாக்களில் நேரத்தை செலவிட முடியாது. அதனால், வீட்டிலேயே சில விஷயங்களை செய்யலாம்.

ஸ்பாவில் சிறிது நேரம் செலவிடுவதால் நமது உடல் மற்றும் மனது புத்துணர்ச்சி அடைவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் வீட்டில் செய்யலாம். மேலும், இதற்கு குறைந்த செலவே ஆகும்.

1 ஃபேஸ் பேக்

இன்றைய நாளில் அதிகரித்து வரும் தூசு மற்றும் மாசுகளுக்கு இது ஒரு மிக சிறந்த தீர்வாகும். மேலும், இது சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.

அ) கற்றாழை :

கற்றாழையின் சதை பகுதியை சிறிது எடுத்துக்கொண்டு, அத்துடன் சிறிது மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி, காய்ந்த உடன், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஆ) கொண்டைக்கடலை :

கொண்டைக்கடலை தூளை எடுத்துக்கொண்டு அத்துடன் சிறிது மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்த உடன் கழுவிவிட வேண்டும். இது உடலில் தேவையில்லை முடிகளை நீக்கவும் பயன்படுகிறது.

2 நீண்ட குளியல்

ஒரு நீண்ட குளியல் போடா யாருக்கு தான் பிடிக்காது. அதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பாத் டப்பில் தண்ணீரை நிறைத்து கொண்டு சிறிது ரோஸ் வாட்டர் அல்லது லாவெண்டர் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

3 எண்ணெய்

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். முதல் நாள் இரவு சிறிது தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி, தலைக்கு தடவி அடுத்த நாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

4 ஸ்க்ரப்பிங்

எலுமிச்சை ஒரு மிக சிறந்த ஸ்க்ரப்பராகும். எலுமிச்சை பழச்சாறை கை கால் முட்டிகளில் தடவினால், அதிலுள்ள கருமைகள் நீங்கும்.

5 பெடிக்யூர்

கால்களை, உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வைத்தால் மிக நன்றாக இருக்கும். அதில் சிறிது ரோஜா இதழ்களையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்க்ரப்பர் பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும்.

இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது தூக்கம். அதுமட்டுமில்லாமல், வீட்டில் சௌகரியமான ஒரு சூழலையும் உருவாக்க வேண்டும். இவை எல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களின் தாய்மை காலம் மன அழுத்தம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon