Link copied!
Sign in / Sign up
4
Shares

உங்கள் சருமம் கருமையில்லாமல் ஜொலிக்க உதவும் 5 குறிப்புக்கள்

வெயில் காலத்தில் சருமம் கறுத்து போவது இயல்பான ஒன்று. ஆனால், இதை தடுக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே, வெயில் காலத்தில் உங்கள் சருமம் கறுமையில்லாமல் ஜொலிக்க  உதவும் சில வீட்டு  குறிப்புகளை பார்க்கலாம்.

1 ஃப்ரூட் மாஸ்க்

வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை கலந்தது சருமத்தில் தடவலாம். 20-30 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்பு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். வாழை சருமத்தை இறுக்கமாக்குகிறது, ஆப்பிள் உங்கள் சருமத்துக்கு ஜொலிக்கும் தன்மையை வழங்கும் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு உங்கள் சரும செல்களில் அமில-கார சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

பப்பாளி பழ கூழை, முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதிலிருக்கும் என்சைம்கள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, உங்கள் முகத்தை அப்பழுக்கில்லாமல் பளிச்சென்று காட்டும். முகத்தில் உள்ள கறுமையை போக்க, பப்பாளி கூழுடன் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து தடவலாம்.

2 மோர் மற்றும் ஓட்ஸ் பேக்

மூன்று தேக்கரண்டி மோர் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்த்து பேஸ்ட் செய்துகொள்ளுங்கள். இதை இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். மோர் உங்கள் சருமத்தில் உள்ள கொப்பளங்களை சரி செய்கிறது. ஓட்ஸ் இரத்த செல்களை நீக்குவதால், உங்கள் சருமம் இளமையாக தெரியும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

3 கற்றாழை மற்றும் தர்பூசணி

வெயிலால் ஏற்பட்ட சரும பாதிப்புகளை கற்றாழை குணப்படுத்தும். கற்றாழையில் துத்தநாகம் இருப்பதால், இது பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. தர்பூசணி வெயிலால் ஏற்படும் வறட்சியை போக்கி, சருமத்தை புத்துணர்வாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், தர்பூசணி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.

4 இளநீர் மற்றும் சந்தனம்

ஒரு தேக்கரண்டி இளநீர் மற்றும் ஒரு தேக்கரண்டி சந்தனம் எடுத்துகொள்ளுங்கள். இதை பசை போல் செய்துகொள்ளுங்கள். தேவையென்றால் இன்னும் இளநீர் சேர்த்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் சிறிது பாதாம் சாறு சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவையை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி காய விட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.

சந்தனத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இளநீருடன் சேரும் போது, இது வெயிலால் ஏற்படும் கறுமையை போக்குகிறது. இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதுடன் மட்டுமில்லாமல், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் சரி செய்கிறது. கறுமையை போக்குவதற்கு இது ஒரு சிறந்த வழி என்று தான் சொல்ல வேண்டும்.

5 தேன் மற்றும் அன்னாசி

ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி அன்னாசி பழ கூழ் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். உங்கள் சருமத்தில் இதை தடவி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால், இது மிகவும் பலனளிக்கும்.

வெப்பமண்டல பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும், அன்னாசி அதன் புத்துணர்வான சுவைக்கு பெயர் போனது. இதன் சாற்றில் உள்ள ப்ரோமீலேன் என்ற பொருள், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கறுமையை போக்குகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி சருமம் முதிர்ச்சியடையாமல் பாதுகாக்கிறது. தேனுடன் கலக்கும் போது இதன் பலன்கள் மேலும் அதிகமாகிறது. 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon