Link copied!
Sign in / Sign up
0
Shares

திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் சொந்தங்கள் சிறந்தது என்பதை உணர்த்தும் 5 விஷயங்கள்..!

திருமணமான பின் கிடைக்கும் சொந்தங்களான புகுந்தகத்தார் உங்களை, அவர்தம் மகளாக ஏற்று, உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்; ஒரு சிலர் வாழ்வில் வேண்டுமானால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறலாம். பெரும்பாலான பெண்களின் வாழ்வில், புகுந்தகத்தார் அன்புக் கணவரை வழங்கி, மற்றோரு குடும்பத்தை அளித்து வாழ்வில் அழகான அங்கமாக மாறிவிடுகின்றனர். புகுந்தகத்தாரின் அருமை பெருமைகளை பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..! 

1. பெற்றோர்..!

பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை பிரிந்து வந்த உங்களை நன்கு கவனித்து, புகுந்தகத்தை உங்கள் இல்லமாக உணரவைத்து, அக்குடும்பத்தின் ஒரு பாகமாக நீங்கள் மாற பெரும் உதவியை செய்கின்றனர், புகந்தகத்தார்..! உங்களுக்கு இரண்டாவது பெற்றோராகவே மாறிவிடுகின்றனர்.

2. உறுதுணை..!

குழந்தைகள் பிறந்த பின் என்னதான் அம்மா உதவி செய்தாலும், புகந்தகத்தாரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முற்படுகின்றனர். மேலும் நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் உங்களுக்கு பேருதவி புரிவதை உங்களால் மறக்கவோ மறுக்கவோ இயலாது..!

3. அறிவுரை..!

நீங்கள் எந்த விஷயத்திலாவது அல்லது எதையேனும் கையாள்வதில் குழப்பம் கொண்டிருந்தால், உங்களுக்கு எளிதான, சரியான அறிவுரையை உங்கள் புகுந்தகத்தாரால் அளிக்க இயலும். அவர்களின் அனுபவம் மூலம் கூறும் அறிவுரை சரியானதாக அமைந்து, நல்லதொரு முடிவு எடுக்க உதவும்..!

4. கற்றல்..!

நீங்கள் எத்தனை வயதானாலும் எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு பொறுப்புடன், சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் புகந்தகத்தாரை பார்த்தே கற்றுக் கொள்ளலாம்; அவர்கள் உங்களுக்கு கற்றுத்தரும் ஆசானாய் இருப்பார்கள்..! மேலும் பிறந்தகத்தில் சொல்லித்தராத பல விஷயங்கள் புகந்தகத்தாரால் விளக்கப்படுகின்றன.

5. சிறுவயது நினைவுகள்..!

உங்கள் கணவரின் சிறுபிராய புகைப்படங்களை காணும் போது, அந்நாளில் நடந்த நிகழ்வுகள், சந்தோஷ சம்பவங்கள் என அனைத்தையும் உங்களுக்கு விளக்குகின்றனர், புகந்தகத்தார். இதனால், உங்களால் அக்குடும்பத்தின் அனைத்தும் அறிந்த முக்கிய நபராக நீங்கள் மாறுகிறீர்கள்; இது குடும்பத்தின் அங்கமாக எளிதில் மாற உதவும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon