Link copied!
Sign in / Sign up
1
Shares

உங்கள் நலனை முன்னிலையில் வைப்பது குற்றமில்லை, பெண்களே..!

கடவுள் படைத்த முதல் படைப்பு ஆண் என்று நம்பப்படுகிறது. அப்படி படைக்கப்பட்ட ஆணால், தனியாக வாழ இயலாது; அவருக்கு வாழ்வில் மற்றோருவரின் உதவி மற்றும் உறுதுணை தேவைப்படலாம், என்று எண்ணி கடவுள் பெண்ணைப் படைத்தார் என்ற நம்பிக்கையும் உள்ளது. இவ்வாறு படைக்கப்பட்ட பெண் ஆணுக்கு அடிமையாகி உதவமட்டுமல்ல; ஆணுடன் வாழ்க்கையை பகிர, ஆணுடன் சரிநிகராக நின்று வாழ்வை எதிர்கொண்டு வென்று, வெற்றிக்கொடி நாட்டி, உலகை அன்பால் மலரச் செய்யவே படைக்கப்பட்டாள், பெண்.

இவ்வாறு படைக்கப்பட்ட பெண்ணிற்கு கடவுள் வரமா? சாபமா? என்று யோசிக்க வைக்கும் வகையில் பல விஷயங்களை அளித்துள்ளார். பொதுவாக சிறுமியாக இருந்த பெண், பூப்படைந்து குமரியாக மாறுகிறாள். இந்த பூப்படைதலால் பெண்கள் (சிலர்) மாதந்தோறும் சற்று வலி அனுபவித்து, வருந்துகின்றனர். பல பெண்கள் அதையும் ஒரு சவாலாக ஏற்று, அதை பொருட்படுத்தாது, பல அதிசயங்களை புரிந்து வாழ்வில் ஜெயிக்கின்றனர்.

அடுத்தது மணவாழ்வு..!

பிறந்த வீட்டில் பெற்றோர், உடன்பிறந்தோருடன் வாழ்ந்து, வளர்ந்து, பின் அவர்களை பிரிந்து கணவன் அகம் புகுந்து புது உறவுகளை ஏற்கிறாள், பெண். பிறந்தகத்தையும் பேணி, புகுந்தகத்தை அனுசரித்து, அவர்களையும் உறவாய் ஏற்று பேணிக்காக்கிறாள் பெண். திருமணமான பின் உடலுறவில் கணவனுக்கு இன்பம் வழங்கி, தானும் இன்பம் அடைந்தாலும் அதன் மூலம் ஏற்படும் வலி, பெண்களை வருத்தத் தான் செய்கிறது.

தாய்மை..!

தாய்மை வலி கலந்த சுகமான, புனிதமா அனுபவமாக இருந்தாலும், குழந்தை பிறந்த பின் குழந்தையை கவனிப்பதிலேயே பெண்ணின் நேரமும், வாழ்வும் கழிந்து விடுகிறது. குழந்தையையும் குடும்பத்தையும் பேணியே, பெண்ணானவள் தன்னை மறந்து விடுகிறாள்.

இப்படி பெண் பெற்றவர்களையும், உற்றவர்களையும் கவனித்து, கணக்கில் கொண்டு தன்னை மறப்பதால், அவள் தன் நலத்தை இழக்கிறாள்; தன் வாழ்வை இழக்கிறாள்..! உங்கள் குடும்பத்தை, குழந்தையை காக்க நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் பெண்களே! அதே போல், உங்கள் குடும்பம் மற்றும் குழந்தை வாழ்வில் நிலைபெற, ஜெயிக்க உங்கள் வெற்றியும் அவசியமானதே! 

உங்கள் நலனை எண்ணுவதும், அதற்காக பாடுபடுவதும் சுயநலமல்ல. உங்கள் நலமே குடும்பத்தின், குழந்தையின் நலம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்..! ஆகையால், உங்கள் இலக்கை அடைய குடும்பம் மற்றும் குழந்தை தடை என்று கூறாமல், அவர்களை படிக்கல்லாய் எண்ணி, வெற்றி இலக்கை தட்டிப் பறியுங்கள் பெண்டிரே! நீங்கள் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதை உணர்த்துங்கள்..

ஒரு பெண் வீட்டிலும் ஜெயித்து, வெளியிலும் ஜெயிக்கும் போது தான் முழுமையடைகிறாள். இரண்டில் ஒன்றில் பின் தங்கினாலும், கோட்டை விட்டாலும் அவளின் வாழ்வு அர்த்தமற்றதே! ஏனெனில் பெண்ணுக்குள் அத்தகைய சக்தி புதைந்துள்ளது. அதை அனைத்து மகளிரும் உணர வேண்டும்; உணர்ந்து வாழ்வில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon