Link copied!
Sign in / Sign up
0
Shares

உங்கள் நாளை சிறப்பாக்கப் போகும் ஒரு அருமையான பதிப்பு!

அன்றாட வாழ்வில் நடைபெறும் பிரச்சனைகளால், சிரிப்பு என்பதை மறந்து, தினசரி பிரச்சனைகளை குறித்து எண்ணி எண்ணி, மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும் சுமந்து வாழ்ந்து வருகிறோம், நாம்! இந்த அன்றாட பிரச்சனைகளில் இருந்து சற்று உங்கள் மனதை திசைதிருப்பி, உங்களை வாய் விட்டு சிரிக்க செய்யும் வகையிலே இந்த பதிப்பை அளிக்கிறோம்! பார்த்து, படித்து சிரிக்கவும்!

BBC எனும் செய்தி தொடர்பான தொலைக்காட்சியில் வட கொரியா பிரச்சனையைப் பற்றி மிகவும் தீவிரமாக BBC நிருபரும், பேட்டி அளிக்கும் மற்றோரு நபரும் வீடியோ கான்பெரென்சிங் (video conferencing) மூலம் பேசிக்கொண்டிருந்தனர். இவ்விருவரில் நிருபர் தொலைக்காட்சி அலுவலகத்திலும், மற்றோரு நபர் தன் வீட்டிலிருந்தும் பேசிக்கொண்டிருந்தனர்.

அச்சமயம் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த நிருபர் திடீரென அதிர்ச்சியாகிவிட்டார்; அந்த நிருபரின் அதிர்ச்சிக்கான காரணத்தை நீங்களே! இந்த காணொளியில் கண்டு அறியுங்கள் நண்பர்களே!

பார்த்தீர்களா? தந்தை பேட்டி கொடுக்கும் போது குழந்தைகள் வந்து தொந்தரவு செய்வதும், அவர்களின் தாய், குழந்தைகள் கணவரை தொந்தரவு செய்துவிடாமல் இருக்க பாடுபடுவதையும் மிக அழகாக காட்டியுள்ளனர்! இந்த காணொளி உங்கள் முகத்தில் ஒரு சிறு குறுநகையையாவது கொண்டுவந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிப்பை முடிக்கிறோம்..! எப்பொழுதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் தோழர்களே!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon