Link copied!
Sign in / Sign up
16
Shares

உங்கள் முட்டை வெளியேறும் நேரம்: கருவுற சிறந்த நேரம்

நாம் செய்யும் அத்தனை செயல்களுக்கும் நல்ல நேரம் பார்ப்பது என்பது நமது வாழ்வில் அடிப்படையான விஷயமாகி போய்விட்டது. எதற்கெடுத்தாலும் நல்ல நேரம் பார்க்கும் நாம், நமது வாழ்க்கையையே அழகாக்க போகும் குழந்தையை கருத்தரிக்க சரியான நேரத்தை பார்ப்பதில்லை. இந்த பதிப்பில், நாம் கருவுற சிறந்த நேரம் எது? கரு எவ்வாறு உண்டாகிறது? உண்டான கரு எப்படி குழந்தையாய் மாறி எப்பொழுது கிடைக்கும் என்பதையும் இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

கருமுட்டை உருவாக்கம்..?

பெண்களின் உடலில் கருமுட்டைகள் உருவாதல் பூப்படைந்த காலம் முதலே நடைபெறும் செயலாகும். இதில் முதிர்ந்த கருமுட்டை கருக்குழாய் வழியே வெளியேறி, கருவுற தயாராக காத்திருக்கும் கருப்பையில் ஆண் விந்துவிற்காக காத்திருக்கும். அப்படி காத்திருந்து கருவுறுதல் நடக்கவில்லையெனில் முட்டை மற்றும் தயாராய் காத்திருந்த கருப்பை சுவர் இவை இரண்டும், மாதவிடாயாக வெளியேறிவிடுகிறது.

மாதவிடாயில் உள்ள வெவ்வேறு நிலைகள்..

முட்டை உருவாதல்:

மாதவிடாயின் கடைசி நாளிலிருந்து, அடுத்த மாதவிடாயின் தொடக்க காலம் வரையில், முட்டை உருவாகி கருவறையில் காத்திருக்கும் நிகழ்வு நடக்கும்.

கருவறை தயாராதல்..

மாதவிடாயில் வெளியேறிய கருப்பை சுவர் போல், மீண்டும் கருப்பை சுவர் அமைத்து கருவுறத் தயாராய் காத்திருக்கும்; இதுவும் மாதவிடாயின் கடைசி நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் வரை நடக்கும்..

உங்களுக்குத் தெரியுமா?

மனஅழுத்தம், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, உட்கொள்ளும் உணவு போன்றவை கருவுறும் காலத்தை தீர்மானிக்கின்றன.

சரியான நேரம்..!

கருமுட்டை உருவாகும் காலம் 28-35 நாட்கள் ஆகும். இந்த காலத்தை சரியாக கணக்கிட்டு கருவுற முயல வேண்டும். அதவாது மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாள் மற்றும் அடுத்த மாதவிடாய் ஏற்படும் முதல் நாள் இவ்விரண்டு நாளையும் கழித்தால், வரும் மத்தியிலான 14 ஆம் நாளில் கருவுறும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே சரியான காலம் ஆகும்.

புரியும் வகையில் சொல்லப்போனால், மாதவிடாய் ஏற்படுவதற்கு 28 நாள் கால இடைவெளி இருக்கும். மாதவிடாயின் தொடக்க நாளுக்கு முன்னர் வரும் 14 ஆம் நாளில் கருவுற முயற்சிக்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் கொண்ட பெண்களே!

உங்கள் மாதவிடாய் ஒழுங்கற்றதாய் இருக்கும் பட்சத்தில் சிறுநீர் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை பெற்று கருவுற சரியான காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்பொழுது உடலுறவு கொள்ள வேண்டும்?

கருமுட்டை உருவாகும் அத்தனை நாட்களும் நீங்கள் உடலுறவு கொண்டாலும் குழந்தை உருவாகாமல் போகலாம். சரியாக முட்டை வெளியேறும் நாளை கணக்கிட்டு, அந்த 1-2 நாளில் உடலுறவு கொண்டால், அது கருவுற ஏற்றதாக இருக்கும். இதுவே சிறந்த தருணம்..

கருவுறுதல்..!

சரியான காலத்தில் உடலுறவு கொண்ட பின், ஆண் விந்துவும் பெண் முட்டையும் இணைந்து கருவை உருவாக்கும். உருவான கரு, கருப்பையில் நிலைபெற்று, பிரிதலில் ஈடுபட்டு, குழந்தையின் பாகங்கள் உருவாகத் தொடங்கும்..!

அவ்வளவே பெண்களே! நீங்கள் தாயாகப் போகிறீர்கள்.., இந்த ஆனந்தத்தை பெற சரியான நாள் மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்து, வாழ்க்கையின் வசந்தத்தை பெறுங்கள்..! வாழ்க வளமுடன்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon