Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்கள் குழந்தைகளின் விசித்திர உடல்மொழிகள் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?

தாய் எனும் ஸ்தானத்தை அடைந்துவிட்ட நீங்கள், உங்கள் குழந்தையின் உடல்மொழியை உணர தயாராக வேண்டியது அவசியம். ஏனெனில், குழந்தைகளின் ஒவ்வொரு பருவ செயல்கள் என்பது ஒவ்வொரு மாறுதலுடன் காணப்பட, அவை யாவும் நமக்கு ஒன்றே ஒன்றை தான் தருகிறது. அதுதான் சந்தோசம்... இத்தகைய குழந்தைகளின் செயல்கள் பெட்டகத்தில் பூட்டிவைக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்பதை புரிந்து செயல்படுவது மிகவும் அழகிய தருணத்தை அன்றாட நாளில் தருகிறது. அத்துடன் உங்கள் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளவும் உடல்மொழிகள் உதவுகிறது.

உதைத்தல்:

உங்கள் குழந்தை உதைப்பது என்பது சந்தோசத்தை வெளிப்படுத்தும் தருணமாகும். பொதுவாக குழந்தைகள் குளிக்கும்போது, அல்லது அவர்களுடன் நீங்கள் விளையாடும் போது மிகவும் ஆர்வத்துடன் கால்களை வேகமாக ஆட்டுவார்கள். உங்கள் மடியில் சுமக்கும் குழந்தைக்கு ஒரு தாலாட்டு பாடலை போட்டு காட்டுங்கள். அப்போது சந்தோசத்துடன் உங்கள் குழந்தை எட்டி உதைத்து சிரிப்பான்.

பின்னோக்கி செல்லுதல்:

உங்கள் குழந்தை மெல்ல பின் நோக்கி நகர்வான். அந்த நிமிடம் அவனுக்கு  வலியும் இருக்கக்கூடும். அப்படி என்றால்... உங்கள் குழந்தைக்கு நெஞ்செரிச்சல் ஆனது ஏற்பட்டிருக்கலாம் எனக்கூட அர்த்தமாகும்.

தலையை அசைத்தல்: 

உங்கள் குழந்தை தலையை மெல்ல அசைத்தால்...அவன் ஏதோ வலியுடனோ அல்லது அசவுகரிய நிலையுடனோ இருக்கிறான் என அர்த்தமாகும்.  குழந்தை தலையை அசைப்பதை வெகு நாட்களுக்கு நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உடல் நலத்தை பரிசோதிப்பது அவசியமாகும்.

செவியை உணர்தல்:

உங்கள் குழந்தை கேட்க தொடங்க, காதுகளை மெல்ல இழுத்துக்கொள்ளும். உங்கள் குழந்தை காதுகளை அசைத்து அழுதால், அவனுக்கு ஏதோ காதில் பிரச்சனை என அர்த்தமாகும்.

முஷ்டியை மடக்குதல்:

உங்கள் குழந்தை முஷ்டியை மடக்குவது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால், முஷ்டியை மடக்குவதின் முதல் அறிகுறி என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு பசி எடுத்திருக்கிறது என அர்த்தமாகும். 

முழங்கால்கள் குதிப்பது:

உங்கள் குழந்தைக்கு செரிமான கோளாறு ஏற்பட்டால், முழங்கால்களால் குதிக்க முயல்வான். உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, வயிற்று வலி இருந்தாலும் முழங்கால்களை அசைக்கக்கூடும்.

கைகளை ஆட்டுதல்:

குழந்தைகள் கைகளை ஆட்டுவது என்பது வழக்கமான அனிச்சை செயல்பாடுதான். ஆனாலும்... உங்கள் குழந்தையை வெளியில் அழைத்துசெல்லும் போது திடீரென கேட்கும் ஓசை கண்டோ...அல்லது வெளிச்சம் கண்டோ கைகளை ஆட்டக்கூடும். உங்கள் குழந்தைகள் தனியாக இருந்தாலும் கைகளை ஆட்டி தன் தனிமையை உங்களுக்கு தெரியப்படுத்தக்கூடும்.

இப்போது உங்கள் குழந்தைகளின் உடல்மொழி என்ன சொல்கிறது என தெரிந்துக்கொண்டீர்களா? உங்கள் குழந்தை என்ன சொல்கிறது? கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன்...

நண்பர்களே!

உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon