Link copied!
Sign in / Sign up
21
Shares

உங்கள் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான 6 ஐடியாக்கள்...!

 
உங்கள் வாழ்வில் புத்தொளியாய் வந்த புத்துயிர்..., உங்கள் குழந்தையே.. உங்கள் உலகம். சின்னஞ்சிறு தளிராய் உங்கள் கையில், தவழ்ந்த உங்கள் உயிர், மெதுவாய் வளர்ந்து, தரையில் தவழ்ந்து, இப்போது நடக்கத் தயார் அடைந்துவிட்டது; நீங்கள் உங்கள் உயிரை சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.  
 
குழந்தையின் முதல் பிறந்த நாள், உண்மையில், எல்லாப் பெற்றோருக்கும் மறக்க முடியாத நாள். குழந்தையோடு குழந்தையாக, பெற்றோரும் கற்று, வளர்ந்து வந்துள்ளனர். 'இப்படிப்பட்ட நாளை எப்படிக் கொண்டாடலாம்?' - என்பதற்கு நாங்கள் தரும் சில ஐடியாக்கள்..
 
1. பிடித்த விலங்கு..!
 
 
உங்கள் குழந்தைக்குப் பிடித்த விலங்கின் உருவத்திலேயே, பிறந்த நாளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதாவது பிறந்த நாளுக்கான கேக், சாக்லேட், பிஸ்கெட்டுகள், தோரணங்கள்,பொம்மைகள், உடைகள், உங்களின் ஆடைகள், விருந்தினரும் இந்த மாதிரியான ஆடையில் வரவேண்டும், என அனைத்தையும் குழந்தைக்குப் பிடித்த வகையில் அமையுங்கள்.
 
2. டிஸ்னி கொண்டாட்டம்
 
 
டிஸ்னி கார்ட்டூன்களில், குழந்தைக்குப் பிடித்த கார்ட்டூனை பிரதிபலிக்கும் வகையில் வீட்டின் தோற்றம் மற்றும் மேற்கூறிய அனைத்தையும் மாற்றி அமையுங்கள்.
 
3. கேலக்ஸி கொண்டாட்டம்
 
 
குழந்தைக்குப் பிடித்த கேலக்ஸி காட்சியை பிரதிபலிக்கும் வகையில் வீட்டின் தோற்றம் மற்றும் வீட்டிலுள்ள அனைத்தையும் மாற்றி அமையுங்கள். இவற்றோடு, அணிகலன்களை நிலா,சூரியன், நட்சத்திர வடிவில் அமைத்து, குழந்தையை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துங்கள்..
 
4. பிடித்த காலம்..
 
 
உங்கள் குழந்தைக்குப் பிடித்த காலத்தை, அதாவது, குளிர், வசந்த, இலையுதிர், கோடை காலக் காட்சிகளை பிரதிபலிக்கும் வகையில் வீட்டின் தோற்றம் மற்றும் காலத்திற்கேற்ற பொருட்கள் என அனைத்தையும் மாற்றி அமையுங்கள்; அல்லது வெளியில் செயற்கையாய் பனிக்காலம் / வேறு காலங்கள் அமைத்தும் கொண்டாடலாம்.
 
5. நிறம் மற்றும் ஐஸ்கிரீம் கொண்டாட்டம்...
 

 
குழந்தைக்குப் பிடித்த ஐஸ்கிரீம் மற்றும் நிறம் கொண்டு வீட்டின் தோற்றம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் மாற்றி அமையுங்கள்.
 
6. ராஜாங்க கொண்டாட்டம்..
 
 
குழந்தைக்குப் பிடித்த ராஜா-ராணி கதைகளை பிரதிபலிக்கும் வகையில் வீட்டின் தோற்றம் மற்றும் வீட்டிலுள்ள அனைத்தையும் மாற்றி அமையுங்கள். இவற்றோடு, அணிகலன்கள், கிரீடங்கள், உடைகள் என எல்லாவற்றையும் தயாரித்து, உங்கள் தங்கத்தை திக்குமுக்காடச் செய்யுங்கள்...!
Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon