Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்கள் குழந்தையின் பற்களை பாதுகாக்க ஆறு எளிய வழிமுறைகள்...

எந்த ஒரு விஷயத்தையும் பழக்கப்படுத்துவதாலே குழந்தைகள் மிகவும் கவனத்துடன் இருந்திடும். அவற்றுள் ஒன்று தான் பற்கள் பராமரிப்பு. பற்கள் என்பது பழக்கப்படுத்தும் முறையினால் மட்டுமே எதிர்க்காலத்தில் மிகவும் வலுவானதாக இருக்கும். பற்களின் இடுக்கில் ஒளிந்திருக்கும் கிருமி என்பது உங்கள் குழந்தையின் பற்களை மெல்ல அரித்து, சொத்தை பல் உண்டாகவும் வழிவகை செய்கிறது. அதனால், எளிய முறையில் உங்கள் குழந்தையின் பற்களை பாதுகாக்க இதோ ஆறு வழிமுறைகளை நாங்கள் தருகிறோம்.

குழந்தை பற்கள் முளைக்கும் முன்னே:

உங்கள் குழந்தைக்கு பற்கள் முளைக்கும் முன்னே வாயை சுத்தம் செய்துவிடுவது நல்லது. ஒவ்வொரு முறை குழந்தை சாப்பிட்ட பிறகும் நன்றாக வாயை கழுவிவிட்டு துடைக்க பழக்கப்படுத்துங்கள். இதனால், வாயின் இடுக்கில் இருக்கும் உணவு வெளியாகிறது. இல்லையேல், இதுவே கிருமியாக தங்கிவிடவும்கூடும்.

சரியான முறையில் கவனம் செலுத்துதல்:

உங்கள் குழந்தைக்கு பற்கள் முளைக்க தொடங்கிவிட்டால், போதிய கவனத்தை அதில் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. சில பெற்றோர்கள் நினைப்பது என்னவென்றால்... குழந்தைகளின் பற்கள் எப்படியும் மீண்டும் விழுந்து முளைப்பதுதானே எனும் சகஜ நிலையில் அதை எடுத்துக்கொள்வார்கள். ஆனால், முதலில் முளைக்கும் பல் தான், உறுதியான மற்ற பற்களுக்கு அஸ்திவாரமாக அமைகிறது. இந்த முதற் பல்லை கவனிக்காமல் விடுவதால் பற்குழிகள் அதன் பின்னர் விழ அதிக வாய்ப்பிருக்கிறது.

துவாரங்கள் தவிர்க்க:

உங்கள் குழந்தையின் பற்களில் ஏற்படும் துவாரத்தின் முதல் அறிகுறி என்ன தெரியுமா? அது தான் நிறமாற்றம் மற்றும் சிறு துளை உருவாகுதல். குழந்தை தூங்கும் போது வெகு நேரத்துக்கு வாயில் பால் பாட்டில் வைத்திருப்பதால் இந்த பிரச்சனை உண்டாகக்கூடும். உங்கள் குழந்தை வேண்டாமென்னும் செய்கையை கொடுத்தால், தயவுசெய்து வைத்துக்கொண்டு திணிக்க வேண்டாம். ஒரு சிலர் பால் பாட்டிலை அப்படியே குழந்தையின் வாயில் வைத்துவிட்டு தூங்கிவிடுவார்கள். இதனால், குழந்தையின் பற்களில் கிருமி உண்டாகக்கூடும்.

இரண்டு வயதில் டூத் பிரஷ் பழக்கம்:

உங்கள் குழந்தையின் பற்கள் முளைத்துவிட்டால், பல் துலக்க பழக்கப்படுத்துங்கள். ஃப்ளோரைடு பற்பசை (அரிசி போல் இருக்கக்கூடியது) கொண்டு ஆரம்ப நிலையில் பல் துலக்க பழக்கலாம்.

குழந்தையின் பல் துலக்கும் முறையை சரிப்பார்க்கவும்:

ஒரு சில நேரத்தில் அளவுக்கதிகமான பேஸ்டை எடுத்து பல் துலக்குவதாலும் பல் பிரச்சனை வரலாம். குழந்தைகளுக்கு எந்த வகையான முறையை கொண்டு பல் துலக்க வேண்டும். எவ்வளவு அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? என்பதை மருத்துவர் பரிசோதனை இன்றி நீங்களாக முடிவு செய்ய  வேண்டாம்.

பற்கள் பரிசோதனை:

அமெரிக்கன் பற்கள் பரிசோதனை கழகம், குழந்தையின் முதல் வயதிலே பற்களை பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கிறது. அதாவது குழந்தையின் முதல் பல் உருவானவுடன்...

இதனால், இந்த பழக்கம் தொடர்ந்து உங்களிடம் இருக்க, பல் பிரச்சனையை தடுக்க முடியும் எனவும் அக்கழகம் கூறுகிறது.

நண்பர்களே!
உங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா? கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க... 
Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon