Link copied!
Sign in / Sign up
0
Shares

உங்கள் குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் உண்டா?

குழந்தைகளுக்கு கண்ணில் தென்படும் பொருளை எடுத்து வாயில் வைப்பது ஒரு பொதுவான பழக்கம் தான். இந்த பழக்கத்திற்கு பெயர் தான் பிகாவாகும். ஒரு சில பெற்றோர்கள், தன் குழந்தை மண் தின்பதை நினைத்து கவலைப்படுவதுண்டு. உங்கள் குழந்தைக்கு மட்டுமே இந்த பழக்கம் இல்லை என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆம், சத்தற்ற பொருளை குழந்தைகள் சாப்பிடுவதற்கு பெயர் தான் பிகா எனப்படும்.

பிகா என்றால் என்ன?

உணவற்ற ஒன்றை, உங்கள் குழந்தை சாப்பிடுவதற்கு பெயர் தான் பிகா. பொதுவாக ஒரு வருடம் தாண்டிய குழந்தைக்கு இப்பழக்கம் வர, இதனால் குழந்தையின் வளர்ச்சியும் பாதிப்படையக்கூடும். உணவற்ற பொருளை உங்கள் குழந்தை உண்பதால் செரிமான பிரச்சனைகள் வர பெரிதும் வாய்ப்பிருக்கிறது.

எதனால் பிகா உண்டாகிறது?

ஒரு பொருளை பார்க்கும் உங்கள் குழந்தை ஈர்க்கப்படுவதாலே இந்த பிரச்சனை உருவாகிறது. பிகா என்பது தான் ஆட்டிஸத்தின் முதல் அறிகுறியும் கூட... மண் சாப்பிடும் உங்கள் குழந்தையை எச்சரித்தும் அவன் தொடர்ந்து சாப்பிட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

 
பிகாவினால் உண்டாகும் பக்கவிளைவுகள்:

1. உணவற்ற பொருளை உங்கள் குழந்தை சாப்பிட முயற்சி செய்ய, பல் பிரச்சனைகள், பற்களில் தெறிப்பு என பல பிரச்சனைகள் வரக்கூடும்.

2. ஒட்டுண்ணி அழற்சியினால் செரிமான பிரச்சனைகள் கூட உங்கள் குழந்தைக்கு ஏற்படலாம். இதனால் குழந்தையின் எடையும் குறையக்கூடும்.

3. பிகாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சத்து குறைவாக இருக்கக்கூடும். 

4. உடலில் நச்சு தன்மை சேர, உங்கள் குழந்தையின் உடலானது ஏற்றத்தாழ்வுடன் காணப்படக்கூடும்.

இந்த பிகாவிலிருந்து உங்கள் குழந்தையை காப்பாற்றுவது எப்படி?

1. அடிக்கடி உங்கள் குழந்தையின் எடையை பரிசோதிக்க வேண்டியது அவசியம். 

2. உங்கள் குழந்தை பேப்பர், மரம், ஐஸ், கண்ணாடி, பாறை, அழுக்கு முதலியவற்றை உண்கிறதா? என கவனித்தல் வேண்டும்.

எப்படி குணப்படுத்துவது?
குறைபாடுகளை போக்க வேண்டும்:

முதலில் உங்கள் குழந்தைக்கு தேவையான சத்துக்களை மருத்துவரின் பரிந்துரையுடன் தர வேண்டும்.

சோதனை மற்றும் சிகிச்சை:

1. பிகாவை தூண்டிய பொருளுக்கு ஏற்ற சோதனை செய்து, சிகிச்சையும் அதற்கு ஏற்ப தர வேண்டும். 

 2. மருத்துவ பரிசோதனைகளுக்கு இணங்க உணர்வு பூர்வமான சிகிச்சைகள் மூலம் பிகாவை மறக்க செய்யலாம்.

3. பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடனான உறவென்பது பிகாவை மறக்க செய்யக்கூடும்.

4. சிறந்த உணவின் மூலம் நேர்மறை எண்ணத்தை விதைத்தல்.

உங்கள் குழந்தைக்கு எது தேவை என்பதை, அவர்களுக்கு புரியும்படி எடுத்துக்கூற இதனால் இப்பழக்கம் மாறக்கூடும்.

பிகாவை போக்க வழிகள்:

1. பிகாவை போக்க நீங்கள் எடுக்க வேண்டிய ஆயுதம் அமைதி தான்.

2. மருந்து, மாத்திரையை விடவெல்லாம் மிகவும் பலன் தரக்கூடிய சிகிச்சை தான் இந்த அமைதி.

3. திறன்வாய்ந்த மனோதத்துவ சிகிச்சை மூலம், எதிர்க்காலத்தில் உங்கள் குழந்தை மண் மீது கை வைக்கப்படுவது தவிர்க்கப்படும்.

4. உங்கள் குழந்தை சாப்பிடும் உணவில் கவனம் என்பது இருத்தல் வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon