Link copied!
Sign in / Sign up
5
Shares

உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் அடிக்கும்போது காணப்படும் ஐந்து அறிகுறிகள்...

குழந்தைகள் மிகவும் விரைவாக நோய்களுக்கு ஆளாகின்ற அளவிற்கு மென்மையானவர்கள். உங்கள் குழந்தையின் வழக்கமான நடத்தையில் மாற்றத்தை நீங்கள் உணர்ந்தால், உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். உங்கள் குழந்தை சாப்பிட்டவுடன் அழுதாலோ அல்லது குறிப்பிட்ட விதமாக நடந்துகொண்டார்கள் எனில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

உங்கள் குழந்தை வறண்ட கன்னங்கள் மற்றும் தோல் வறட்சியுடன் இருந்தால், ஒரு தெர்மோமீட்டரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய வெப்பநிலையை சரிபார்க்கவும். வெப்பநிலை அதிகமாக இருந்தால், உங்கள் பிள்ளைக்கு சில மருந்துகளை கொடுக்க வேண்டும் அல்லது உடனடி உதவிக்காக மருத்துவரை அழைக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு எப்போது கூடுதல் கவனம் தேவைப்படும் என்று இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1. உடல் வெப்பநிலை 100.4 F டிகிரி மேல் இருக்கும்போது

உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலை 100.4 F டிகிரிக்கு கீழ் இருந்தால் அது சாதாரணமாகும். ஒருவேளை வெப்பநிலை 100.4 F அளவிற்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருந்தால் உங்கள் குழந்தைக்கு மருத்துவ உதவி உடனடியாக தேவை.

குழந்தையின் வெப்பநிலை நேரத்தை பொறுத்து மாறுபடலாம், காலை நேரத்தில் குறைவாகவும் மதிய பொழுதில் அதிகமாகவும் இருக்கும். தெர்மாமீட்டரில் 100.4 F என்று காட்டவில்லையெனில் குழந்தைக்கு காய்ச்சல் இல்லை என்று அர்த்தம்.

2. அசாதாரண நடத்தை

குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மற்ற நாட்கள் போல் அல்லாமல் கவலையாக காணப்படலாம். அவர்கள் மந்தமாக இருப்பதாகத் தோன்றலாம், விளையாடுவதில் ஆர்வம் காட்டாமலும், தூக்கமின்றியும், உணவு உண்ணாமலும் இருக்கலாம். இவை அனைத்தும் காய்ச்சலின் அடையாளங்களாக இருக்கின்றன.

3. வலிப்பு

உங்கள் குழந்தை அளவு அல்லது எடையில் ஒப்பிடுகையில் சிறியதாக இருந்தால், காய்ச்சல் வலிப்புத்தாக்கங்களைத் தூண்டும். இது சில நொடிகள் அல்லது சில நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்த வலிப்பு பெற்றோர்களுக்கும் குழந்தைக்கும் அச்சுறுத்தும் அனுபவமாக இருக்கலாம். ஆனால் அவை பொதுவாக குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பில்லை.

ஒருவேளை இந்த வலிப்பு சில நிமிடங்களுக்கு நீடிக்குமாயின் அவர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ உதவி தேவை. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க வழக்கமாக சோதனை செய்துகொள்வது நல்லது.

4. உடல் அறிகுறிகள்

குழந்தையின் உடலில் உள்ள பல்வேறு அறிகுறிகளும் உடல்நலத்தை பிரதிபலிக்கின்றன. இது காய்ச்சலுக்கு வழிவகுக்கும் மற்றும் இயல்பிலேயே தீவிரமாக இருக்கும். குழந்தைக்கு காது வலி, தொண்டை புண் அல்லது வயிற்று வலி ஆகியவை இருக்கலாம்.மேலும் வழக்கத்தை விட அதிக தாகமாக உணரலாம். இந்த அறிகுறிகள் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.

5. தொடர்ந்து வாந்தி எடுத்தல்

உங்கள் குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்தால், அவர்களுக்கு அதிக காய்ச்சல் இருக்கலாம். அவர்கள் சுவாசிக்கையில் ஏதாவது பிரச்சனையை எதிர்கொண்டார்கள் எனில், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது .

காய்ச்சல் நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் உடலின் செயலாகும். அது ஒரு கெட்ட காரியம் அல்ல. அதிகரித்த உடல் வெப்பநிலை காரணமாக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அறிகுறிகளை அடையாளம் கண்டு, சரியான மருந்தை கொடுத்து, உங்கள் குழந்தைக்கு போதுமான ஓய்வு அளித்தால் எல்லாம் சரியாகி விடும்!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon