உங்கள் குழந்தைகளின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள் இவை தான்...
நம் மூளையுடன் தொடர்புடையது தான் இதயம். நாம் என்ன சாப்பிட வேண்டும்? எப்போது தூங்க வேண்டும் என அனைத்தும் நம் இதயம் முடிவுசெய்ய, மூளையை ஏமாற்றும்போது மன உளைச்சலுடனும் நம் மனம் இருந்திடும். ஆனால், பகுத்தறிவு வளர, வளர இந்த பிரச்சனை என்பது குறைகிறது. குழந்தை பருவத்தில் இந்த பிரச்சனை என்பது பெற்றோரை நச்சரிக்காமல் ஒருபோதும் இருப்பதில்லை. தன் மனம் விரும்பிய பொருள் நல்லதா? கெட்டதா? என அவர்கள் மனம் பார்ப்பதில்லை. எடுத்த உடனே தாயிடம் உரிமையாக கேட்பார்கள். கிடைக்கவில்லையா? ஓ.......என அழத்தொடங்கி விடுவார்கள்.இதற்கு முடிவை கர்ப்ப காலத்திலேயே கர்ப்பிணி பெண்களால் தர இயலும். ஆம், கர்ப்பிணிகள் ஒருசில உணவை சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தையின் இதயமும் வலுவடைய தொடங்குகிறது.

எவற்றை சாப்பிட வேண்டும்?
கர்ப்பிணி பெண்கள் தன் கர்ப்ப காலத்தில் குழந்தைக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என தெரிந்துக்கொள்ளாமலே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வார்கள். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் உங்கள் குழந்தையின் இதயத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் எவை என்பதை நாம் பார்க்கலாம்.
1. முழு தானிய வகை:
மைதா மற்றும் பிரெட் வகைகளை தவிர்த்து முழு தானியத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தானிய உணவை தினமும் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சாப்பிட்டு வர, கருவில் இருக்கும் குழந்தையின் இதயம் வலுவடைகிறது.

2. கீரைகள்:
உங்களுடைய காலை உணவுடன் கீரை சேர்த்து கொள்ளலாம். கடுகு கீரையை இரவில் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் கீரை என்பதில் கவனம் வேண்டும். எல்லா கீரைகளும் எல்லா நேரங்களில் சாப்பிடுவது உடம்பில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

3. புரத ஆரோக்கியம்:
நீங்கள் ஒரு இறைச்சி பிரியராக இருப்பின்... சிக்கன், மீன் கொழுப்பு முதலியவற்றில் இருக்கும் புரதமானது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது. நீங்கள் தேர்வு செய்யும் இறைச்சியில் கவனம் இருத்தல் வேண்டும். எல்லாவித இறைச்சிகளும் கர்ப்பிணிகளுக்கு நன்மை தருமென சொல்ல முடியாது.

4. பாலால் ஆன பொருள்:
குறைந்த கொழுப்பு கொண்ட பால் அல்லது தயிரை எடுத்துக்கொள்வதன் மூலம் தேவையான கால்சியம் கிடைக்கிறது. பால் அல்லது தயிரை பதப்படுத்தி பயன்படுத்தினால் அது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

5. பருப்பு மற்றும் பீன்ஸ் வகைகள்:
நீங்கள் ஒரு சைவ பிரியராக இருப்பின், முந்திரி, பாதாம், பருப்பு வகைகளான பயறு மற்றும் கொண்டைக்கடலையும் சாப்பிடலாம்.

தெரிந்துக்கொள்ளுங்கள்...
குழந்தைகளின் இதயத்தை பலப்படுத்துவது என்பது ஆரோக்கியமான உணவு முறையை பொறுத்து மட்டும் அமைவதல்ல. சில தவறான உணவை தவிர்ப்பதாலும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடைய உடலின் கொழுப்பு, சோடியம் அளவை அவ்வப்போது சரிப்பார்க்க வேண்டியது அவசியம். அறிவியல் ரீதியாக, குழந்தையின் இதயமானது முறையான உடற்பயிற்சியை பொறுத்தும் அமைவதாக சொல்லப்படுகிறது. எதுவாக இருந்தாலும்.... மருத்துவரின் பரிந்துரை என்பதை மறந்துவிடாதீர்கள்.