Link copied!
Sign in / Sign up
7
Shares

குழந்தைகளின் சண்டையை இப்படிக்கூட நிறுத்தலாமா?

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், நீங்கள் பாக்கியசாலிகள். அதிலும் அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், நீங்கள் தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலியான தாய். அப்படி உங்கள் குழந்தைகள் ஒற்றுமையின்றி இருந்தால், உங்களை இந்த நிஜ உலகிற்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் குழந்தைகள் உங்கள் கனவு உலகத்தில் ஒற்றுமையாய் ஆடி, பாடி கொண்டிருந்திருக்கலாம், ஆனால் இங்கு அவர்கள் ஒருவரின் முடியை ஒருவர் பிடித்து அடித்துக்கொண்டு, கண்களில் கண்ணீரோடு இருப்பார்கள். அப்படி சண்டையிடும் குழந்தைகளை சமதானப்படுத்துவதற்கான 6 வழிகளை இங்கு பார்ப்போம்.

1 அவர்கள் புகார் செய்யும் போது கவனியுங்கள்

ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகள் ஒருவரை பற்றி ஒருவர் புகார் சொல்லும் போது, நீங்கள் அதை கவனிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அதை கவன குறைவாக விட்டுவிடுவதால் மிக பெரிய பிரச்சனைகள் கூட ஏற்படலாம். அவர்களின் கருத்துக்களை கவனியுங்கள், இருவரையும் ஒன்றாக அமர வைத்து பேசுங்கள். அது எவ்வளவு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தவறுகளை எடுத்துரையுங்கள். இருவரையும் ஒருவருக்கொருவர் சமாதானமாக போக செய்யுங்கள்.

2 ஒருவரின் பக்கமாக பேசாதீர்கள்

உங்கள் ஒரு குழந்தையின் பக்கம் நியாயம் இருந்தாலும், அவர்களின் பக்கமாக பேசாதீர்கள். அப்படி நீங்கள் ஒருவரின் பக்கமாக பேசினால், அது மற்றொருவரை மிகவும் பாதிக்கும். எனவே, நீங்கள் ஒருபோதும் அதை செய்ய கூடாது. நீங்கள் அவாக்களிடம் நீ செய்வது தவறு என்று கூறுவதற்கு பதில், மற்றொருவரின் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைத்து, அவர்களுக்கு சரி எது என்பதை புரிய வைக்க முயற்சிக்கலாம்.

3 வரம்புகளை நிர்ணையுங்கள்

சில நேரங்களில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு கொள்வது ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். இது அவர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சில நேரங்களில் அவர்கள் சண்டையிட்டு கொள்வது, உங்களது பொறுமையை சோதிக்கலாம். ஆனாலும் நீங்கள் அதை பொறுமையாக கையாள வேண்டும். நீங்கள் அவர்கள் எப்படி நடந்து கொள்வது சிறந்தது, எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்று கொடுங்கள். அவர்களின் ஒழுக்கமான வாழ்விற்கு வழிக்காட்டுங்கள். அவர்களின் சண்டையும் இதில் முற்று பெறும்.

4 அவர்களாகவே விவாதங்களை தீர்த்துக்கொள்ளட்டும்

அவர்களாக அவர்களுக்குள் விவாதித்துக்கொள்ளும் போது, நீங்கள் அதில் தலையிட கூடாது. அவர்களாகவே உங்களிடம் வரும் வரை காத்திருங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர்களாகவே சோர்வடைந்து விவாதத்தின் முடிவிற்கு வந்து, சமாதானம் அடைவார்கள். எனினும், விஷயம் பெரியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாராளமாக தலையிடலாம். குழந்தைகளிடம் எப்போதும் உங்கள் கவனம் இருக்க வேண்டும்.

5 அவர்களின் ஒற்றுமையை ஊக்குவியுங்கள்

உங்கள் குழந்தைகள் ஒற்றுமையாய் செயல்படும் படி செய்யுங்கள். இதனால் அவர்கள் எதிரிகளை போல் இல்லாமல், ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாய் இருக்க வழிவகுக்கும். எனவே, அவர்கள் விளையாட்டு அல்லது போட்டிகள் போன்ற குழு நடவடிக்கைகளில் ஈடுபடுகையில், மற்ற குழுவில் தங்கள் ஆற்றலை பிரதிபலிக்க, அவர்களது பந்தம் அவர்களை பலப்படுத்தும்.

6. அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளட்டும்

ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஏதும் செய்யும் போது, அவர்களின் சகோதரன் அல்லது சகோதரியை கொண்டு செய்ய முயற்சியுங்கள். உதாரணமாக, உங்கள் சிறிய குழந்தை எதாவது பொம்மையை தொலைத்திருந்தால், உங்கள் பெரிய குழந்தையும் சேர்த்து, அதை தேடி எடுத்து கொடுக்க சொல்லுங்கள். இது உங்கள் பெரிய குழந்தைக்கு ஒரு பொறுப்புணர்வைக் கொடுக்கும், அவர் / அவள் உடன்பிறந்தவர்களை அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.

குழந்தைகளுக்கு ஒற்றுமை உணர்வை ஊக்குவியுங்கள். அவர்களுக்கு அன்பின் மகத்துவத்தை எடுத்துரையுங்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும்படி செய்யுங்கள், அவர்களுள் விட்டு கொடுத்தால், பகிர்தல் போன்ற பண்புகளை ஏற்படுத்துங்கள். இதனால் அவர்களுள் ஒற்றுமை மேலோங்கும், உங்கள் மனக்கவலையும் குறையும். 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon