Link copied!
Sign in / Sign up
0
Shares

உங்கள் குழந்தை வளர்ந்தபின் நீங்கள் மிஸ் செய்யும் 5 விஷயங்கள்.!

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் தானாய் முடிவு எடுக்கும் வயது வரும் வரையில் அம்மா அப்பா என்று நம்மையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பர். நம்முடனே உண்ணுவது, உறங்குவது, விளையாடுவது என்பதெல்லாம் மாறி, குழந்தைகள் சற்று தனித்து தங்கள் வேலைகளை தாங்களாய் செய்ய ஆரம்பித்துவிடுவர். அப்படி உங்கள் குழந்தைகள் வளர்ந்த பின் நீங்கள் குழந்தையின் குழந்தைப்பருவம் குறித்து மிஸ் செய்யும் சில விஷயங்கள் குறித்து இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. உறக்கம்..

குழந்தைகள் பிறந்தது முதல் வளரும் பருவ காலங்களில் உங்களை அணைத்துக் கொண்டே உறங்கி பழகியவர்கள்; இன்று வளர்ந்தபின் தனி அறையில் தாய் தந்தையை விடுத்து உறங்க தொடங்குகின்றனர். தாயானவள் தன் குழந்தையை அணைத்துக் கொண்டு உறங்குவதை மிகவும் மிஸ் செய்கிறாள்.

2. முதல் விஷயங்கள்..

குழந்தை பிறந்த பின் முதன் முதலாக சிரித்தது, முதலில் குப்புற விழுந்தது, தவழ்ந்தது, பல் முளைத்தது, நடந்தது, பள்ளிக்கு அனுப்பியது, அப்போது அழுதது என எல்லாவித குழந்தையின் முதன்மையான விஷயங்களையும் குறித்து எண்ணி ஏங்கித்தவிப்பாள், அன்னை!

3. கைக்குள் கை!

எங்கு சென்றாலும், தாயின் கையை பிடித்துக்கொண்டு அல்லது தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டு, தாயையே சுற்றி சுற்றி வந்த குழந்தை, இப்பொழுது தனியே தன் செயல்களை தொடங்கிவிட்டது; இதுவும் அன்னை மிஸ் செய்யும் முக்கிய விஷயம் ஆகும்!

4. ஆர்வம்..

குழந்தைகள் எதை முதன்முதலாக பார்த்தாலும், எச்செய்தியைக் கேள்வியுற்றாலும் அது என்ன? இது என்ன? என்று கேள்வி மேல் கேள்வி கேட்பதெல்லாம் குறைந்துவிடும்; இது தாய் தந்தையர் எண்ணிப்பார்க்கும் ஒரு முக்கியமான விஷயம்..!

5. பிறந்த நாள்..!

குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, கேக் வெட்ட கற்றுக்கொடுத்து, அடுத்தடுத்த பிறந்த நாட்களில் பெற்றோர் அருகாமையில் இருந்து கொண்டாடிய குழந்தை, தற்போது சற்று வளர்ந்த பின், நண்பர்களுடன் தனியே பார்ட்டி கொண்டு கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இது பெற்றோர் எண்ணி, ஏங்கித்தவிக்கும் விஷயமாகும்..!

இது போன்ற விஷயங்களை குறித்து எண்ணிப்பார்ப்பது, குழந்தை எப்படி அழகாய் வளர்ந்தது எனும் அருமையான நினைவுகளை உங்களுக்குள் மீண்டும் மலரச் செய்யும்.! மேலும் குழந்தைகள் பிறந்தால், அவர்கள் வளர்ந்து நம்மை விட்டு ஒரு நாள் பிரிந்து தான் போவார்கள் என்ற உண்மையை பெற்றோர்கள் உணர்தல் வேண்டும்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon