Link copied!
Sign in / Sign up
190
Shares

உங்கள் குழந்தை கொழுகொழுனு ஆரோக்கியமாக இருக்க இந்த 7 உணவை கொடுங்க


குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு பிறகு உணவு கொடுக்க தீர்மானிப்போம். அப்போ எந்த மாதிரியான உணவு பொருட்கள் கொடுக்கனுன்னு தீர்மானிக்கறது ரொம்பவே கடினமான ஒன்று. உங்க குழந்தைகளுக்கு நீராகாரங்களை மட்டுமே கொடுத்திருப்பீங்க, அவங்களும் அதை தான் விரும்புவாங்க. உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகள் மாதிரி நல்ல கொழுகொழுனு ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்போ இந்த 7 உணவை கொடுங்க.
1 தாய் பால்

குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கறது ரொம்ப அவசியம். தாய்ப்பாலில் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான அனைத்து சத்துக்களும் நிறைத்திருக்கு. குழந்தையோட வாழ்நாளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் இருக்கு. எனவே தான் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு பருப்பு வகைகள், பாதாம் பருப்பு மற்றும் குங்குமப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பின் நீங்க பாதி திரவ உணவு பொருள்களையே அல்லது திட உணவு பொருள்களையோ தாய்ப்பாலோட சேர்த்து கொடுக்கலாம்.

2 வாழைப்பழம்

வாழைப்பழத்துல பொட்டாசியம், ஹார்போஹைட்ரெட் மற்றும் நூற்றுக்கும் அதிகமான கலோரிகள் நிறைச்சுருக்கு. இதை உங்கள் குழந்தையும் விரும்புவதோட தேவையான சத்துக்களும் கிடைக்கிறது. வாழைப்பழ கேக்குகள், வாழைப்பழ மில்க்ஷேக் மற்றும் உங்கள் குழந்தை எந்த மாதிரி விரும்புகிறதோ அப்படி கொடுக்கலாம்.

3 நெய்

உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் முக்கிய பொருள். இதில் கொழுப்பு சத்துக்கள் மற்றும் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. கடைகளில் கிடைக்கும் நெய் சுகாதாரமானதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.  வீட்டில் தயாரித்த நெய்யாக இருந்தால் மிகவும் நல்லது.

4 தயிர்

தயிரில் நிறைந்திருக்கும் அதிகப்படியான கால்சியம், கொழுப்பு சத்துக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உங்கள் குழந்தைக்கு தேவையானவற்றை கொடுக்கிறது. இது புளிக்க வைக்கப்பட்ட பொருள் என்பதால் மருத்துவரின் பரிந்துரைக்கு பின் இவற்றை சேர்த்து கொள்வது நல்லது. இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கை சரி செய்கிறது.

5 பருப்புகள்

பருப்பு வகைகளில் நிறைய புரதங்கள், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. பருக்களை தயிருடன் கலந்து கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் அது சத்துக்களை குறைக்க கூடும். பருப்புகளை இட்டிலியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். காய்கறிகளுடன் செய்தும் கொடுக்கலாம்.

6 உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகளில் பச்சையம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரெட் நிறைந்த உணவு பொருள். இதை வேகவைத்து எளிமையாக மசித்து கொடுக்கலாம் மற்றும் இது எளிதில் செரிக்கக்கூடியது. உருளைக்கிழங்கை எண்ணெய் பொரித்தெடுப்பதால் அதன் சத்துக்கள் குறையலாம். எனவே அதை தவிர்க்கவும்.

7 கேழ்வரகு

இது காலப்போக்கில் மறக்கப்பட்ட தானியங்களில் ஒன்று. இதிலே இரும்பு சத்து, புரத சத்து, நார்ச்சத்து மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது.  இதை லட்டு, தோசை மற்றும் ரொட்டிகளாக கூட செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கான உணவுப்பொருள் என்று விளம்பரப்படுத்தப்படும் பல சக்கையை குழந்தைக்கு ஊட்டுவதை விட, எளிதாக கிடைக்க கூடிய சத்தான உணவு பொருள்களை குழந்தைக்கு கொடுப்போம். நம்மால் முடிந்தவற்றை கடைகளில் வாங்காமல் நாமே உருவாக்க முயன்றால் நன்மை பயக்கும். நல்லதையே கொடுத்து குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க செய்வோம்!

Click here for the best in baby advice
What do you think?
50%
Wow!
50%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon