Link copied!
Sign in / Sign up
37
Shares

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா?

இன்றைய கால உணவு முறைகளால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி குன்றி காணப்படுகின்றனர்; குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டிருந்தால், நோய்த்தொற்றுகளால் எளிதில் அவர்களை தாக்க இயலும். அதாவது குழந்தைகள் எளிதில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் அசௌகரியங்களை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. ஆகவே, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து இப்பதிப்பில் படித்தறிந்து, மற்ற அன்னைகளுக்கு உதவு பதிப்பை பரப்புங்கள்..!

கீரை வகைகள் 

வளரும் குழந்தைகளுக்கு தினசரி அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கீரை அளிக்க வேண்டும்; இதில் உள்ள இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தவிர்க்கும்.

காய்கறிகள் 

உங்கள் குழந்தைகளின் தட்டில், கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்; இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன. 

தயிர் 

தயிரில் உள்ள ஆன்டி பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களை தடுத்து, குழந்தைகளின் குடலை சுத்தமாக்கி, குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்; குழந்தைகளுக்கு மோர் கொடுப்பதும் நல்லதே!

பழ வகைகள் 
 

வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாகும் தொற்று நோய்களைத் தடுக்கின்றன.

நட்ஸ்

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தி சீராக பெருகும்; இவற்றில் அதிகளவில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை அனைத்தையும் நெய்யில் வறுத்துப் பொடியாக்கி, உருண்டைகளாகச் செய்து அல்லது பாலில் கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட அளிக்கலாம்.

தானிய வகைகள் 

கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானிய வகைகளை ஒன்றாய் சேர்த்து, பொடிசெய்து, கஞ்சி அல்லது ரொட்டியாக இல்லையேல் தோசையாக வார்த்தோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்; இவற்றிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஜிங்க் உடலை நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும்.

பூண்டு 

உடலுக்குக் கெடுதல் செய்யும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்டது பூண்டு; இதிலுள்ள Allicin எனும் பொருள், நோய்தொற்றுகளால், உண்டாகக்கூடிய நோய்களைத் தடுக்கும். மேலும் காய்ச்சல், சளி அண்டாமல் பார்த்துக்கொண்டு, இரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவி காக்கும். தினசரி குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் 2/4 பல் பூண்டு இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள்.

மஞ்சள்தூள் 

மஞ்சள்தூளில் ஆன்டிபயாட்டிக்ஸ், ஆன்டி வைரஸ் இருப்பதால் நோய் எதிர்பு சக்தி அதிரிக்க, இது பெரிதும் உதவும்; சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற நோய்கள் குழந்தைகளை அண்டாமல் தடுக்கும். மேலும், இரத்தத்தை சுத்தம் செய்ய உதவ வல்லது மஞ்சள். குழந்தைகளுக்கு பாலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொடுத்தால், நன்றாக உறங்குவார்கள். 

மீன் 

குழந்தைகளின் உணவில் அடிக்கடி மீன் சேர்ப்பது நல்லது; புரோட்டீன் அதிகமுள்ள மீனில், 'ஒமேகா 3' என்ற அமிலம் உள்ளது; இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க பெரிதும் உதவுவதுடன், கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

முட்டை 

வளரும் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய உணவு, முட்டை. இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால் திசுக்களை சீரமைக்கவும், உடல் உறுப்புகள் வளரவும் உதவும்; வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon