Link copied!
Sign in / Sign up
40
Shares

உங்கள் காதலை அதிகரிக்கச் செய்யும் 10 விஷயங்கள்..!

திருமணமான தம்பதியர் குழந்தை பிறக்கும் வரை காதலில் திளைத்தவர்கள்; குழந்தை பிறந்தவுடன் தம்பதியரிலிருந்து, பெற்றோராய் பதவி உயர்வு கிடைத்தவுடன் பொறுப்புக் கடலில் குழந்தையோடு பயணிக்கத் தொடங்குவதால், தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்த தவறுகின்றனர். தம்பதியரின் இந்த காதல் எப்பொழுதும் ஒரே மாதிரியாக, மாற்றமின்றி விளங்க தம்பதியர் பின்பற்ற சில விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் படித்து காதலை அதிகரிக்கலாம் வாருங்கள், நண்பர்களே..!  

1. இணைந்து சமைத்தல்..!

தினமும் உங்களுக்கு எத்துணை வேலை இருந்தாலும், நீங்களும் உங்கள் துணையும் இணைந்து சமைக்க முயற்சி செய்யுங்கள்; சமைக்க தெரியவில்லை எனினும் சமையலில் உதவுங்கள். இவ்வாறு இணைந்து சமைக்கையில் நீங்கள் இருவரும் பேசிக்கொள்ள அதிகம் நேரம் கிடைக்கும், நீங்கள் காதல் மொழிகளை துணையுடன் பகிர்ந்து கொண்டே சமைக்கலாம்..!

2. செய்தி(Texting)..!

நீங்கள் வேலைக்கு சென்று விட்டால் அல்லது வெளியில் உங்கள் துணையை விடுத்து சென்றால், உங்கள் துணைக்கு அடிக்கடி அலைபேசியில் செய்தி (Texting) அனுப்பி இருவரும் அருகில் இருப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்திக் கொண்டு, உங்களுக்குள் இருக்கும் காதலினை வளர்க்க முயலுங்கள்..

3. சினிமா..

இருவரும் இணைந்து வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டிலோ அல்லது வெளியில் சென்றோ படம் பார்த்து மகிழ்ந்து, உங்கள் துணையுடன் நேரம் செலவிடுங்கள்..! இது உங்கள் காதலினை அதிகரிக்க உதவும்.

4. டேட்டிங்..

தம்பதியர் இருவரும் இரவில், வெளியில் சென்று தனியே நேரம் செலவிட்டு, இருவரும் தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து, உணவு உண்டு காதலை வளர்க்கலாம்..

5. மசாஜ்..!

விடுமுறை நாட்களில் அல்லது நீங்கள் விரும்பும் நாட்களில் உங்கள் துணையினை உங்களுக்கு மசாஜ் செய்யுமாறு கூறி, மசாஜ் செய்து கொள்ளுங்கள்; இது உங்களுக்கு இடையே இருக்கும் உணர்ச்சியை கிளர்ச்சியடையச் செய்யும்.

6. நடைபயணம்..!

தினமும் உங்கள் துணையுடன் ஒரு மணி நேர கால அளவிற்கு, உங்கள் மனதின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டே நடைபயணம் மேற்கொள்ளுங்கள். இது உங்களிடையே இருக்கும் பிணைப்பினை அதிகப்படுத்தும்.

7. விருப்பம்..

உங்கள் துணையின் விருப்பங்களை அறிந்து, அதற்கு ஏற்றவாறு சமையல் செய்து அசத்துங்கள்; அவரின் மீது நீங்கள் கொண்டுள்ள காதலை புரிய வையுங்கள். இருவரும் உங்கள் விருப்பங்களை பகிர்ந்து, ஒருவருக்கொருவர் பரிசளித்து அல்லது துணைக்கு பிடித்தமானதை செய்து துணையை மகிழச் செய்யுங்கள்.

8. உடற்பயிற்சி..

தம்பதியர் இருவரும் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி, இருவரும் தனித்து நேரம் செலவிட வழிவகை செய்யும்.

9. விளையாட்டு..

உங்கள் துணையுடன் இணைந்து விளையாடுங்கள் அல்லது விளையாட்டினை தொலைக்காட்சியிலாவது துணையுடன் கண்டு இருவரும் அதைக்குறித்து விவாதியுங்கள்; உங்கள் கருத்துக்களை பகிர்ந்து, காதலை வளருங்கள்..

10. வாரக்கடைசி..

தம்பதியர் இருவரும் வார விடுமுறைகளில் வெளியே சென்று நேரம் செலவிடுங்கள்; புது இடங்களுக்கு பயணம் செய்து, துணையுடன் பல இடங்களை சுற்றி, மகிழ்ந்து பரவசமடையுங்கள்..

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon