Link copied!
Sign in / Sign up
8
Shares

உங்கள் கணவருக்கான 5 சிறந்த திருமண நாள் பரிசுகள்..!

திருமண நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகச்சிறந்த, மறக்க முடியாத நாளாக விளங்குகிறது. சில கணவன்மார்களுக்கு அல்ல பெரும்பாலான கணவர்களுக்கு இது பயம் கலந்த அன்பு தரக்கூடிய நாளாக விளங்குகிறது; ஏனெனில் கணவர்கள் இந்த திருமண நாளை மட்டும் எப்படியாவது மறந்துவிடுவர்; மறந்துவிட்டு, மனைவிடம் அர்ச்சனைகளையும் வாங்கிக் கொள்வர். 

திருமண நாள் என்பது ஓராண்டின் பூர்த்தி மட்டுமல்ல, அன்பின் வெளிப்பாடு, எதிர்காலத்தில் பொழிய போகிற அன்பு மழையின் அடையாளம். இத்தகு சிறந்த நாளில், ஒவ்வொரு மனைவியரும் தங்கள் கணவருக்கு தர விரும்பும் பரிசு குறித்து மிகவும் குழம்பிப்போவர். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவவே இந்த பதிப்பு..! தவறாமல் படித்து பகிருங்கள்..!

1. கைக்கடிகாரம்..!

பரிசுகளில் சிறந்ததும், பயன்படுத்த எளியதுமான கைக்கடிகாரத்தை நீங்கள் பரிசளிக்கலாம்; இதன் மூலம் உங்கள் நினைவு ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணித்துளியும் உங்கள் கணவருடனேயே இருக்குமாறு செய்யலாம். கணவன்-மனைவியருக்கான ஜோடி கைக்கடிகாரத்தையும் வாங்கிப் பரிசளித்து, இருவரும் அணிந்து மகிழலாம்..!!

2. மோதிரங்கள்..

நாம் திருமணத்தின் போது, நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, மோதிரம் அணிவது இந்த புது பந்தமும் சொந்தமும் இதயத்துடன் இணைய வேண்டும் என்பதால் தான், மோதிர விரலில் மோதிரம் அணிகிறோம்..! அவ்வழியில், உங்களை நினைவூட்டும் வகையில், அழகிய மோதிரத்தைப் பரிசளிக்கலாம்..

3. பேனாக்கள்..

பேனா என்பது குழந்தைகளுக்கானது/சிறுவ,சிறுமியர்களுக்கானது/பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கானது அல்ல. பேனா மனித குலத்திற்கானது. இதன் தேவை நமக்கு எத்துணை வயதாயினும் பேனாவின் தேவை இருந்து கொண்டே இருக்கும். ஆகையால், உங்கள் கணவருக்கு, அழகிய பேனா ஒன்றினை பரிசளித்து மகிழச் செய்யலாம்.

4. புகைப்பட ப்ரேம்கள்..!

“புகைப்படங்கள் ஆயிரம் வார்த்தைகளுக்கு இணையானவை.” உங்களின் அழகிய நினைவுகளே புகைப்படங்களாக மாறியிருக்கும். அந்த நினைவுகளின் ஆதாரத்தை பத்திரப்படுத்தி, பார்ப்போருக்கு பாத்திரப்படுத்த, புகைப்படங்களை அழகிய ப்ரேம்களுக்குள் வைத்து பரிசளிக்கலாம். இப்ப்ரேம்களை வீட்டு சுவரிலோ, படுக்கையறை மேசையிலோ வைத்து அழகு பார்த்து,நினைவுகளை மலரச் செய்யலாம்…

5. டைரி..!!

நம்மில் பல பேருக்கு தினம் நடக்கும் அல்லது மனதை மகிழ்வித்த, பாதித்த சம்பவங்களை டைரியில் எழுதும் பழக்கமிருக்கும். உங்கள் கணவருக்கும் இவ்வித பழக்கங்கள் இருந்தால் அவருக்கு, அவர் விரும்பி, தனித்து நேரம் செலவிட்டு எழுதும் டைரியைப் பரிசளிக்கலாம். அதில் ஒவ்வொரு முறை எழுதும் போதும், அதை எடுக்கும் போதும், படிக்கும் போதும் உங்களின் நினைவு அவரை சூழும்.

உங்கள் கணவரிடம் I LOVE YOU என்று வெறும் வார்த்தைகளால் கூறாமல், சிறு பரிசுடன் கூறி, திருமண நாளை தித்திப்பு தரும் நாளாக மாற்றுங்கள்..!! பதிப்பு பிடித்தால், பகிருங்கள்…!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon