Link copied!
Sign in / Sign up
11
Shares

உங்கள் கணவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் 6 விஷயங்கள்

திருமணம் எனும் பந்தத்தில் தம்பதியாக இணைந்திருக்கும் உங்கள் வாழ்வில் ஒருவர் மற்றொருவரின் மனதை கவர முயற்சித்து கொண்டிருப்பீர்கள். சிலர் வாழ்வின் பாதியை கடந்திருந்தாலும், மனதளவில் ஈர்க்கப்பட்டார்களா என்பது சந்தேகத்திற்கு உள்ளாகிறது. பெரும்பாலும் கணவர்கள் அவர்களை பற்றிய சாதரண விஷயங்களை மனைவிகள் அறிந்திருப்பதை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் அவற்றை அறிந்திருந்தால், அவை உங்கள் கணவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி உங்கள்  உறவை பலப்படுத்தும். 

1 பாராட்டு

பொதுவாக ஆண்கள் தன்னை தவிர யாராலும் செய்ய முடியாதபடி வேலை செய்திருப்பதாக உணர்வார்கள். அனைவரும் பாராட்டினாலும், மனைவியின் பாராட்டு அவர்களை மகிழ்விக்கும். நீங்கள் மனைவியாக அவரின் கடின உழைப்பையும், முயற்சியையும் பார்த்து கொண்டிருந்திருப்பீர்கள். அவருக்கு அலுவலகத்தில் விருது கிடைக்கும் போது, அவருக்கென சிறப்பு உணவுகள் தயாரித்து பாராட்டுங்கள். இது உங்களவரை மிகவும் ஆனந்தப்பட செய்யும்.

2 நண்பர்கள் / உறவினர்கள் முன் பாராட்டுதல்

நண்பர்கள் அல்லது உறவினருடன் விருந்துக்கு செல்லும் போது, உங்கள் அன்பிற்குரிய கணவரின் நற்செயல்களை மற்றவரின் முன் பாராட்டுங்கள். அதற்காக அளவிற்கதிகமாக மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டினால், தற்பெருமை பேசுவதாகி விட கூடும்.

3 நம்பிக்கை

நம்பிக்கையே வாழ்வின் பலம் என்று சொல்லலாம். பெரும்பாலான ஆண்களின் எதிர்பார்ப்பாக இருப்பது மனைவி அவர்களை முழுமையாக நம்ப வேண்டும் என்பதே. நம்பிக்கை குறைந்து சந்தேகம் வந்தால், உங்கள் வாழ்வே நரகமாகி விடும். உங்கள் கணவரின் மீது நம்பிக்கை வையுங்கள்.

4 இதயத்திற்கான வழியை அறியுங்கள்

அனைவருக்கும் இதற்கான வழி தெரியும். அதன் வழி வயிற்றில் இருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. மனத்திற்கான வழியும், உடல் வழியாகவும் என இரண்டிற்கும் இது பொருந்தும். நீங்கள் கொடுக்கும் உணவு கணவரின் மனதையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்க வேண்டும். இதுவே, அவரின் இதயத்திற்கான வழி.

5 அதிகம் பேசுங்கள்

கணவர்கள் அனைவருக்கும் அதிகமாக அனைத்து விசயங்களை பற்றியும் பேசும் படியான ஒருவர் வேண்டும் என்பதை உணர்வார்கள். சில வதந்திகள் மற்றும் சில அர்த்தமுள்ள அரட்டைகளுடன் தயாராக இருங்கள். சில நேரங்களில் உங்கள் காதல் உரையாடல்களை துவங்குங்கள். எப்போதும் உங்கள் கணவருக்கு பிடிக்கும் படியான விஷயங்களை பற்றி அதிகம் பேசுங்கள்.

6 வார்த்தைகள் இல்லாமல்

சில கணவர்கள் வார்த்தைகள் இல்லாமல் சைகையாக பேசுவதை பெரும்பாலும் மனைவிகள் புரிந்து கொள்வதில்லை என நினைக்கிறார்கள். முடிந்தவரை அவற்றை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

உறவுகள் என்பது முயற்சி செய்து பெறுவதில்லை. அவற்றை நாம் செய்யும் அன்பான செயல்களால் எளிதாக பெற முடியும்.

 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link -ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon