Link copied!
Sign in / Sign up
16
Shares

உங்கள் கணவர் சிறந்த தந்தை என நிரூபித்த 6 விஷயங்கள்...

இதை எதிர்கொள்வோம். உங்கள் கணவர் உங்களின் அன்பை பெறுவதற்கு ஒரு சாமர்த்தியமான வழி வைத்திருக்கிறார். இதில் வேடிக்கையான விஷயம், அவர் எப்போதும் வேண்டுமென்றே அதை செய்ய முடியாது. அவர் அவ்வளவுதான். சிலசமயம் அவர்களை ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான் என்று நம்பாததுபோல் தலையை ஆட்டுவீர்கள். ஆனால் மீண்டும் ஒருசமயம் உங்கள் கணவர் உண்மையாக உங்களை ஆச்சரியப்படுத்தி உங்கள் அன்பை பெறுவார். 

அவர் எப்பொழுதும் உபயோகமில்லவர் அல்ல. அவரை நேசிக்க பல காரணங்கள் இருக்கின்றன.

1. நடுஇரவில் குழந்தை அழுதால் அவர்தான் முதலில் எழுவார்

அதிகாலை 3 மணிக்கு உங்கள் குழந்தை தொடர்ச்சியாக அழ தொடங்கும். உங்கள் கணவர் குழந்தையை பார்த்துக்கொள்வார் என்பதே அந்த சமயத்தில் ஆறுதலாகும். உங்களுக்கு முன் உங்கள் கணவர் எழுந்து குழந்தையை பார்த்துக்கொண்டால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் நீங்கள் நல்ல துணையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.

2. டயப்பர் மாற்ற தயங்குவதில்லை

டயப்பர் மாற்ற நீங்கள் சொல்லும்போது அவர் எப்பொழுதும் முடியாது என்று சொல்லமாட்டார். குழந்தையை பார்த்துக்கொள்வது பெற்றோர் இருவரின் கடமை என்று அவர் புரிந்திருக்கிறார். பெரும்பாலான தந்தைகள் முணுமுணுத்துக்கொண்டே செய்தாலும் அவர்கள் அதை கண்டிப்பாக செய்வார்கள்.

 

3. அன்பானவர், உறுதியானவர்

குழந்தைகள் அவரை நேசிக்கிறார்கள் ஏனெனில் அவர் எப்பொழுதும் குழந்தைகள் மீதான அன்பை வெளிப்படுத்த தயங்கியதில்லை, அவர்கள் அவரை மதிக்கிறார்கள், ஏனென்றால் அவர் குழந்தைகள் செய்ய அனுமதிக்கும் விஷயங்களில் நியாயமானவர். இந்த இரு பண்புகளின் ஆரோக்கியமான, சீரான கலவை மிகவும் முக்கியம். உங்கள் கணவர் புரிந்துகொள்வது மட்டும் போதாது என்பதை அறிந்திருந்தால், அது நீங்கள் பெருமைப்படக் கூடிய ஒரு பண்பாகும்.

4. குழந்தைகளை சிரிக்க வைப்பவர்

அவர் குழந்தைகளுடன் சிறந்தவர். குழந்தைகள் எவ்வளவு சோகமான மனநிலையில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்க தவறமாட்டார்கள். அவர்களுடன் விளையாடும்போது அவரின் நகைச்சுவை உணர்வை குழந்தைகள் அறிவார்கள். எப்பொழுதும் குழந்தைகளுடன் அவர் சத்தம் போட்டு சிரிப்பதை நீங்கள் கேட்கலாம். இதை பார்க்கும்போது அவர் மீதான உங்கள் அன்பு அதிகரித்து கொண்டேயிருக்கும், நீங்கள் இதில் உதவ இயலாது ஆனால் அவர் மேல் சிறிது பொறாமைகூட வரலாம்.

 

5. படுக்கையில் கட்டிபிடித்தல்

உங்கள் குழந்தையை தினமும் கட்டியணைத்து தூங்க அவர் இருப்பார். பெரும்பாலானோர் இந்த சாதாரண செயலை செய்வதில்லை. ஆனால் இது அவர்களுக்கு விரைவில் தூக்கம் வர உதவுவதோடு பாதுகாப்பாகவும் உணர செய்யும்.

6. இரவு உணவுக்கு சரியாக வருதல்

இரவு உணவை எப்பொழுதும் அவர் தவறவிடமாட்டார். ஏனெனில் நாள்முழுவதும் வீட்டில் இருக்க முடியாது என்பதை அவர் அறிந்திருக்கிறார், அதனால்தான் அவர் இரவு உணவை தவறவிடுவதில்லை. உங்களுடனும் மற்றும் குழந்தைகளுடனும் இருக்கும் அற்புதமானதருணங்களை அவர் இழக்க விரும்பவில்லை.

இதில் குறைந்தது மூன்றாவது உங்கள் கணவர் செய்வாராயின் நீங்கள் கண்டிப்பாக பெருமைப்பட வேண்டும் அவர் சிறந்த கணவராக மட்டுமின்றி சிறந்த தந்தையாகவும் இருக்கிறார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon