Link copied!
Sign in / Sign up
3
Shares

உங்கள் கணவர், சிறந்த அப்பா என்பதைக் கூறும் 10 விஷயங்கள்..!

குழந்தை வளர்ப்பு என்பது தாயும் தந்தையும் சேர்ந்து ஒரு பெற்றோராய் ஈடுபட்டு, செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்..! தாய் மட்டுமே இரவு பகலும் குழந்தையை பார்த்து பார்த்து வளர்த்து, தந்தை சம்பாதிப்பதை மட்டுமே ஒரு மிகப்பெரிய வேலையாக பார்த்துக்கொண்டிருந்தால் அது நன்றாகவா இருக்கும்..! இல்லை குழந்தை வளர்ப்பு என்பதில் தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கும் சரிசமமாக இருக்க வேண்டும்..! பெண்களே! உங்கள் கணவர்கள் குழந்தை வளர்ப்பில் சிறந்த தந்தையாக தான் உள்ளார்கள் என்பதை உணர்த்தும் சில விஷயங்கள் குறித்து இப்பதிப்பில் பார்க்கலாம்..!

1. நேரம்..

உங்கள் கணவர் தனது நேரத்தை உங்களுடனும் குழந்தைகளுடனும் செலவிட ஆசை கொள்ள வேண்டும்..! அவ்வாறு உங்கள் கணவர் தனது நேரத்தை குழந்தைகளுடன் செலவிட்டு, அவர்களை புரிந்து கொண்டு, அவர்களை வாழ்க்கைப்பாதையில் வழிநடத்தி செல்கிறார் எனில் அவர் ஒரு சிறந்த தந்தையே!

2. ஊக்கம்..

குழந்தைகள் செய்யும் நல்ல செயல்கள் எதுவாயினும் அவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களை முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும்..!

3. சேஷ்டை..

குழந்தைகள் பால்ய பருவத்தில் சேஷ்டைகள் செய்வது இயல்பே! ஆனால், அது குழந்தைக்கோ, உற்றாருக்கோ அல்லது குழந்தையின் மற்ற நண்பர்களுக்கோ தீங்கு விளைவித்தால் அதனை பெற்றோரான தங்கள் கண்டித்து திருத்த வேண்டும்..! குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு அன்பும் அக்கறையும், ஊக்கமும் தேவையோ அதே அளவு கண்டிப்பும் தேவை..!

4. தோளோடு தோளாக..!

குழந்தையின் தேவை எதுவாயிருந்தாலும், குழந்தைக்கு படிப்பிலோ, விளையாட்டிலோ என எந்த துறையில் உதவியோ ஊக்கமோ தேவைப்பட்டால், அச்சமயங்களில் குழந்தைக்கு உற்ற துணையாக பெற்றோர் இருத்தல் வேண்டும்..!

5. தனிப்பட்ட நேரம்..

உலகில் ஒவ்வொருவருக்கும் தங்களது தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது; அப்படி இருக்கையில் நீங்கள் 24/7 என குழந்தையுடனேயே இருக்க முடியாது, அதேபோல் குழந்தையும் எந்நேரமும் உங்களுடன் இருக்க முடியாது. ஆகையால் உங்கள் வேலைகளை செய்ய வேண்டிய நேரங்களில் செய்துமுடித்து விட்டு, குடும்பத்திற்கென சிறிது நேரம் ஒதுக்கி குடும்பமாக அந்நேரங்களில் இருந்து, பேசிக் களித்து மகிழுங்கள்..!

6. தவறில்லை..

உங்கள் தோழியருடன் பேசிக்கொள்கையில் 'நான் என் குழந்தைக்கு இப்படி செய்தேன்; அப்படி செய்தேன்' என மற்றோர் கூறுகையில் நீங்கள் குழந்தையை பார்த்துக் கொள்ளும் முறை தவறோ என்று எண்ணம் கொள்ள வேண்டாம்; ஒவ்வொருவரின் வீட்டு சூழ்நிலையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆகையால், உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதை செய்து உங்கள் வாழ்விலும் குழந்தையின் வளர்ச்சியிலும் ஏற்றத்தைக் கொண்டு வர முயலுங்கள்..!

7. ஒன்றாகாது..

ஒரு ஆண் குழந்தையை வளர்க்கும் விதமும் பெண் குழந்தையை வளர்க்கும் விதமும் வேறுபாடும்..! அன்னை செய்தது போல் தந்தையால் ஒரு அளவு மட்டுமே செய்ய இயலும்; அதேபோல் தந்தை செய்யும் அணைத்து விஷயங்களையும் தாயால் செய்வது என்பது இயலாது..! ஆகையால் குழந்தை தாய் மற்றும் தந்தையை ஒப்பிட்டு குறை கூற முயன்றால், அதற்கு பக்குவமாக ஒரு பெற்றோராக இருந்து புரிய வையுங்கள்..!

8. கற்க விடுங்கள்..

குழந்தைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நீங்களே செய்ய வேண்டும் என எண்ணி, குழந்தையை முழு சோம்பேறி ஆக்கி விடாதீர்கள்..! குழந்தையிடம் நீங்கள் உதவி கேட்டு வேலை வாங்குவது தவறானது என்று எண்ணாதீர்கள்; குழந்தையை அதன் சிறு சிறு வேலைகளை செய்ய விடுங்கள் மற்றும் குழந்தையிடம் சிறு சிறு உதவியைக் கேளுங்கள்..!

9. பசித்துப் புசி..

குழந்தை வாய் திறந்து பசிக்கிறது என்று சொல்லும் முன்னரே அன்னை சாப்பாடு ஊட்டிவிடுவார், ஊட்டிக்கொண்டே இருப்பார். தந்தையும் இதே போல் ஊட்டிக்கொண்டே இருந்தால் குழந்தையின் நிலை என்னாவது? ஆகையால் தாயோ தந்தையோ குழந்தைக்கு உணவளிக்க வேண்டிய சரியான நேரத்தில், அதற்கு உணவினை அளிக்க வேண்டும்; மேலும் தேவையான அளவு உணவினை அளிக்க வேண்டும்..!

10. இல்லை என்றும் மறுக்கலாம்..

குழந்தை எதைக் கைக்காட்டி கேட்டாலும் அதை வாங்கி கொடுத்துவிட்டு மறுவேலை பார்ப்பதைத் தவிர்த்து, குழந்தை தேவையில்லாத அல்லது அதிக விலையுள்ள, உங்களால் வாங்கி அளிக்க இயலாத, குடும்ப சூழலுக்கு பொருந்தாத பொருட்களையோ அல்லது விஷயங்களையோ கேட்கும் போது, அதற்கு புரியும் வகையில் எடுத்துக்கூறி மறுக்கவும் செய்யுங்கள்..! தான் வேண்டியது கிடைக்காத போது உள்ள மனநிலையையும் குழந்தை நல்ல மனபக்குவத்துடன் கடந்து வருமாறு குழந்தையை வாழ்க்கையில் வழிநடத்துங்கள்.! 

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon