Link copied!
Sign in / Sign up
33
Shares

உங்கள் கணவர் மீதான காதலை, அதிகரிக்கும் கணவரின் 5 செயல்கள்..!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு தனி நபர் மட்டும் தனித்து நின்று செய்யும் காரியமன்று. குழந்தையை வளர்ப்பது தாய் மற்றும் தந்தை இருவரின் கடமையாகும். ஒரு குடும்பத்தில், கணவர் ஆனவர் குழந்தை வளர்ப்பில் உதவினால் தான், அது சிறந்த இல்லறம் எனப்படும். அதுபோல், உங்கள் கணவர் குழந்தையை கவனித்துக் கொள்ள செய்யும் இந்த 5 செயல்கள், அவர் மீதான உங்கள் காதலை அதிகரிக்கச் செய்யும். 

அப்படி, உங்கள் கணவர் அசத்தும் அந்த, 5 செயல்கள் எவை என பார்க்கலாமா..?? வாருங்கள் மனைவிகளே! பதிப்பினுள் சென்று அவ்வீர தீர செயல்களைக் காணலாம்…!!

1. டையப்பர் மாற்றுவது..!

குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் அடிக்கடி அவர்களுக்கு டையப்பர் மாற்ற வேண்டியிருக்கும். பெண்களுக்கும் பிரசவம் நடந்திருக்கும் சமயமாக, இருந்தால் கணவர்கள் கட்டாயம் பல குழந்தைகளை வளர்க்கும், கவனிக்கும் செயல்களில் உதவ வேண்டும். அவர் என்றாவது ஒரு நாள் உதவினால், அது எந்தவித உணர்வையும் உங்களில் ஏற்படுத்தாது. ஆனால், நீங்கள் சோர்வாக இருக்கும் பொழுது, வேலையாக இருக்கும் பொழுது என உங்களைக் கவனித்து, உங்களின் வேலைப்பளுவை உணர்ந்து, உங்களுடன் சேர்ந்து குழந்தையை வளர்க்க, டையப்பர் மாற்ற என்று உதவினால், உங்களால் அவருடன் நிச்சயம் காதலில் விழாமல் இருக்க முடியாது.

2. குழந்தையுடன் விளையாடுதல்..

கணவர் பெரும்பாலும், அலைபேசி, வேலை, வெளியில் செல்வது, செய்தித்தாள்,தொலைக்காட்சி என்று அவருக்கென ஒரு தனி உலகை ஏற்படுத்திக் கொள்ளாமல், உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, குழந்தையுடன் அடிக்கடி விளையாடினால், அவர் மீது உங்களுக்கு கண்டிப்பாக காதல் ஏற்பட்டே தீரும்.

3. நள்ளிரவில் கவனித்தல்..

குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் சரியான வளர்ச்சியை எட்டும் வரை அவர்களின் தூங்கும் முறைகள் சரியானதாக இருக்காது. நள்ளிரவில் அடிக்கடி முழித்து, அழுவர். அச்சமயங்களில் தாயாக நீங்கள் மட்டும் விழித்து, கவனித்துக் கொண்டு, உங்கள் கணவர் உறங்கிக் கொண்டிருந்தால், அது சரியான நடைமுறை அல்ல. அச்சமயம் அவரும் விழித்து, சற்று நேரம் குழந்தையைக் கவனித்து உங்களுக்கு சிறிது ஓய்வு, வழங்கும் போது, அவர் மீது உங்களுக்கு எல்லையற்ற காதல் ஏற்பட்டே தீரும்..

4. குழந்தையை பார்த்துக்கொள்ளல்..!

என்றேனும் ஒரு நாள், நீங்கள் வேலை விஷயமாக அல்லது நண்பர்களை சந்திக்க செல்ல வெட்டி இருக்கும் போது, உங்கள் கணவர், ‘குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ சென்று வா..!’ என்று கூறி, குழந்தையை பார்த்துக் கொள்கையில், உங்கள் கணவர் மீது உங்களுக்கு ஏற்படும் காதலையும் மரியாதையையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை..

5. உணர்வுகளை வெளிப்படுத்தல்..!

குழந்தையிடமும், உங்களிடமும் உங்கள் கணவர் தனது பாசத்தையும், நேசத்தையும் அடிக்கடி வெளிப்படுத்தி, வேலை வேலை என்று உங்களை விட்டு விலகாது, உங்களுடன் இணைந்திருந்து, குழந்தையையும் குடும்பத்தையும் வழிநடத்தினால், அவரை விட சிறந்த கணவர் எவரும் இலர் என்றே கூறலாம்..!

நீங்கள் இது போன்ற கணவரை பெற்றிருந்தால், உங்களை விட அதிர்ஷ்டாசாலி எவருமிலர். உங்கள் கணவரை எவ்வளவு நேசிக்கிறீர்? என்று கமெண்ட் செய்யுங்கள் மற்றும் உங்கள் காதலை, இந்த உலகம் உணர, இப்பதிப்பை பகிருங்கள்! நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர் என்று உலகிற்கு உரக்க சொல்லுங்கள்…!!!

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
100%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon