Link copied!
Sign in / Sign up
15
Shares

உங்கள் கணவர் மிக சிறந்தவர் என்பதற்கான 6 அறிகுறிகள்

கணவன் மனைவியின் இடையே இருக்கும் காதல் அனைத்திற்கும் அப்பாற்பட்டதாய் இருக்கும். வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்வதற்காக உங்களுடன் இணைந்த துணை தான் உங்கள் கணவர். உங்களின் மீது அணைத்து உரிமைகளையும் உடையவர். உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை வித்தியாசப்படுத்தி காட்டும் சில அடையாளங்களும் இருக்கின்றன.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். அவர்களை சமாளிக்க உங்களிடம் உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். இங்கு இருக்கும் குணாதிசியங்கள் உங்கள் கணவரிடம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். உங்கள் கணவர் சிறந்தவர் என்பதற்கான 6 அறிகுறிகளை பார்க்கலாம்.

1 நேரத்தை உருவாக்குதல்

உங்களுடன் நேரத்தை செலவிட விரும்புதல். உங்கள் கணவர் அதிகமான வேலைப்பளுவின் காரணமாக ஓடி கொண்டிருக்கும் போது, உங்களுடன் நேரம் செலவிட நேரத்தை உருவாக்கினால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அவர்கள் அவசர வேலைகளுக்கிடையிலும் உங்கள் மீது தவறாமல் அக்கறை எடுத்து கொண்டால், உங்கள் கணவர் சிறந்தவர் என்பதை உணர்த்தும் அறிகுறியாகும்.

2 இரண்டாம் நபராய் உணர செய்யாத போது

சில ஆண்கள் இன்னும் ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்கிறார்கள். பெண்களை விட ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உங்கள் கணவர் உங்களுக்கு சம உரிமை கொடுத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான். அப்படி ஒருவரை பார்ப்பது அரிதான ஒன்று தான். உங்கள் உறவில், பாலின வேறுபாடு குறைவாக இருந்தால், உங்கள் உறவு வலுவானதாக இருக்கும்.

3 அவர் உங்களுக்கு கற்று கொடுக்கும் போது

உங்கள் கணவருக்கு சில விளையாட்டுகள் விளையாட பிடிக்கும். அவர் வீட்டிலே துணை தேட ஆரம்பிப்பார். நீங்கள் உங்களுக்கு தெரியாது என ஒதுங்கி கொள்ள நினைக்க மாட்டீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் கற்று கொள்ள ஆர்வம் செலுத்துவீர்கள். உங்கள் ஆர்வத்தை புரிந்து கொண்டு அவர் உங்களுக்கு அனைத்தையும் கற்று கொடுப்பார். இது உங்களை அவருடன் நெருங்க செய்து, அவரை மிக சிறந்தவராக உங்களுக்கு காட்டும்.

4 தவறுகளை ஏற்றுக் கொள்ளுதல்

அவர் வாழ்வில் தவறு செய்த்திருந்தால் அதை ஏற்று கொண்டு, உங்களை சந்தோசமாக வைத்திருப்பதற்காக எதையும் செய்யும் நபராக இருந்தால், அவர் உங்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளார் என்று அர்த்தம். பழையனவற்றை கடினமாக முயற்சித்து மாற்றுவார்கள். இது போல், உங்கள் கணவர் செய்தால், அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள்.

5 பேசுதல்

பெரும்பாலானோர் அவர்களின் உணர்வுகளை வெளிக்காட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியதால், உங்கள் உறவை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், அதற்கு மாறாக உங்கள் கணவர் உங்களுடன் அமர்ந்து, எது தவறாக சென்றது, எப்படி செய்தால் சிறப்பாக செய்ய முடியும் என உங்களுக்கு மதிப்பளிக்கும் போது, அவர் உங்களுக்கு சம உரிமை கொடுப்பது, உங்கள் சொல்லுக்கு மதிப்பளிக்கிறார் என்று அர்த்தம்.

6 நேர்மை

நீங்கள் இருவரும் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பல புதிய மக்களை சந்திக்க போகிறார்கள். இது உங்கள் நம்பிக்கையை விட்டு விலகுவதற்கு ஒரு காரணம் அல்ல. நீங்கள் உங்கள் கணவருடன் ஒரு பாதுகாப்பான உறவில் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் வேறொருவருடன் போட்டியிடுவது போல் உணர வேண்டியதில்லை.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon