Link copied!
Sign in / Sign up
431
Shares

உங்கள் கணவர் எப்போதும் மிகச் சிறந்தவர் என்பதற்கான 8 விஷயங்கள்


ஒரு பெண் என்னதான் தனித்து வாழ முடியும் என்றாலும், அவளது வாழ்வில் எப்படியேனும் ஒரு ஆணின் துணை இருக்கும். எப்படி என்கிறீர்களா? பிறந்தவுடன் தந்தையின் துணை, வளரும் பருவத்தில் சகோதரனின் துணை மற்றும் தோழனின் துணை. இப்படி துணையாக யார் இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு கணவன் எனும் துணையே நிரந்திரமான வாழ்கை துணை. அம்மா அப்பா பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கலாம், காதல் திருமணம் இப்படி, எப்படியேனும் பெண்ணிற்கு ஒரு ஆணின் துணை கிடைத்து விடும். நாம் தேர்ந்து எடுத்த நாம் கணவர் நாம் இதுவரை கூட இருந்த தந்தை, சகோதரன் மற்றும் நண்பன் அனைத்தும் சேர்ந்த ஒருவரை நாம் வாழ்வின் ஒரு பாதியாய் மாறுவர். இப்படிப்பட்ட உங்க கணவர் கோவப்படுபவராவோ, எரிந்து  விழுபவராகவோ, முரட்டுத் தன்மை உடையவராகவோ, பார்க்கவே அருவருப்பு படும்படி இருந்தாலும், அவர் தான் உங்களோட நல்ல வாழ்கை துணைன்னு நினைக்குறீங்களா? அப்போ வாழ்க்கைல கொடுத்து வச்சவங்க நீங்கதாங்க. 

உங்க கணவர் மிகச் சிறந்தவர்னு எப்படி கண்டு பிடிக்கனுன்னு கேட்குறீங்களா? நாங்க உங்களுக்காகவே  8 விஷயங்களை ஒரு ஆய்வின் மூலமாக சேகரிச்சு வச்சிருக்கோம்.

1 உங்கள் இதயத்தை வெற்றி கொள்பவர் மற்றும் அதற்காக உழைப்பவர்

ஒரு கட்டத்தில் காதலும், புரிதலும் அன்பும் மட்டுமே ஒரு பாகமாக இருக்கும். ஏன் அது எழுத படாத ஒரு சட்டமாகவும் இருக்கும். அந்த சமயம் நீங்கள் உங்கள் கணவரை சார்ந்து இருப்பீர்கள். உங்கள் கணவர் உங்களை உங்கள் வீட்டிற்கு கூட்டி செல்வது, இல்லை உங்கள் குடும்பத்தினரை வர செய்வது, வேலை முடிந்து சீக்கிரம் வீட்டுக்கு வருவது, உங்களுக்காக காலை சிற்றுண்டி அல்லது இரவு உணவு போன்றவற்றை செய்து உங்களை ஆச்சர்யப்பட வைப்பது போன்று ஏதும் புது விதமாக சிந்தித்து தொடர்ச்சியாக உங்கள் இதயத்தை வெற்றிகொண்டுவிட்டார் எனில் அவர் தான் உங்கள் வாழ்வின் மிக சிறந்த துணை என்பதை உணர துவங்குங்கள். 

2 உங்கள் பேச்சை காது கொடுத்து கேட்பது

கணவன் மனைவிக்குள் அவசியம் தேவைபடுவது நம்பிக்கை. அதுவே அவர்கள் வாழ்வின் அஸ்திவாரம் ஆகிறது. உங்கள் கணவர் அவர் பிரச்சனைகளின் போது உங்களிடம் கலந்தாலோசிப்பாரா? நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பாரா? உங்கள் ஆலோசனையை ஏற்று அதன் படி நடந்து அதை சரி செய்வாரா? ஆம் என்றால் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையே நெருக்கமான பிணைப்பு இருக்கிறது. இருவரும் உங்களுள் ஆலோசித்து உங்கள் துணைக்கு பக்கபலமாக இருப்பீர்கள்.

3 அவர் உங்களை நேசிக்கிறார்

கணவனின் சிறிய பாராட்டு கூட மனைவிக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அவர் உங்களை பற்றி மற்றவரிடம் பேச ஆரம்பிக்கும் போது, அவர் நண்பர்களிடம் பேசும் போது, தெரிந்தவர்களைப் பார்க்கும் போது தற்பெருமை பேசுறது. அப்படி அவர் பேசும் போது ஒட்டு கேட்க முடிந்தால் நீங்கதான் அதிர்ஷ்டசாலி. சில கணவர் மட்டும் தான் இப்படி செய்வார்கள், நீங்க உங்க கணவர் அப்படி பேசலைன்னு சண்டை போட்ட அவ்வளவுதான். உங்களை உங்க விருப்படி அவங்க கண்காணிப்புல இருக்க விட்டாலே உங்களை நேசிக்கிறாங்கனு அர்த்தம்.

4 உங்கள் கைகளைப் பிடிக்க அவ்வப்போது முயற்சித்தால்

 

நீங்கள் உங்கள் கணவருடன் வெளியில் செல்லும் பொழுது, அவர் உங்கள் கைகளை பிடித்துக்கொண்டு செல்ல விரும்புவாரா இல்லை, அவ்வப்பொழுது கைகளை பிடிக்க முயற்சிப்பாரா? ஆம் என்றால் உங்கள் கணவர் உங்களை மிகவும் நேசிக்கிறார் என்று அர்த்தம். நீங்கள் அவருடன் மிகவும் பாதுகாப்பாக உணரலாம். அவர் உங்களை எந்தநிலையிலும் கைவிடமாட்டார்.

5 உங்கள் கணவர் நீங்கள் வெறுக்கும் படி  நடந்துகொள்ளமாட்டார்

ஒரு சிறந்த கணவர் இதை புரிந்துகொள்வர், உங்களிடம் அதை பற்றி பேசமாட்டார். எதை என்கிறீர்களா? இதை தான். பெண்களின் மாதவிடாய் கால உணர்வுகளை புரிந்துகொண்டு உங்கள் மீது அக்கறை கொள்வர். உங்களுடன் அன்புடன் பரிவாய் பேசுவார். ஏன் உங்கள் கணவர் உங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்துவிட்டால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை.

6 தூய்மைபடுத்துதல் மற்றும் உதவி செய்தல் :

 

உங்கள் கணவர் நீங்கள் சமைக்கும் பொழுது காய்கறி நறுக்குதல், சமையல் முடித்தபின் பாத்திரம் துலக்கும் பொழுது உதவுதல், உங்களுக்கு வீட்டை தூய்மைபடுத்தும் பொது உதவுவது, ஏன் கழிவறையை கூட சுத்தம் செய்வது, எப்பொழுதாவது காலைவேளையில் உங்களுக்காக ஒரு கப் காபி போட்டு தருவது போன்று ஏதும் செய்திருக்கிறாரா?  அப்படியானால் உங்கள் கணவர் உங்களை எவ்வளவு  நேசிக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள்.

7 உணவு உண்ணும் வேலை

 

இன்றைய பரபரப்பான சூழலில் அனைவரும் உணவை காகத்தைப் போலத்தான் உண்கிறோம். அப்படி இருந்தாலும் வீட்டில் நீங்கள் உங்கள் கணவருடன் இருக்கும் வேளையில் அவர் உங்களுடன் சேர்ந்து சிரித்து பேசிக்கொண்டே உணவு உண்ண விரும்புதல், உங்கள் சமையல் திறனை பாராட்டுதல் போன்றவற்றை செய்தல் உங்கள் கணவர் சாலா சிறந்தவர் தான்.

8 நீங்கள் அவருடைய சிறந்த மனைவி

உங்கள் எல்லா இடத்திலும் உங்களுக்காக எதையும் செய்ய முடியாது, எல்லா இடங்களிலும் சிறந்தவராக இருக்க முடியாது. ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கி உங்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார் என்றால் அவருக்கு உங்களை விட உலகில் வேற யாரும் அவசியமில்லை என்றுதான் அர்த்தம்.

மனித வாழ்வில் எவராலும் சிறந்தவராக இருக்க முடியாது. எல்லாரிடமும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதற்கு உங்கள் கணவர் மட்டும் விதிவிலக்கல்ல. நிறைகள் மட்டுமே இருந்தால் அதன் அருமை தெரியாது. குறைகளும் இருந்தால் மட்டுமே நிறையை நம்மால் உணரமுடியும். உங்கள் கணவரிடம் ஏதும் குறை இருந்தால் அவற்றை புரியாவையுங்கள். எந்த கணவனும் மனைவியை வெறுப்பதில்லை, நேசிக்கிறான். அவற்றை சிலர் வெளி காட்டிவிடுகின்றனர். சிலர் அவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றனர். உங்கள் கணவரையும் குடும்பத்தையும் நேசித்து வாழ்வை வளமானதாக்குங்கள்.  

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

We have a great opportunity for you. You can EARN up to Rs 10,000/- every month right in the comfort of your own HOME. Sounds interesting? Fill in this form and we will call you.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon