குழந்தையால் உங்கள் இல்லற வாழ்க்கை அழகாகிறது என்பதை உணர்த்தும் தருணங்கள்
இதுவரை இருவராய் வாழ்ந்து இனிமை கண்ட இல்லற வாழ்வை மேலும் இனிமையானதாக்க வரும் ஒரு புத்தொளியே உங்கள் குழந்தை..! உங்கள் வாழ்வில், உங்களால் உருவான புத்துயிர் அளிக்கும் இன்பங்களை இதோ அறியலாம்…
1. குடும்பத்தை உருவாகும் உங்கள் குழந்தை…
“நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்ற மொழியை, உண்மையாக்கி தம்பதியராய் இருந்த உங்கள் வாழ்வை ஒரு இனிய இல்லமாய், ஓர் குடும்பமாய் மாற்றுகிறது உங்கள் குழந்தை. கணவன்- மனைவி என்ற இடத்திலிருந்து, அப்பா-அம்மா என வாழ்வில், பதவி உயர்வளிக்கிறது, உங்கள் உயிர்.
2. சந்தோசத்தைப் பரிசளிக்கும் சக்தி...
உங்கள் குழந்தையே, உம் வாழ்வின் ஆதாரமாகி, நீங்கள் வாழ, சிரித்து மகிழ என உங்கள் வாழ்வின் காரணமாகிறது. குழந்தையின் சின்னச் சின்ன செயல்கள், சிரிப்பு, அழுகை, அதன் மழலைப் பேச்சு, உங்கள் பெயரை உச்சரிக்கும் அழகு என இல்லத்தையே இன்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது.
3. பெற்றோரை குழந்தையாய் மாற்றும் மழலைகள்...
4. அயர்வைப் போக்கும் ஆருயிர்...

5. தனிமையை போக்கும் இனிமை…
இல்லத்தரசிகளுக்கு , கணவர் வேலைக்கு சென்ற பின் ஏற்படும் தனிமையை, இனிமையாய் மாற்றுவது குழந்தையே… குழந்தையை கவனிப்பதிலும், குழந்தைக்கு கற்பிப்பதிலும், தாய்மார்கள் தங்கள் தங்க நேரத்தை தாராளமாய் செலவிட்டு, ஓய்வு நேரத்தை உபயோகமாக்கலாம்.
6. குடும்பத்தை ஒன்றிணைக்கும் குழந்தை…
கணவன் - மனைவி என தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்லும் சூழலில், மழலை, இல்லத்தின் வெற்றிடத்தை விரட்டி, குடும்ப சகிதமாய் நேரம் செலவிட வாய்ப்பு அமைத்து தருகிறது. உங்களால் உருவான, உங்கள் உயிர், கணவன்- மனைவி என்ற பிணைப்பை பழுதடையாமல் பாதுகாக்கும் பாலமாகிறது.
7. இன்பத்தை அளிக்கும் இன்பம்…

