Link copied!
Sign in / Sign up
7
Shares

உங்கள் அன்றாட நாளை எளிதாக்கும் 16 குறிப்புகள்!

உங்கள் குழந்தை எதற்காக அழுகிறது என்று எப்போதும் உங்களுக்கு தெரியுமா? இல்லை. எப்போதும் இல்லை. அவன் குழந்தையாய் இருந்த பொழுது சுவர் முழுவதும் அவனின் சித்திரம் இருக்கும். படிக்க செல்லும் பொழுது அவனை பரிட்சைக்கு தயார் செய்வது போருக்கு தயார் செய்வதை போல் இருக்கும். வளர்ந்த பிறகு அவனின் பிடிவாதங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். இப்படி உங்கள் குழந்தையின் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் மறக்க முடியாத ஒன்றாகும். அவை அனைத்தும் அழகிய நினைவுகள்.

இங்கே உங்களின் தினசரி வாழ்வை எளிதாக்கும் சில குறிப்புக்கள்.

1) இரண்டாக வாங்குங்கள்:

வீட்டிற்கு தேவைப்படும் பொருள் வாங்க வேண்டும் என்றால் அதை இரண்டாக வாங்குங்கள். இதனால் உங்களின் நேரமும் பணமும் மிச்சமாகும்.

2) எளிதாக சுத்தம் செய்ய:

இப்போது ஆன்லைனில் அதிகமாக விற்கப்படும் பொருள் தான் பேபி மாப் சூட் (Baby mop suit). குழந்தை இதை அணிந்து தவழும் பொழுது தரையையும் சேர்த்து சுத்தம் செய்கிறது. ஆனால் இந்த துணியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

3) புகழ் சுவர்:

உங்கள் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை போர்டுடன் கூடிய சுவரை ஒதுக்கிவிடுங்கள். அவர்களின் வார அட்டவணை மற்றும் முக்கிய குறிப்புகளை இதில் வைத்துக்கொள்ளலாம். மேலும், இதில் ஒரு கொக்கி மாட்டி அதில் பைகளை மாட்டிவிடலாம். இதனால் குழந்தைகளின் வார அட்டவணையை கவனிக்க முடியும்.

4) வாராந்திர அலங்கார அட்டவணை:

பிசியாக இருக்கும் தாய்மார்கள் குழந்தைகள் அந்த வாரம் போட்டுக்கொள்ள வேண்டிய துணிகளை ஒரு தனி இடத்தில் வைத்துக்கொள்ளலாம். இதனால் சலவை குறித்தோ அல்லது கடைசி நேர பதற்றங்களோ உங்களுக்கு இருக்காது.

5) கண்களை கவனியுங்கள்:

உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் மற்றொரு விஷயம் என்னவென்றால் பேபி ஷவர் கேப் (Baby shower cap). இதன் மூலம் ஷாம்பூ உங்கள் குழந்தையின் கண்களில் படாமல் அவர்களின் முடியை அலச முடியும்.

6) பயணத்தின் போது குழந்தைகளை பிசியாக வைத்திருக்க வேண்டும்:

பயணத்தின் போது புத்தகங்களோ அல்லது விளையாட்டு பொருட்களையோ உடன் எடுத்துச்செல்லுங்கள். இது குழந்தைகளை பிசியாக வைத்திருக்கும். அவர்கள் ஒழுங்காக நடந்துகொண்டால் அவர்களுக்கு பிடித்தமான ஸ்னாக்ஸ் வாங்கிகொடுக்கலாம். எ.கா: நீ இரண்டு பக்கங்கள் படித்து முடித்தால் உனக்கு பிடித்த ஸ்னாக்ஸ் வாங்கித்தருவேன்.

7) அவசர நிலை பை:

எப்போதும் ஒரு சிறிய பையில் ஸ்னாக்ஸ், தண்ணீர், டிஸ்ஸு, சிறிது பணம் மற்றும் முதல் உதவி கருவியை வைத்திருங்கள். இந்த பையை நீங்கள் அவசரமாக எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் பயன்படுத்தலாம்.

8) ரப்பர் பேண்ட் வித்தை:

உங்கள் குளியலறையை பயன்படுத்தும் போதெல்லாம் கதவை மூடிக்கொள்ள உங்கள் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், ஆனால் அவர் தன்னை பூட்டிக் கொள்ளலாம் என்று பயமா? கவலை வேண்டாம். படத்தில் உள்ளபடி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்கள். பின்பு கதவை பூட்ட முடியாது.

9) ஷூவை சரியான காலில் மாட்ட:

உங்கள் குழந்தை சரியான காலில் ஷூ அணிய வேண்டுமா? ஒரு ஸ்டிக்கரை இரண்டாக வெட்டி ஒவ்வொரு ஷூவிழும் ஒட்டிவிடுங்கள்.

10) டூத் பேஸ்ட்டால் சுத்தம் செய்யலாம்:

உங்கள் குழந்தை மர சாமான் மீது வரைந்து வைத்துள்ள ஓவியங்களை டூத் பேஸ்ட் கொண்டு சுத்தம் செய்யலாம்.

11) டேபிள் மேட்:

உங்கள் குழந்தைகள் சாப்பிடும் பொழுது உணவு கீழே சிந்தாமல் இருக்க, அவர்களை டேபிள் மேட்டில் சாப்பிட வைக்கலாம்.

12) தண்ணீரில்லாத பூல்:

உங்கள் குழந்தைகள் விளையாட பலூன் போன்று ஊதக்கூடிய ஸ்விம்மிங் பூலை பயன்படுத்தலாம்.

13) நேரத்தை பங்கிட்டு செலவிடுங்கள்:

வேலைக்கு செல்லும் தாய்மார்கள், உங்கள் நேரத்தை குழந்தை, வேலை என பங்கிட்டு செலவிட வேண்டும்.

14) பந்தயம்:

உங்கள் குழந்தையின் போட்டியுணர்வை அதிகரிக்க காலையில் எழுவது முதல் பள்ளிக்கு கிளம்பும் வரை பந்தயம் போல் வைக்கலாம்.

15) வீட்டு வேலைகள்:

வார இறுதி நாட்களில் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு வீட்டு வேலைகளில் துணையாக இருக்க சொல்ல வேண்டும். இதனால் உங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது.

 

 

16) லேபிள் பயன்படுத்தலாம்:

லேபிள் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கு எந்த பொருளை எங்கே வைக்க வேண்டும் என்று தெரியும்.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Dear Mommy,

We hope you enjoyed reading our article. Thank you for your continued love, support and trust in Tinystep. If you are new here, welcome to Tinystep!

Recently, we launched a baby-safe, natural and toxin-free floor cleaner. Recommended by moms and doctors all over India, this floor-cleaner liquid gets rid of germs and stains without adding harmful toxins to the floor. Click here to buy it and let us know if you liked it.

Stay tuned for our future product launches - we plan to launch a range of homecare products that will keep your little explorer healthy, safe and happy!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon