Link copied!
Sign in / Sign up
25
Shares

உலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..!

நண்பர்களே! இந்த உலகில் பலவித பெண்மணிகள் விசித்திரமான பிரசவத்தை சந்திக்க நேரிடுகிறது; பலவகை குழந்தைகள் விசித்திர குறைகளுடன் பிறந்து வாழ்ந்து காட்டுகின்றனர். இந்த மாதிரியான விசித்திர சம்பவங்களை பற்றி இப்பதிப்பில் படித்து அறியலாம்..!

அதிசய குழந்தை..!

எலி தாம்சன் என்கிற குழந்தை மூக்கே இல்லாமல் பிறந்து 2 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து, அதன் 3வது பிறந்த நாளில் இந்த மண்ணை விட்டு மறைந்து விட்டது. மனிதர்கள் உயிர்வாழ முக்கியத் தேவை காற்று. உணவில்லாமல் சில மாதங்களும், நீரில்லாமல் சில நாட்களும் வாழ்ந்து விடலாம். ஆனால் காற்றில்லாமல் ஒரு நாள் கூட வாழ முடியாது. அப்படி இருக்கையில், இக்குழந்தை மூக்கே இல்லாமல் மூன்று வருடம் வாழ்ந்து மறைந்தது, விசித்திரத்தின் விசித்திரமே..!

விசித்திர பிரசவம்..!

துபாயில், 38 வயதான சகினா ஜம்ஷிட் மைகிரி என்பவர், தனது 9 வது குழந்தையை பெற்றெடுக்க மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். அவருக்கு சிசேரியன் மூலம் குழந்தையை வெளியெ எடுக்க முடிவு செய்த மருத்துவர்கள் குழு. அறுவை சிகிச்சையை தொடங்கி, சிகிச்சை கொடுக்க ஆரம்பித்து குழந்தையை எடுத்த நிமிடம் முதல், சகினாவின் உடலில் இருந்து 25 லிட்டர் இரத்தம் வெளியேறத் தொடங்கியது கிட்டத்தட்ட 100 யூனிட்களுக்கு மேல் இரத்தம் வெளியேறிய நிலையில் சகினா உயிரோடு உள்ளார் மற்றும் குழந்தையும் நலமாக ஜனித்துள்ளது..! இது விதி நடத்திய விசித்திர விளையாட்டு எனலாம்..!!

தைரியத்திற்கு தலைவணங்குவோம்..!

அமெரிக்காவில் வாழும், ஸ்டெராசி ஹெரல்ட்டு என்பவர் உலகிலேயே மிகக் குள்ளமான பெண்மணி! அவரின் உயரம் 3 அடி தான், அவரின் குறைவான உயரத்தில் அவர் கர்ப்பம் தரித்தால், கருவில் உருவாகும் குழந்தையின் வளர்ச்சி, அவரின் நுரையீரலை நொறுக்கி உயிர்க்கு அபாயம் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும்.

இதை மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்த நிலையில், அவர் கட்டுக்கடங்கா தைரியத்துடன் குழந்தையை பிரசவிக்க முயன்றார்; அதில் வெற்றியும் பெற்றார். இப்பொழுது 3 குழந்தைகளுக்கு அன்னையாகி, நான்காவது குழந்தையை பெற்றெடுக்க ஆயத்தமாகியுள்ளார். இவர் அன்று பயந்திருந்தால், தாய்மை என்ற உணர்வை அவரால் அனுபவித்திருக்க முடியாது; அவர் தன் உயிரை துச்சமாய் மதித்து தைரியத்துடன் முயன்ற இம்முயற்சிக்கு தலைவனகிக்குவோம்..!

உலகில் பலர் பலவித குறைபாடுகளுடன் வாழ்ந்து வெற்றி வாகை சூட முயல்கின்றனர்; நம்மில் பலர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தும், குறைகளை கூறி காலத்தைக் கழிக்கிறோம்..! சிந்தித்து செயல்படுவோம் நண்பர்களே..! பதிப்பு மற்றவர் மனதில் நல்ல விதமான பாதிப்பை ஏற்படுத்த பகிருங்கள்..!

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon