Link copied!
Sign in / Sign up
12
Shares

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?

நம்மில் பலருக்கு, தம்பதியருக்கு உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. சிலர் எப்பொழுது உடலுறவு கொண்டால், குழந்தை உருவாகும். எந்த சமயம் உடலுறவு கொண்டால் அதிக இன்பத்தை பெற இயலும் இது போன்ற கேள்விகளை வினவுகின்றனர். இந்த கேள்விகளுக்கான விடையை பதிப்பு வடிவில் அளித்துள்ளோம்..! பதிப்பினை படித்து தகவல்களை அறிந்து பயனடைய வாருங்கள் நண்பர்களே!

உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலேஷன் (Ovulation) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும்,இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

பெண்கள் தங்களுக்கு, முட்டை வெளிப்படும் (Ovulation) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது (how to find the ovulation periods)? என வினவலாம். இந்த சந்தேகம் படிக்கும் வாசகர்களுக்கு எழலாம். விடையினை அறிய மேலே படியுங்கள்..

உங்களுக்கு இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (Cervical mucus) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு சுண்டி இழுப்பது போல இருக்கும் (belly cramps), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (spotting), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும். உடலுறவில் நாட்டம் அதிகரிக்கும்.

முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (Digital Thermometer) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். உடல் வெப்பத்தை சாதாரணமாகவே நீங்கள் உணர முடியும். அக்குள் மற்றும் மார்பின் கீழ்பகுதி தொடைகளில் சூடாக உணர்வீர்கள்.

உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளிப்படும் (Ovulation) நாள் சரியாக 14ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளிப்படும் நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.

உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளிப்படும் நாள். இந்த நாளில் நீங்கள் உடலுறவு கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கு உணர்வுகள் கிளர்ச்சியடையும் சமயம் உடலுறவு கொள்ள வேண்டும். பெண்களுக்கு பொதுவாக மதிய வேளையில் உணர்வுகள் கிளர்ச்சியடைவதாக கூறப்படுகிறது.

ஆகையால், தம்பதியர்களே! பதிப்பில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சரியான நேரத்தினை, நாளினை கணக்கிட்டு உடலுறவு கொண்டு, குழந்தைச் செல்வம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வீராக..! வாழ்க வளமுடன்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon