Link copied!
Sign in / Sign up
0
Shares

உடலுறவில் ஏற்படும் பிரச்சனைகள்..!

திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று என்னவென்றால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் தான். இதனை போலவே முக்கியமான ஒன்று தான் உடலுறவும்.. இந்த உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்தது என்ற கருத்து முற்றிலும் தவறானது. உடலுறவு உடல் மற்றும் மனம் இரண்டையும் சார்ந்ததாகும். உடலுறவில் முழுமையாக ஈடுபட மனதில் காதல், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தும் தேவை.. இப்படிப்பட்ட உடலுறவின் போது அல்லது உடலுறவினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த பதிப்பில் படித்தறியலாம்..

பெண் மலட்டுத்தன்மை 

பெண் மலட்டுத்தன்மை என்பது ஒரு உடலுறவு ரீதியான பிரச்சனையாகும். இது உடலுறவின் எந்த ஒரு படிநிலையிலும் உண்டாகலாம். 

பெண்களுக்கு எப்படி 

ஆண்களுக்கு காமம் என்பது உடலுறவு சார்ந்த படங்களை காணும் போதோ அல்லது அதை பற்றி பேசும் போதோ உண்டாகும். ஆனால் பெண்களுக்கு அவ்வாறு இல்லை உடலுறவு சார்ந்த விஷயங்கள், அதாவது உடலுறவுக்கு முன்விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடும் போது தான் இந்த உணர்வு உண்டாகும். எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே உடலுறவு சார்ந்த உணர்வுகள் வேறுபடுகின்றன. 

விரும்பம் இன்மை 

பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்தாலும் கூட, காதல் விளையாட்டுகளில் ஈடுபடும் போது பெண்களுக்கு இந்த உணர்வுகள் அதிகரிக்கின்றன. பெண்களுக்கும் காம உணர்வு வந்த உடன் உடலுறவில் ஈடுபடுவதே சிறந்ததாகும். 

உச்சநிலை 

ஆண்கள், மற்றும் பெண்களுக்கு இருக்கும் உச்சநிலையிலும் வேறுபாடு உள்ளது. உடலுறவின் போது உச்சநிலை அடைவதிலும் வேறுபாடுகள் உள்ளது. அதாவது பெண்களுக்கு ஒரு சில சமயங்களில் உடலுறவில் உச்சநிலை காண இயலாமல் போகின்றது. ஆனால் ஆண்கள் ஒவ்வொரு முறையும் உச்சநிலையடைகின்றனர். பெண்கள் உச்சநிலையடையாமல் போக அவர்களுக்கு இருக்கும் உணர்வு சார்ந்த பிணைப்பு தான். உணர்வு பூர்வமாக இணைய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். 

உளவியல் பிரச்சனைகள் 

பெண்களுக்கு திருமணம் அல்லது உறவுகள் ரீதியான பிரச்சனைகள் மூலமாக மன அழுத்தம் வரலாம். அல்லது வெளியுலக நட்புகள், வேலைச்சுமை, பாதுகாப்பின்மை, கூச்சம், குற்ற உணர்ச்சி போன்றவற்றினால் பெண்களின் மனம் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம். 

உடல் ரீதியான பிரச்சனைகள் 

சிலவகையான உடல் ரீதியான பிரச்சனைகளும் பெண்களுக்கு காம உணர்ச்சி வராமல் போவதற்கு காரணமாக உள்ளது. இருதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், ஹார்மோன் பிரச்சனைகள், நரம்பியல் பிரச்சனைகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கல்லீரல் கோளாறுகள் ஆகியவையும், மது போன்ற போதைக்கு அடிமையாவது, சிலவகையான மருந்துகளை உட்க்கொள்வது போன்றவையும் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் போவதற்கு காரணமாகின்றன. 

வலிகள் 

பெண்ணுறுப்பில் ஈரப்பதம் இல்லாமல் உடலுறவு கொண்டால், பெண்களுக்கு உடலுறவின் போது வலி உண்டாகும். இதனால் பெண்கள் உடலுறவின் மீது ஈடுபாடு இல்லாமல் போகலாம். மேலும் கருப்பை கட்டிகள், அறுவை சிகிச்சை வலிகள் போன்றவையும் கூட உடலுறவின் போது அசாதாரண வலியை உண்டாக்கலாம். 

உடல் பிரச்சனைகள்

பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கட்டாயம் உள்ளது. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி சிகிச்சை மற்றும் மருந்துகளை உட்க்கொள்வதன் மூலமாக இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

மன பிரச்சனைகள் 

மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மனநல மருத்துவரை அணுகுவதன் மூலமாகவும், முறையான மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்வதன் மூலமாகவும் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon