Link copied!
Sign in / Sign up
0
Shares

உடலுக்கு வெளியில் துடிக்கும் இதயம் கொண்டு வாழும் சிறுமி!

விரசவியா போரன் என்ற வெளிநாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு பிறக்கும் போதே அவளின் இதயம் உடலின் உள்ளில்லாமல், உடலுக்கு வெளிப்புறமாக அமைந்து பிறந்தாள்; அப்படி பிறந்த அக்குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அனைவரும் இக்குழந்தை விரைவில் இறந்துவிடும் என்று கருத்து தெரிவித்தனர்.

ஆனால், அக்குழந்தையின் அன்னை தன் நம்பிக்கையை சிறிதளவும் இழக்காமல், தன் குழந்தை நிச்சயமாக பிழைக்கும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

அந்த தாயின் நம்பிக்கைப்படி, அக்குழந்தைக்கு தற்பொழுது வயது 7 ஆகிவிட்டது; ஆனால், குழந்தை ஆரோக்கியமாகவே உள்ளது. மற்ற குழந்தைகளைப் போலவே இக்குழந்தையின் செயல்பாடுகளும் உள்ளன. ஆனால் மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், ஒரு சிறிய வித்தியாசம் ஒன்று உண்டென்றால், அது வெளியில் உள்ள இதயம் மட்டுமே!

முதலில் இந்த சிறுமி எந்தவொரு சிறு செயலை செய்தாலும் அவளின் இதயம் அதிகமாய் அசைந்து, பார்ப்பவருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது; ஆனால், அந்த அசைவுகள் காலப்போக்கில் சற்று குறைந்து காணப்படுகின்றன.

சிறுமி போரனின் மிக விருப்பமான செயல் ஓவியம் வரைதல்; எந்நேரம் பார்த்தாலும் வரைந்து கொண்டு இருப்பது அவளுக்கு மிக விருப்பமான விஷயம்! மேலும் அவளுக்கு குதித்து விளையாடுவது, நடனம் ஆடுவது போன்ற விஷயங்களிலும் விருப்பம் அதிகம்.!

இந்த சிறுமி ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போமாக!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon