Link copied!
Sign in / Sign up
82
Shares

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சத்துமாவு பொடி..!!

பொதுவாக, சில குழந்தைகள் அதிக உடல் எடையுடனும், சிலர் குறைவான எடையுடனும் காணப்படுவர். குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்வது, பெற்றோர்களின் கையிலேயே உள்ளது. குழந்தைகள் சில சமயங்களில், சத்தான பழங்களையோ, காய்களையோ, பாலையோ உண்ண மறுக்கலாம். அச்சமயங்களில், அவர்களுக்கு சத்தான, சத்துமாவு கஞ்சி அளிக்கலாம். அதுவும் உடல் எடையை ஏற்றும் வகையில் தயாரித்து அளிக்கலாம்.  

மேலும் வயதுக்கு வந்த பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், தம்பதியர் என எந்த வயதினர் ஆயினும், உடலுக்கு அனைத்து சத்துக்களும் மிகவும் அவசியம். எனவே, அனைவர்க்கும் பொருந்தக்கூடிய, அனைவரின் உடலையும் வலுப்படுத்தக்கூடிய, அனைத்துவித சத்துக்களையும் ஒரே உணவில் பெரும் வகையிலான, ஒரு அருமையான, சத்தான, சுவையான சத்துமாவு எப்படி செய்வது என இப்பதிப்பில் காணலாம்..!!

தேவையானவை..! 

1. கேழ்வரகு - 250 கிராம்

2. கம்பு - 250 கிராம்

3. சோளம் - 200 கிராம்

4. மக்காச்சோளம் - 200 கிராம்

5. சம்பா கோதுமை - 10 கிராம்

6. பாசி பயிறு - 10 கிராம்

7. ஜவ்வரிசி - 10 கிராம்

8. வேர்கடலை - 10 கிராம்

9. முந்திரி - 10 கிராம்

10. பாதாம் - 10 கிராம்

11. பொரிகடலை - 10 கிராம்

12. சிகப்பரிசி - 10 கிராம்

13. ஏலக்காய் - 5

தயாரிக்கும் முறை..!

1. மேற்கூறிய ஒவ்வொரு பொருளையும், தனித்தனியாக வறுத்து ஆற வைத்து, அரைத்துக் கொள்ளவும் 

2. நன்றாக பொடியாகும் வரையில் ஒவ்வொன்றையும் தனித்தனியே அரைத்து எடுத்துக் கொள்ளவும் 

3. பின் அரைத்த அத்துணை மாவுகளையும் ஒன்றாய் சேர்த்து, கிளறி ஒரே கலவையாக்கவும்

4. இவ்வகையில் அரைத்துக் கலவையாக்கி, தயாரித்த மாவினை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சியாக காய்ச்சி, தினந்தோறும் பருகி வரலாம்.

இது காலை மற்றும் மாலை வேளைகளில் தேநீர் மற்றும் காபி இவற்றிற்கு மாற்றாக பருக ஏற்றது. மேலும் பாலோடு சேர்த்துக் காய்ச்சி தயாரிப்பதால், நன்கு பசி தாங்கும் தன்மை கொண்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், மழலைகளுக்கும் கொடுக்க ஏற்றது. பணிக்கு செல்லும் மக்களும் பருக சிறந்த பானம் இந்த சத்துமாவுக்கஞ்சி.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon