Link copied!
Sign in / Sign up
20
Shares

உடல் எடையை குறைக்க உதவும் 7 ஜூஸ் வகைகள்

நம்மில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான உணவுகளை கடினமாக நினைத்து துரித உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இவை உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உணவியல் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து நிறைந்த காய்கள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இதை செய்வது பெரும்பாலானவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கிறது. இங்கு உங்களுக்கு சிறிய அற்புதமான தீர்வை வைத்திருக்கிறோம். அது உடல் எடையை குறைக்கும் ஜூஸ்கள். தினமும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூன்று நாட்கள் நச்சுக்களை நீக்க கூடிய உணவுக்கட்டுப்பாட்டு ஜூஸை எடுத்து கொண்டால், உடலில் ஆரோக்கியமான மாற்றங்களை காணலாம்.

நீங்கள் மூன்று நாட்கள் நச்சுக்களை நீக்க கூடிய ஜூஸை எடுத்துக் கொள்ள விரும்பினால், பின்வரும் ஜூஸ்களை உங்கள் உணவுக்கட்டுப்பாட்டில் சேர்த்து ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, உங்களை கட்சிதமாக வைப்பதோடு, உடல் எடையும் குறைகிறது. இந்த ஜூஸ்கள் மிக நுண்ணிய ஊட்டச்சத்துகளை கொண்டிருப்பதால், குறைவான கலோரிகளுடன் கொழுப்புகள் அற்றவைகளாக இருக்கின்றன. இவை உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களுடன், பசியை கட்டுப்படுத்துவதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

1. எலுமிச்சை மற்றும் தர்பூசணி

விதையுடன் கூடிய தர்பூசணி துண்டுகள் ஒரு கப், ஒரு எலுமிச்சை பழம் மற்றும் நன்கு வெட்டப்பட்ட புதினா இலைகளை சேர்த்து ஜூஸ் செய்து கொள்ளவும். இப்போது உங்களுக்கான ஜூஸ் தயார். தர்பூசணியில் அதிக அளவில் நீர்சத்து நிறைந்திருக்கிறது. இது குறைவான கலோரிகளை கொண்டிருப்பதோடு வயிற்றையும் நிரம்ப செய்துவிடுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவ கூடிய சிறந்த பழம். தர்பூசணி அதிக தண்ணீர் உள்ளடக்கங்களை கொண்டிருப்பதால், இந்த ஜூஸ் ஒரு பெரிய தண்ணீர் ஆதாரமாக இருக்கிறது. நாள் முழுவதும் நீங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும், உங்கள் உடலை குளிர்ச்சியாக வைக்கவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

2. துவங்குபவர்களுக்கு சிறந்தது

2 ஆப்பிள், 3 கேரட் மற்றும் 4 கொத்தமல்லி தண்டுகளை சேர்த்து ஜூஸ் செய்து கொள்ளவும். எளிமையான பொருட்களை கொண்டு சிறந்த சுவையுடன் தயாரிக்கப்படும் இந்த ஜூஸ், சிறந்த நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. கேரட்டில் ஆரோக்கியமான பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவை உடல் எடையை குறைக்கும் மூலப்பொருட்களை கொண்டிருப்பதோடு, குறைவான கொழுப்பையும் கொண்டிருக்கின்றன. இவை கண் பார்வையை மேம்படுத்துவதில் உதவுகின்றன. எனவே, இந்த ஆரோக்கியமான உணவை, உங்கள் ஆரோக்கியமான உணவு கட்டுப்பாட்டில் துவங்குங்கள்.

3. நச்சு வெளியேற்றி

இந்த கீரை ஜூஸ் உங்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஏனெனில் வெள்ளரிக்காய் சிறுநீரை தூண்டி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. கொத்தமல்லி செரிமானத்தை தூண்டுகிறது. கொத்தமல்லி மற்றும் காலேவில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே அதிக அளவில் நிறைந்திருக்கிறது. எனவே, இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் சரியாக செயல்பட வைக்கிறது. 2 முதல் 3 காலே இலைகள், ஒரு சிறிய கையளவு கொத்தமல்லி இலைகள், அரை எலுமிச்சை (உரிக்கப்படாதது), ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரி மற்றும் ஒரு நடுத்தர அளவிலான ஆப்பிள் ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்தால், உங்களுக்கான ஜூஸ் தயார்.

4. வெப்பமண்டல கீரைகள்

காலை உணவுக்கு முன் இதை குடிப்பது நல்ல பலனை தருவதோடு, போதுமான ஊட்டச்சத்துக்களோடு வயிற்றை நிரம்ப செய்துவிடுகிறது. மதிய உணவுக்கு முன்பாக நீங்கள் எந்த ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனியையும் எடுத்து கொள்ளாதீர்கள், உங்கள் உணவு உட்கொள்ளலைப் பரிசோதித்துக் கொள்ளவும். அன்னாசிப்பழம் இனிப்பு சுவைக்காக இதில் சேர்க்கப்படுகிறது. அரை நடுத்தர அளவிலான அன்னாசிப்பழம் (தோல் நீக்கியது), 1 பேரிக்காய், கீரை 2 கைப்பிடி அளவு, ஒரு பெரிய வெள்ளரிக்காய், 4 கொத்தமல்லி தண்டுகள் மற்றும் 1 அவகடோ ஆகியவற்றை எடுத்து கொள்ளவும் . அவகடோ தவிர அனைத்து பொருட்களையும் ஜூஸ் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அவகடோவை தனியாக ஜூஸ் செய்து கொள்ளவும், இரண்டையும் கலந்து உடனடியாக குடிக்கவும்.

5. கொழுப்பு கரைப்பான்

காம்பெபெரோல் மற்றும் க்வெர்செடின் ஆகியவை காலேவில் காணப்படும் இரண்டு மிக அதிகமான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள் ஆகும். இந்த ஜூஸில் அதிக அளவில் நிறைந்திருக்கும் நுண் ஊட்டச்சத்துக்கள், செரிமான மண்டலத்திற்கு உதவுகின்றன. இது குறைவான கொழுப்பை கொண்டிருப்பதோடு, உடல் எடை குறைய உதவுகிறது. இது முடி மற்றும் தோலிற்கு நன்மையை ஏற்படுத்துகிறது. 2 காலே இலைகள், 1/2 எலுமிச்சை சாறு, 1/2 ஆரஞ்சு, 1/2 பீச் மற்றும் 1 தேக்கரண்டி தரை பூசணி விதை ஆகியவற்றை ஜூஸ் செய்து, நன்கு கலந்து குடிக்கவும்.

6. மெலிதாக & கட்சிதமாக

நார்ச்சத்து உணவுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இந்த ஜூஸ் உங்களுக்கு நீரேற்றமளித்து, எடை இழக்க உதவுவதோடு, வயதான தோற்றம் ஏற்படும் வேகத்தை குறைக்க உதவுகிறது. மேலும், மன அழுத்தத்தை குறைப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடுகிறது. 1/2 ஆப்பிள், 5 பச்சை திராட்சை, 1/2 திராட்சைப்பழம் மற்றும் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஜூஸ் தயார் செய்யவும்.

7. கொழுப்பை எரிக்கும் இணைவு

குறிப்பாக நொறுக்குதீனியை தவிர்க்காமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர்க்கு, இந்த ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான அளவில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றலை வழங்குவதோடு, உடல் எடை குறையவும் உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கவும், செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தவும், வயதான தோற்றம் ஏற்படும் வேகத்தை குறைக்கவும் மற்றும் உங்களை நுண்ணுயிர் தொற்றுகளிலிருந்தும் பாதுகாக்கிறது. 2 கேரட், 6-7 தர்பூசணி துண்டுகள், 1/2 ஆப்பிள், 2 காலே இலைகள், 1/2 திராட்சைப்பழம் மற்றும் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும். இதோ உடல் எடை குறைக்க உதவும் ஜூஸ் தயார்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon