Link copied!
Sign in / Sign up
1
Shares

உடல் எடை அதிகரிப்புக்கு நிரந்தரத் தீர்வா? அது என்ன?

உடல் எடை அதிகரிப்பு என்பது நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் ஒரு முக்கிய பிரச்சனை; இந்த உடல் அதிகரிப்புக்கு நிரந்தர தீர்வு ஒன்று இருந்தால் மிக நல்லது என்று எண்ணி ஆசை கொண்டுள்ள ஒரு கூட்டம் உண்டு. அப்படி நிரந்தர தீர்வு பெற, நம் உடல் எடையை நிரந்தரமாக சீராக வைக்க, சில‌ ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை உங்கள் தினசரி வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அந்த பழக்கங்கள் என்னென்ன என இப்பதிப்பில் படித்தறிவோம்..!

1. உடற்பயிற்சி 

30 - 60 நிமிடங்கள் வரை தினசரி உடற்பயிற்சி செய்தல் உடல் எடையை சீராக வைப்பதில் பெரிதும் உதவும்..! தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய இயலவில்லையெனில், 10 அல்லது 15 நிமிடங்களாக பிரித்து, உங்களுக்கு நேரம் இருக்கையில் செய்யலாம்; ஆனால், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்தையாவது உடற்பயிற்சிக்கு என ஒதுக்குவது நல்லது..!

2. உணவுகள்

நீங்கள் ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகளை தினமும் உட்கொள்ளுவதில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தானிய‌ங்களுடன், வாழைப்பழங்கள், வெட்டிய‌ ஸ்ட்ராபெர்ரிகள், பாலாடைக்கட்டி அல்லது தயிர், பீச்சஸ் அல்லது பெர்ரி, கீரை, குடைமிளகாய், தக்காளி, வெள்ளரி அல்லது வெங்காயம் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை காலை வேளையில் உட்கொண்டு ஆரோக்கியமான நாளை தொடங்கலாம்..! மேலும் அளவாக, கட்டுப்பாட்டுடன் உணவுகளை எடுத்துக் கொள்ளவும்; நொறுக்குத்தினிகளை உண்ணலாம், ஆனால், தினசரி உட்கொள்ள வேண்டிய கலோரிகளின் அளவை மீறாமல் உண்ணவும்..!

3. தவிர்க்க கூடாது

பட்டினி கிடந்தால், உங்களது பசியினை அதிகரிப்பதோடு, மேலும் அதிக உணவை உட்கொள்ள தூண்டும். ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என 3 முறை மட்டும் உண்ணவும்; கொழுப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை குறைத்து, ஆரோக்கிய உணவுகளை உண்ணவும்..!

 

4. சுறு சுறுப்பு 
உங்கள் அன்றாட செயல்களை சுறுசுறுப்புடன் செய்யுங்கள்; உங்கள் ஓய்வு நேரங்களில் ஏதேனும் உடல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவது மேலும் நலம் பயக்கும்..!

 

5. மன அழுத்தம் 

உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால், உங்களின் சாப்பிடும் அளவு தானாக அதிகரித்துவிடும். எனவே, உங்கள் மனதை அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

 

6. எடை கண்காணிப்பு..!

2 நாட்களுக்கு ஒரு முறை என நீங்கள் செய்த செயல்களால், எடையில் ஏதேனும் மாறுபாடு உள்ளதா என கண்காணித்து அறிய வேண்டும்; இது உங்கள் எடை பற்றிய சரியான புரிதலை உங்களுக்கு அளிக்கும்..!

7. ஊக்கம்..!

உங்கள் உடல் எடையை நீங்கள் நினைத்தவாறு குறைக்க முடிந்தால், அதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளும் விதத்தில், ஊக்கமளிக்கும் முறையில் சட்டை, உணவு, கடிகாரம் போன்ற பரிசுகளை வாங்கி அதை, நீங்கள் உங்களுக்கே அளிக்கும் பரிசாக எண்ணி உற்சாகத்துடன் உடல் எடை குறைப்பில் ஈடுபடலாம்..!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon