Link copied!
Sign in / Sign up
0
Shares

உடல் ஆரோக்கியத்தை உணர்த்தும் முகத்தின் எட்டு அறிகுறிகள்...

அகத்தின் அழகு மட்டும் முகத்தில் தெரிவதில்லை. உடல் நலத்தின் அழகும் முகத்தை சார்ந்திருக்க, உங்களுக்கு ஏற்படும் உடல் நல குறைவால் ஒரு சில மாற்றங்களும் முகத்தில் ஏற்படுகிறது. அவை என்ன என்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

1. தேவையற்ற முடிகள்:

பெண்களுக்கு தேவையற்ற முடியானது முகத்தில் வளர, அது ஹார்மோன் மாற்றங்களால் அதிகம் உற்பத்தி ஆகும் ஆன்ட்ரோஜனை குறிக்கிறது. இது PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறியின் அறிகுறியாக இருக்கக்கூடும். உங்கள் மாதவிடாய் தள்ளிப்போனால் இந்த ஹார்மோன் மாற்றத்தை உங்கள் உடலில் காண முடியும்.

2. பருக்கள் பிளவு:

உங்கள் உணவு முறையால் முகப்பரு பிளவு ஏற்படலாம். நம் உணவு முறையை பொருத்து முகத்தில் வரும் பருக்களும் அமைகிறது.

3. கண்களில் கருவளையம்:

இந்த கருவளையம் கண்களில் வர தூக்கமின்மை மட்டுமே காரணம் கிடையாது. இது உங்கள் உடலின் அலெர்ஜியினால் கூட ஏற்படக்கூடும். அதாவது, உங்கள் உடலில் நச்சு சேர்ந்தால் கண்களில் கருவளையம் வர வாய்ப்பிருக்கிறது. பால், பசை உணவு, முட்டை போன்றவற்றை குறைப்பதன் மூலம் இந்த அலெர்ஜி குறைய வாய்ப்பிருக்கிறது.

4. சிறு பருக்கள்:

வெள்ளை அல்லது சிவப்பு புடைப்புகள் முகத்தில் தோன்ற, பருக்கள் என நினைத்து அதற்கான சிகிச்சை செய்வோம். ஆனால் அது பருக்கள் அல்ல... அதன் பெயர் கெரடோசிஸின் பிலாரிஸ். அதாவது உங்கள் உடலுக்கு தேவையான கொழுப்பு அமிலம், துத்தநாகம், வைட்டமின் ஏ குறைபாட்டால் இது வருகிறது. இந்த பிரச்சனையை தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உங்களுக்கு தேவைப்படுகிறது. சக்கரைவள்ளி கிழங்கு, பச்சை காய்கறிகளில் இந்த வைட்டமின் ஏ அதிகமிருக்கிறது. 

5. உதடு வெடிப்பு:

இது ஒரு சிலர் வாழ்வில் நிரந்தர போராக அமைகிறது. நாம் என்ன தான் அழகாக பேசினாலும் உதடுகள் வெடித்திருக்க அதுவே ஒரு குறையாக ஒரு சிலருக்கு தெரியும். இதற்கு காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவிலுள்ள துத்தநாகத்தின் அளவாகும். சிக்கன், கல்லீரல், மீனில் இந்த துத்தநாகம் இருக்கிறது. அதேபோல் கொண்டைக்கடலை மற்றும் பரங்கி விதையிலும் துத்தநாகம் இருக்கிறது. நியாசின் என்பதும் உதடு வெடிப்புக்கு காரணமாக காளானில் இந்த நியாசின் அதிகமிருக்கிறது.

6. உதட்டின் ஓர கொப்புளம்:

இதுவும் உணவு முறையால் ஏற்படும் ஒரு பிரச்சனை தான். இதற்கான காரணம் வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து குறைபாடே... பச்சை காய்கறிகள், பீன்ஸ், கோழி முதலியவற்றில் இச்சத்துக்கள் இருக்கிறது.

7. மெல்லிய கண் இமைகள்:

உங்கள் கண் இமைகளில் குறிப்பாக மூன்றாவது வெளிப்புற பகுதி மிகவும் மெல்லியதாக இருந்தால்... செயலற்ற தைராய்டு தாக்கம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த செயலற்ற தைராய்டின் மற்ற சில அறிகுறிகள் சரும வறட்சி, உடல் எடை கூடுதல், மலச்சிக்கல் அல்லது உடல் சோர்வாகும்.

8. வெளிறிய சருமம்:

ஐரிஷ் பெண்களுக்கு சருமம் இப்படித்தான் இருக்குமாம். ஆனால் உங்கள் சருமம் இப்படி இருக்க என்ன காரணம்? அது தான் இரத்தசோகையின் அறிகுறி. வைட்டமின் பி - 12, வைட்டமின் பி-6, போலேட், இரும்பு சத்து குறைபாட்டால் ஒருவருக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. அதனால் இரும்பு சத்து நிறைந்த பீன்ஸ் போன்ற உணவை நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon