Link copied!
Sign in / Sign up
1
Shares

இரட்டையர்களை கொண்ட பனிக்குடம் எப்படி இருக்கும்?

கருவில் இருக்கும் குழந்தை ஒன்று என்றால் அதனால் எவ்வித பாதிப்பும் பெரும்பாலும் ஏற்படுவதில்லை. ஆனால், ஒருவேளை கருவில் இரண்டு குழந்தை இருந்தால் அப்போது உங்கள் இரண்டு குழந்தையும் எப்படி இருக்கும்? கண்டிப்பாக தனித்தனி பனிக்குடத்தில் தான் காணப்படும். இதனை டைக்கோரினிக் டைமனிடிக் இரட்டையர்கள் என்று அழைப்பர்.

எப்படி இருக்கும்?

கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு பனிக்குடங்கள், இரண்டு நச்சுக்கொடிகள் என காணப்பட, இரு குழந்தைகளை சுமக்கும் தாய்மார்கள் தான் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆம், கருவில் உங்கள் குழந்தைகளுக்கு தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கிறது என்பதில் சந்தேகம் வேண்டாம். அதை நீங்கள் எப்படி தர போகிறீர்கள் என்பது தான் மிக முக்கியம்.

ஒரே நச்சு கொடி என்றால் என்ன ஆகும்?

ஒரு சில நேரத்தில் ஒரே கருமுட்டை இரண்டாக பிரிய, இரட்டை குழந்தைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உண்டாகிறது. இதனால் பிறக்கும் குழந்தைகள் ஒத்த வடிவத்தை கொண்டதாய் இருப்பார்கள். நீங்கள் இது போன்ற பலரை உங்கள் வாழ்வில் பார்த்திருக்கவும்கூடும். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே நச்சுக்கொடி இருக்கக்கூடும் எனவும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இந்த நிலையில் அறுவை சிகிச்சை என்பது கூட மிகவும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆனால், இன்றைக்கு வளர்ந்து காணப்படும் அறிவியல், பிரச்சனையை அழகாக கையாள, கருவில் இருக்கும் இரு குழந்தையையும் வெற்றிகரமாக பிரித்து எடுக்கிறது. 

இரண்டு பனிக்குடத்தில் இருக்கும் குழந்தையை என்ன செய்வார்கள்?

1. இரண்டு பனிக்குடத்தில் இருக்கும் இரட்டையர்கள் பிறப்பில் கடினம் என்பது குறைவு. தாய்மார்களுக்கும் சிரமம் என்பது குறைவாகவே காணப்படுகிறது.

2. அதேபோல் தனித்தனி நச்சுக்கொடி கொண்ட குழந்தைகள் பிறப்பில் இருக்கும் எளிது, ஒரே நச்சு கொடியை கொண்ட குழந்தைகள் பிறப்பில் இருப்பதில்லை.

இரண்டு குழந்தையை ஈன்றெடுப்பது என்பது மனதை மீறிய மகிழ்ச்சியை ஒரு குடும்பத்துக்கு தருகிறது என்பதே உண்மை. காரணம், அதிலிருக்கும் சிக்கல்களும், அதை காப்பாற்ற ஏற்படும் கடின முறைகளுமே ஆகும். 

உங்கள் உடல் என்ன ஆகும்?

முதலில் எல்லா கர்ப்பிணிகளை போல் இரட்டையர்களை சுமக்கும் தாய்மார்களும் காணப்படுவார்கள். ஆனால், அதன்பிறகு அவர்களுக்குள்ளே ஒரு பதட்டமும் ஆசையும் உருவாகும். அது என்னவென்றால், எப்படி நாம் இரண்டு குழந்தையை ஒரே முறையில் பெற்றுக்கொள்ள போகிறோம்? என்ற பதட்டமும், குழந்தை நல்லபடியாக பிறக்க அதனால் ஏற்படப்போகும் இரட்டிப்பு மகிழ்ச்சியும் கண்டிப்பாக இரட்டை குழந்தையை பெற்றுக்கொடுக்க போகும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் என்பதே உண்மை.

முதலில் இந்த பயத்தை தவிர்த்திடுங்கள். இந்த பயத்தால் எந்த பயனுமில்லை என்பதை புரிந்துக்கொண்டு தேவையான ஆற்றலுடன் நீங்கள் இருக்க, உங்கள் இரட்டை குழந்தைகளை தூக்கி கொஞ்சும் நிமிடம் என்பது என்றுமே உங்களால் மறக்க முடியாத ஒரு தருணமாகவும் அமையும் என்பதை அதன்பிறகு நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

உடற்பயிற்சிகள்:

1. உங்கள் மருத்துவரிடம் பரிந்துரை பெற்று முறையான உடற்பயிற்சியை செய்வதன் மூலம் வலுவான வயிற்றை நீங்கள் பெறக்கூடும். ஆனால், அளவுக்கதிகமாக செய்யாதீர்கள். இதனால் பயனுக்கு எதிரான எதிர்வினையால் தேவையற்ற வலியும், பிரச்சனையும் உங்களுக்கு வரக்கூடும்.

2. அதேபோல் நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் முறையாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி வல்லுநர் உதவியுடன் செய்வது தான் மிக நல்லது. நீங்களாக செய்தால் எது சரியான முறை? என்பது தெரியாமலே தேவையற்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon