Link copied!
Sign in / Sign up
0
Shares

ஏப்ரல் 1இல் பிடித்தவரை ஏமாற்ற புதிய யோசனைகள்...

ஏப்ரல் 1 என்றால் என்ன நினைவில் வருகிறதோ இல்லையோ! மற்றவரை ஏமாற்ற நாம் ஒருபோதும் மறப்பதில்லை. இது சிறியவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஒரு விஷயமும் இல்லை. குழந்தைகள் விளையாட்டு தனமாக ஏமாற்ற, நாமோ 100 சதவிகித குழந்தைகளாக மாறி குழந்தைகளையே மிஞ்சுகிறோம். கிராமத்தில் விக்கல் எடுக்கும்போது ஒரு யுக்தியை கையாளுவர். அது என்னவென்றால், தொடர்ந்து விக்கல் எடுக்கும் ஒருவருக்கு., அதிர்ச்சியாக ஒரு விஷயத்தை கூற, உடனே விக்கல் நின்றுவிடும். அதுபோல் தான் இந்த ஏப்ரல் 1ஆம் தேதியும். கவலையாக ஒரு விஷயத்தை முதலில் சொல்லி ஒருவரை முடிந்த அளவுக்கு நம்ப வைத்து இறுதியில் சொன்ன அனைத்தும் பொய்யே எனும் இரு மடங்கு சந்தோஷத்தை தருவார்கள். ஏப்ரல் நெருங்கிவிட்டது. இந்த முறையும் நீங்கள் யாரையும் ஏமாற்ற விரும்பினால் இதோ நாங்கள் ஒரு சில புதிய யோசனையை உங்களுக்காக தருகிறோம்.

காபி ஏமாற்றம்:

இரண்டு காபிக்களை போட்டுக்கொள்ளுங்கள். அதில் ஒன்றில் ஏதாவது அடியில் மூழ்கும் வித உணவை போட்டுவிடுங்கள். நீங்கள் அவருடன் சேர்ந்து குடிக்க, அவர் குடிக்கும்போது சுவையால் மட்டுமே ஏமாறுவார். ஆனால் இறுதியில் நீங்கள் போட்ட பொருளை பார்க்கும் அவர், சிரிப்புடன் தன் ஏமாற்றத்தை ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. கோபம் வருவது போல் காமெடி செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

பேப்பர் வித்தை:

ஒரு பேப்பரில் கிளிட்டரை (Glitter) ஒட்டிக்கொள்ளுங்கள். அது உங்கள் மனம் கவர்ந்த ஒருவர் பார்வைக்கு தெரியும்படி இருக்க வேண்டும். ஆனால், அதில் என்ன இருக்கிறது என்பதை அவருக்கு தெரியும்படி வைக்காதீர்கள். அந்த பேப்பரால் ஈர்க்கப்பட்டு அவராக சென்று பார்க்க, அதில் உங்கள் முட்டாள் தின வாழ்த்து செய்தியை எழுதி அழகாக பரிமாறலாம்.

பலூன் டிரிக்:

ஒரு பலூனில் நீரை நிரப்பிக்கொண்டு அதை உங்கள் மனம் கவர்ந்த ஒருவரின் தலையணைக்கு அடியில் வைத்துவிடுங்கள். அவர்கள் வந்து ஆக்ரோஷமாக படுத்தால், என்ன ஆகும் என நான் வேறு என் வாயால் சொல்ல வேண்டுமா என்ன...

கண்ணாடி மேஜிக்:

கணவன் பார்க்கும் கண்ணாடியில் ஏப்ரல் 1 வாழ்த்து செய்தியை கைகளால் வரைந்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம். இது ஒரு சிலர் செய்திருக்கக்கூடிய விஷயமென்றாலும் இது எந்த ஒரு விதத்திலும் யாருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துவதில்லை.

இதை எல்லாம் தாண்டி உங்கள் கணவரின் கண்களை கட்டிக்கொண்டு நடக்க விடுங்கள். அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தருவதாக கூறுங்கள். அவர் மனமுவந்து நீங்கள் தரப்போகும் சந்தோஷத்தை ஏற்க துணிந்தால், அவர் நடக்கும் வழியில் பலூனை வைத்து முதல் ஏமாற்றத்தை தாருங்கள். பின்னர் முத்தம் கொடுப்பதுபோல் கூட ஏமாற்றி, இது போன்ற சின்ன சந்தோஷங்களை நீங்கள் அவருக்கு தர, அவரும் கண்டிப்பாக இதுபோல் ஒரு ஏப்ரல் முதல் நாளை தன் வாழ்நாளில் பார்த்திருக்க வாய்ப்பு குறைவென்றால் நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon