Link copied!
Sign in / Sign up
1
Shares

டாப் டென் தமிழ் சீரியல்...

எந்த மாநிலத்துக்கு சென்றாலும் சரி. அங்கே சீரியல் தான் சூப்பர் ஹீரோ. அட ஆமாங்க, குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் அம்சமாக சீரியல் வலம் வர, அதற்கு ஏற்ப அவற்றின் வகைகளும் மாறுபடுகிறது. முன்பு, குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சீரியல்களின் வளர்ச்சியாக இன்று திரைப்பட பாணிக்கு கிராபிக்ஸிலும் பட்டையை கிளப்புகிறது. அப்படிப்பட்ட டாப் டென் தமிழ் சீரியலை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.  

சித்தி:

நம் வீட்டில் உள்ள பாட்டி, பக்கத்து வீட்டுக்கு போனாலும் சரி... சித்தி என சீரியல் சத்தம் கேட்டால், இல்லாத பலத்தை வரவழைத்துக்கொண்டு ஓடி வரும். சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்ட இந்த சீரியல் தான் அன்றய நாளில் பட்டத்து ராணி. இந்த சீரியலில் குறிப்பிடப்படும் அளவுக்கு பேசப்பட்ட ஒரு கதாப்பாத்திரம் தான் வேலுமணி எனும் கேரக்டர். இந்த கேரக்டரை வாசு விக்ரம் என்பவர் பண்ணியிருக்க, ஆடியன்ஸிடமிருந்து அமோக வரவேற்பையும் அவர் பெற்றார். இந்த சீரியலின் நாயகியாக, இராதிகா இரட்டை வேடத்தில் நடித்தார்.

மர்மதேசம்:

இந்த சீரியல் ஒளிப்பரப்பப்பட்ட நாளில் 'விடாது கறுப்பு' என பயந்தவர்கள் தான் அதிகம். அட ஆமாங்க, இந்த சீரியலில் ஒரு மர்ம மனிதர் குதிரையில் வந்து தப்பு செய்பவர்களை பழி தீர்ப்பார். அவர் யார்? மரணத்துக்கான பின்னணி என்ன? என்பதை மிகவும் சுவாரஸ்யமாக அமானுஸ்யம் கலந்து சொன்ன ஒரு சீரியல் இது. இந்த சீரியல் ஒருபக்கம் திரில்லை தர, சீரியலின் முடிவில் அருவா மீது ஓடும் குதிரை, நம் ஈரக்கொலையை நடுங்க செய்யும். இந்த சீரியல், ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்ப, பின்னர் சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டது. சமீபத்தில், வசந்த் டிவியில் கடைசியாக போடப்பட்டது.

கோலங்கள்:

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் மிகவும் பேமஸ். தேவயானி நடிப்பில் உருவான இந்த சீரியல், குடும்ப பின்னணியை மையமாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆஸம் ஹிட் ஸ்டோரி.

நாதஸ்வரம்:

சன் டிவியில் ஊதப்பட்ட நாதஸ்வரம் உலகம் முழுக்க சென்று சேர்ந்த ஒரு சீரியலும் கூட... மௌலி மற்றும் பூவிலங்கு மோகன் தன் அழகிய நடிப்பால் மக்களை ஈர்த்திட, இந்த சீரியலை திருமுருகன் இயக்கினார். இவரும் இந்த திரைக்கதையில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க, மலர் எனும் பெண் கதாப்பாத்திரம் பேச வைத்த ஒன்றும் கூட...

மெட்டி ஒலி:

"அம்மி அம்மி அம்மி மிதித்து..." எனும் பாடல் சத்தம் கேட்டால் போதும், அம்மியில் அரைக்க வைக்கப்பட்ட தேங்காயும் மறக்கப்படும். அவ்வளவு சுவையான சீரியல் இது. இதையும் திருமுருகன் தான் இயக்கினார்.

ஆபிஸ்:

இளசுகள் நெஞ்சை கொள்ளை கொண்ட சீரியல் தான் விஜய் டிவியின் ஆபிஸ். இதில் நடித்திருக்கும் ராஜி எனும் கதாப்பாத்திரத்தை விட, லக்ஷ்மி என்னும் பெண்ணை கனவில் கண்டவர்கள் நிறைய பேர். ஒரு சிலர், லக்ஷ்மி என்னும் மதுமிதாவை வால்பேப்பராக கூட வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன் மீனாட்சி:

இந்த சீரியலின் கதையை மறந்தாலும், இதில் நடித்த செந்தில் மற்றும் ஸ்ரீஜாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த சீரியலின் பாடலான... "ஏலேலோ..." இளைஞர்களின் ரிங்க் டோனாக இன்றும் ஒலிக்கிறது.

கனா காணும் காலங்கள்:

ஸ்கூல் போன புள்ளைங்க கூட மிஸ் பண்ணாம தினமும் பார்த்த சீரியல் தான் இந்த கனா காணும் காலங்கள். இதில் வரும் 'ராகவி' எனும் கேரக்டர் அமைதியால் அவார்ட் வாங்க, பட்டையை கிளப்பினார் திரைப்பட புகழ் பாண்டி (பிளாக் பாண்டி) மற்றும் ஜோ (காதல் சொல்ல வந்தேனில் நடித்தவர்)

தெய்வ மகள்:

இந்த சீரியல பத்தி உங்களைவிட நான் என்ன அதிகமா சொல்லிட போறேன்... இன்றைய நாளில் டி.ஆர்.பி யில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ஒரு சீரியல் தான் தெய்வமகள். இந்த சீரியல்ல ஹீரோ, ஹீரோயின விட காயத்ரி எனும் கேரக்டரில் நடித்த ரேகா அனைவருடைய மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். இன்னைக்கு சுட சுட பேசப்படுற ஒரு செய்தின்னா, காயத்ரி எப்போ போலீஸ் கிட்ட மாட்டுவானு தான்....

நந்தினி:

சீரியல் பார்ப்பவர்கள் அதிகம் என்பதற்கு சான்று நந்தினி தான். அட ஆமாங்க, அதனால தான் சுந்தர்.சி தைரியமா தயாரிப்பாளரா இறங்கி இருக்காரு. இந்த சீரியல்ல வர கிராபிக்ஸ் சினிமாவுக்கே சவால் விட, டைட்டில் கார்டுலேயே கதி கலங்க வைக்குது அரண்மனைய சுத்துற பெரிய பாம்பு.  

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon