Link copied!
Sign in / Sign up
0
Shares

பெற்றோராய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும் 9 புகைப்படங்கள்

பெற்றோராய் இருப்பது கடமை

பெற்றோராய் இருப்பது கடினம்

ஆனால் பெற்றோராய் இருப்பது தலைமுடியை பிய்த்துக்கொள்ள வைக்கும் என யாரும் கூறவில்லை.

குழந்தை என்பது எவ்வளவுதான் மகிழ்ச்சியாய் இருந்தாலும், உங்கள் மனதில் அடிக்கடி எழும் ஒருகேள்வி " நான் என்ன பாவம் செய்தேன் இதை அனுபவிப்பதற்கு ?"

எனவே உங்களுக்கு சிறிது ஆறுதல் தரும் வகையில், பெற்றோராய் இருப்பது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்தும் 9 சம்பவங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.

1. குழந்தை Vs மாவு

குழப்பம் ஏற்படுத்துவதற்கெனவே இருக்கும் ஒரு இடம் சமையலறை என்பதை அனைவரும் அறிவோம். அடுத்த முறை உங்கள் கணவர் சமையலறையில் ஏதாவது செய்ய முயற்சிக்கும்போது உங்கள் கணவரைப் பாருங்கள். இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட சாரா பின்னேட கூறுகிறார், " என் மகள் கமீலா செய்த மிகப் பெரிய குழப்பங்களில் இதுவும் ஒன்று! இப்போது எங்கள் வீட்டில் மாவு தடைசெய்யப்பட்டுவிட்டது."

2. மூன்று வயது குழந்தைகள் Vs சிவப்பு லிப்ஸ்டிக்

கலவையான உணர்வுகள். ஒருபுறம் உங்களுடைய விலையுயர்ந்த லிப்ஸ்டிக் இழந்துவிட்டோம் என்று வருத்தம் இருந்தாலும், மறுபுறம் உங்கள் குழந்தைகளின் வேடிக்கையான முகத்தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த இடங்களையெல்லாம் எப்படி சுத்தம் செய்வது என்ற பயத்திற்கு முன்னால் இந்த உணர்வுகள் எல்லாம் சாதாரணமானதாக தோன்றும்.

3. இரட்டை குழந்தைகள் Vs பேபி பவுடர்

ஏன்? இது பேபி பவுடர் என்று அழைக்கப்படுகிறது என்பதையும், அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் நாம் அறிவோம். இதை குழந்தைகளும் அறிவார்கள் அல்லவா? பவுடர் பாட்டிலை பார்க்கும்போது அவர்கள் மூளையில் என்ன தோன்றும் என நாம் யூகிக்கலாம்.- " அது என் முகத்திற்கு அழகாக இருக்கும்போது தரைக்கும் அழகாகத்தான் இருக்கும்."

4. குழந்தை Vs சுவர்

இப்போது இது தந்திரமான ஒன்று. உங்கள் குழந்தையிடம் கடுமையாக நடந்துகொள்ளும் போது, உங்கள் குழந்தையின் அற்புதமான கற்பனைத்திறனை நீங்கள் அழிக்கிறீர்கள். அவர்களை ஊக்குவிக்கவும், தினமும் காலையில் புதிய சித்திரங்களை சுவரில் பார்க்கவும் தயாராகிக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்தாலும், இழக்கப்போவது நீங்கள்தான்.

5. குழந்தை Vs ஹெர்ஷி'ஸ் சிரப்

ஹெர்ஷி'ஸ் சிரப் இல்லாதவர்கள் இதை விரும்பமாட்டார்கள்? குழந்தையை இந்த பாட்டிலுடன் விட்டு பாருங்கள் இதுதான் நடக்கும். இந்த படத்தை பகிர்ந்த கொண்ட அம்மா கூறியது, " முழு ஹெர்ஷி'ஸ் சிரப் பாட்டிலும் அவன் அறை முழுவதும் பரவியிருந்தது. அறை மேற்கூரையிலும் சிறிது இருந்தது.

இப்போது அவன் ஒரு திறமையான குழந்தைதான்.

6. குழந்தை Vs கைவினை பொருட்கள்

இந்த செயலுக்கு நம்மிடம் ஒரு வார்த்தையும் இல்லை. சாரா ஹோல்ம்ஸ் கூறுகையில், " நான் 30 வினாடிகள் வெளியே சென்றிருந்தேன், எனது 3 வயது குழந்தை பல கைவினை பொருட்கள் பைகளை வீடு முழுவதும் இரைத்து வைத்திருந்தான். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் வேக்யூம் க்ளீனரால் சுத்தம் செய்ய முடியாத அளவிற்கு தரைவிரிப்புகளுக்கு அடியில் காகிதங்கள், பந்துகள் என நிறைய பொருட்கள் இருந்தன. எனவே அனைத்தையும் கைகளாலயே சுத்தம் செய்யும்படி ஆகிவிட்டது.

7. குழந்தை Vs ஷேவிங் க்ரீம்

குழந்தைகள் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உண்மையாக நம்பும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? ஜெனிபர் கூறும்போது, " வீட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை ஷேவிங் க்ரீமால் நிரம்பியிருந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் முதல்முறை பார்க்கும்போது அவள் மகிழ்ச்சியாய் கத்தினாள்!"

8. குழந்தைகள் Vs துண்டாக்கப்பட்ட காகிதங்கள்

ஒரு குற்றக்காட்சியில் நடப்பதை போன்று கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு நிமிடம் முன்பு, நாள் நன்றாக செல்வதாக நீங்கள் உறுதியாக நம்பினீர்கள். பின்னர் இது நடக்கிறது. ஷானோன் முழுநேர அம்மாகவும் பகுதிநேர துப்புரவாளராகவும் இருக்கிறார், அவர் முழுக்கதையையும் சொல்லவேண்டியிருக்கிறது. "இது எப்போது நிகழ்ந்தது? நான் சிரித்துக் கொண்டு இருந்தேன், அவர்கள் சிரிப்பையும் சௌகரியங்களையும் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் உண்டாக்கிய குப்பைகளை சரி செய்ய எனக்கு இரண்டு பேருடைய உதவிகள் தேவைப்படும். தினமும் இரண்டு மணி நேரம் சுத்தம் செய்வதற்கே தேவைப்படுகிறது இருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சிதான்.

9. குழந்தை Vs மேஜை

சில நேரங்களில், நீங்களே உதவமுடியாத அளவிற்கு குழந்தைகள் குறும்புகள் செய்வார்கள். லேசல், குளிக்க சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தால் குழந்தைகள் இப்படி செய்திருக்கிறார்கள்.

அருமையாக விளையாடியுள்ளீர்கள் குழந்தைகளே!

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon