Link copied!
Sign in / Sign up
7
Shares

கர்ப்ப காலத்தில் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய 8 நன்மைகள்...

பேரிச்சம் பழம் மிகவும் சத்தான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். குழந்தைகளுக்கு சத்து குறைவாக இருப்பின் பேரிச்சம் பழம் சாப்பிட மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும். அதுவே கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் உண்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா. ஆம், கர்ப்ப காலத்தில் நீங்கள் சந்திக்கும் 8 விதமான பிரச்சனைக்கு பேரிச்சம் பழம் தீர்வை தருகிறது.

1. ஆற்றலை தருகிறது:

கர்ப்ப காலத்தில் உங்களுக்கு ஆற்றல் என்பது இரு மடங்கு தேவைப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கருவிலிருக்கும் உங்கள் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் என்பது அவசியமாவதாலே. அதனால், ஒரு கை அளவு தினமும் நீங்கள் பேரிச்சம் பழம் சாப்பிட கலோரி அதிகமற்ற தேவையான சர்க்கரை அளவு என்பது உங்களுக்கு கிடைக்கிறது.

2. மலச்சிக்கலை போக்கும்:

பேரிச்சம் பழத்தில் பெருமளவில் நார்ச்சத்து இருக்கிறது. இதனால் செரிமான கோளாறுகள் நீங்க கர்ப்ப கால மலச்சிக்கலையும் கட்டுப்பாட்டினுள் வைக்கிறது. அத்துடன் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எடையையும் தருகிறது.

3. புரதத்தால் அமினோ அமில உற்பத்தி:

பேரிச்சம் பழம் நாம் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு தேவையான புரத சத்து கிடைத்திட, இதனால் உடம்பின் வளர்ச்சிக்கு தேவையான அமினோ அமிலமும் உற்பத்தி ஆகிறது.

4. குழந்தை பிறப்பில் குறைபாடு:

பேரிச்சம் பழத்தில் அதிகளவில் போலேட் இருக்கிறது. இந்த போலேட்டானது குழந்தை பிறப்பில் காணப்படும் குறையை சரி செய்ய உதவ, அது மூளை மற்றும் தண்டு வடம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கிறது.

5. வைட்டமின் கே ஊட்டச்சத்து:

வைட்டமின் கே குறைவுடன் பிறக்கக்கூடிய குழந்தைகள் எத்தனையோ பேர். ஆனால், இந்த வைட்டமின் கே என்பது தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு மிகவும்  அவசியமாகிறது. அதனால் கர்ப்பிணி பெண்கள் தன் உணவோடு பேரிச்சம் பழம் சேர்த்துக்கொள்வதால் கருவிலிருக்கும் குழந்தையின் எலும்பு வலுப்பெற தேவையான ஊட்டச்சத்தையும் தருகிறது.

6. இரத்த சோகையை போக்கும்:

பேரிச்சம் பழம் என்பது எதற்கு உதவும் என பலரிடம் கேட்டால், கிடைக்கும் ஒரு பதில் இரத்த சோகை பிரச்சனையை போக்கும் என்பது தான். ஆம், இரத்த குறைப்பாட்டை போக்க ஒரு அற்புதமான மருந்து பேரிச்சம் பழம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கர்ப்பிணிகள் பேரிச்சம் பழத்தை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்வதால் உங்கள் மற்றும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான எதிர்ப்பு சக்தி என்பது கிடைக்கிறது.

7. நீர் - உப்பு சமநிலை அடைதல்:

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் நீர் - உப்பு அளவை சமநிலைப்படுவதோடு இரத்த அழுத்தத்தையும், தசைப்பிடிப்பையும் சரி செய்ய உதவுகிறது. இந்த தாதுக்கள் உங்கள் உடலில் மிகவும் குறைவாக இருக்குமெனில் சிறுநீரக பிரச்சனைகள் இதனால் வரக்கூடும்.

8. குழந்தையின் பல் மற்றும் எலும்பு:

குழந்தைகளின் பல் மற்றும் எலும்பு வலுப்பெற உதவும் மற்றுமோர் தாது தான் மெக்னீசியம். இது உங்களுடைய இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த மெக்னீசியம் குறைப்பாட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் அசாதாரணமான பிரச்சனைகள் நிலவக்கூடும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon