Link copied!
Sign in / Sign up
12
Shares

மகப்பேறு தழும்புகளை குறைக்க 6 எளிய வழிகள்..!

பெரும்பாலான பெண்களுக்கு, பிரசவம் தன் வழக்கமான பரிசான, தழும்புகளை அளித்துச் செல்லும். பல பெண்களுக்கு பிரசவத்தின் பரிசான தழும்புகளால், மன அழுத்தம் பெறுகின்றனர்; வருத்தம் கொள்கின்றனர். பலருடைய இல்லற வாழ்க்கையில், இத்தழும்புகள் பெரும் திருப்பத்தையே ஏற்படுத்தி விடுகின்றன; சில சமயங்களில், இத்திருப்பங்கள் விரும்பத்தகாதனவாகவும் உள்ளன.

ஆகையால், இத்தழும்புகளில் இருந்து விடுபட்டு, பழைய அழகான தோற்றத்தையும், இழந்த இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் திரும்ப பெற, தழும்புகளை முற்றிலும் போக்க சில முறைகளைப் பற்றி அறியலாம், வாருங்கள் பெண்களே..!

1. ஓட்ஸ்

ஓட்ஸை பாலில் கலந்து தழும்புகள் உள்ள இடத்தில தேய்க்க வேண்டும். இது தழும்புகளை குறைக்க ஒரு சிறந்த வழி. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு தேய்ப்பது இறந்த செல்களை நீக்கிவிடும்.

2. ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும். இது தழும்புகளை போக்குவது மட்டுமல்லாமல், சருமத்தை ஈரப்பதமாக்கி மிருதுவாக்கும்.

3. ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி, சருமத்தை சரிப்படுத்தி சருமத்தில் உள்ள நிறமிகளை குறைக்கிறது.

4. தக்காளி சாறு

தக்காளி சாற்றில் உள்ள ஆன்டி ஆக்சிஜனேற்ற பண்புகள் சரும நிறத்தை குறைத்து, சேதம் உண்டாவதை தடுக்கிறது.

5. ஐஸ் கட்டிகள்

தழும்புகளில் ஐஸ் கட்டிகள் கொண்டு மசாஜ் செய்வது, சரும துளைகளை இறுக்கி தோல் நிறமிகளை குறைக்கும். ஆகவே தழும்புகள் குறையும்.

6. எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் இயற்கையாகவே வெளுக்கும் தன்மை உள்ளது. ஆகவே தழும்புகள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறு கொண்டு மசாஜ் செய்தால் தழும்புகள் மறையும்

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
100%
What?
scroll up icon