Link copied!
Sign in / Sign up
5
Shares

தொட்டில் குழந்தை இறப்பு - ஒரு பார்வை..!

Sudden Infant death syndrome(SIDS) அதாவது, தொட்டில் குழந்தை இறப்பு என்பது ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவ்வித அறிகுறியுமின்றி, எவ்வித சத்தம் மற்றும் தொந்தரவு தராமல், அனுபவியாமல்  திடீரென்று இறந்து விடுவதாகும்.

இதற்கு காரணம் எவை என்று தெளிவாக கூற முடியவில்லை; குழந்தையின் மூளையில் ஏற்படும் கோளாறு மற்றும் குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்புவது இந்த நிகழ்விற்கு காரணமாகலாம்..!

காரணிகள்..!

சில உடலியல் காரணிகள் தொட்டில் குழந்தை இறப்புக்கு காரணமாகின்றன. அவை; 

1. மூளை குறைபாடுகள்: சில சமயங்களில் குழந்தைகள் மூளை குறைபாட்டுடன் பிறப்பது, இந்த திடீர் இறப்பிற்கு காரணமாகிறது.

2. குறைந்த எடை: குழந்தைகள் குறைப்பிரசவத்தில் அல்லது குறைந்த எடையுடன் பிறப்பது, மூளை வளர்ச்சி முழுமையடைய உதவுவதில்லை; இந்த குறைந்த எடை மற்றும் சரியற்ற மூளை வளர்ச்சி போன்றவை, தொட்டில் குழந்தை இறப்பிற்கு காரணமாகலாம்..

3. மூச்சு கோளாறுகள்: குழந்தைகள் மூச்சுக் கோளாறுகள், குறைபாடுகள் கொண்டிருப்பது, இந்த திடீர் இறப்பிற்கு காரணமாகலாம்..!

4. வயிற்றின் மீது உறங்குவது அல்லது ஒருசாய்த்து உறங்குவது: குழந்தைகள் உறங்கும் தொட்டிலில் அல்லது கட்டிலில் பொம்மைகளை நிரப்பிவிடுவதால், குழந்தைகள் ஒருசாய்த்து அல்லது வயிற்றில் தலை படுமாறு குறுக்கிக் கொண்டு உறங்குகின்றனர். இதுவும் திடீர் இறப்பிற்கு காரணமாகலாம்.

5. புகை: பிரசவ காலத்தில் பெண்கள் புகைபிடித்திருந்தாலோ அல்லது பிறந்த குழந்தைகள் புகை பிடித்தலை நுகர நேர்ந்தாலோ திடீர் இறப்பு ஏற்படலாம்.

6. பாலினம்: பெரும்பாலும் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே இத்திடீர் இறப்பிற்கு காரணமாகின்றன.

பாதுகாப்பு..

1. தூங்கும் நிலை - குழந்தை சரியான நிலையில் உறங்குகிறதா என்று சோதித்து அறியவும்..!

2. படுக்கை - குழந்தை உறங்குவதற்கு தகுந்த, விசாலமான படுக்கை தயார் செய்து அளிக்கவும்.

3. வெப்பநிலை - குழந்தை இருக்குமிடம் தகுந்த வெப்பநிலையை கொண்டுள்ளதா என்று சோதித்து, சரிசெய்யவும்.

4. தாய்ப்பால் - குழந்தைகள் போதுமான அளவு தாய்ப்பாலை பெற வேண்டும்.

5. நிப்பிள் - குழந்தைகளுக்கு நிப்பிள் எனப்படும் pacifiers அளிப்பது இறப்பு விகிதத்தை குறைக்கும்.

6. தடுப்பூசி - சரியான முறையில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் இறக்கின்றனர்; ஆதலால், சரியான நேரத்தில் சரியான தடுப்பூசி அளிப்பது குழந்தையை இறப்பிலிருந்து காக்கும்..

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon