Link copied!
Sign in / Sign up
12
Shares

வீட்டு தோட்டத்தை அழகாக வைத்துக்கொள்வது எப்படி?

வீட்டில் வாழ்வது மட்டுமல்ல நம் கடமை என்பது. நாலா புறமும்... நம்முடன் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது தான், எப்பக்கம் திரும்பினாலும் திருப்தி என்பது உங்களுக்கு கிடைத்திடும். வீட்டினுள்ளே டிவியை எங்கே வைக்க வேண்டும்? மிக்சியை எங்கே வைக்க வேண்டும்? டிவி மீது பூ ஜாடி வைத்தால் அழகாக இருக்குமா? என நாம் பார்ப்பது போல் உயிருள்ளவைக்கு வாழ்க்கையை வெளி புறத்தில் அமைத்து தர வேண்டியதும் மிக அவசியம். 

அப்போது தான், நீங்கள் வெளி புறத்திற்கு சென்று வர அழுத்தம் கொண்ட மன நிலையுடன் காணப்பட்டாலும் வீட்டின் உள்ளே நுழையும் முன் மனதை சரி செய்ய முடியும். நவீன உலகத்தில் இது மிகவும் கடினமான ஒரு காரியம் என்றாலும், இதனை பழக்கப்படுத்தி கொள்வதால், வீட்டை வேலையுடன் சேர்த்து குழப்பம் கொள்ளும் சூழ்நிலை தவிர்க்கப்படும். இந்த பழக்கத்தை நீங்கள் கொண்டுவர உங்கள் வீட்டின் வெளிப்புறமும் உதவக்கூடும். அட ஆமாங்க, எவ்வளவு டென்சன் உங்களுக்கு இருந்தாலும்... வீட்டின் உள்ளே செல்லும் முன்னே இந்த செடி, கொடிகளால் ஆறுதல் மற்றும் ஆதரவு கிடைத்தால்., யாரால் தான் வீட்டில் சிடுமூஞ்சாக மட்டுமே இருக்க முடியும். சிரித்து பேசிடவும் கூடுமல்லவா?

அது சரி, இப்போது உங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் என்னவெல்லாம் வைக்கலாம்? வாருங்கள் பார்க்கலாம்...

அழகை காக்கும் ஐடி நாயகன் கல்வாழை:

ஐடி நிறுவனம், தொழிற்சாலை வாசல்களில் உயர்ந்த அழகிய செடி ஒன்றை நீங்கள் பார்த்து இருக்கலாம். இதன் பெயர் தான் கல்வாழை. ஒருசில இடங்களில் இதனை கொட்டை வாழை எனவும் அழைக்கின்றனர். இந்த கல்வாழையை அழகுக்காக ஐடி நிறுவனங்களும், இதர தொழிற்சாலைகளும், மால்களுமென நகரங்களில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அழகென்ற சொல்லை தவிர, இந்த கல்வாழைக்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது என்ன தெரியுமா?

நீங்கள் குளிக்கும் இடத்திலும், துணி துவைக்கும், பாத்திரம் சுத்தப்படுத்தும் இடத்திலிருந்தும் ஏராளமான இரசாயனம் ஆனது வெளிவருகிறது. இந்த கல்வாழை என்ன செய்யுமென்றால் இந்த இரசாயனத்தை இழுத்துக்கொண்டு அருகில் இருக்கும் செடிகளை செழிப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அட ஆமாங்க, இதை உங்களால் நம்ப முடிகிறதா? நம் அன்றாட வாழ்வில் வெளிப்படுத்தும் கெமிக்கலை தான் கல் வாழை உணவாக எடுத்துக்கொள்கிறது. இதனால், நீங்கள் வளர்க்கும் தோட்டங்களின் செடியும், மண்ணின் தன்மையும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.

நீங்கள் வீட்டில் தோட்டம் வைக்க விரும்பினால், தோட்டத்தின் இருபுறமும் இந்த கல்வாழை செடியை நுழைவாயிலாய் அமைத்து பெருமளவில் பணத்தை ஈட்டலாம் விளையும் காய்கறியின் மூலமாக.

அதனால், நீங்களும் வீட்டில் கல்வாழை வைத்து மண்ணின் வளத்தை பாதுகாப்பதோடு, வீட்டையும் அழகாக்கிடலாமே.

நித்திய கல்யாணி எனும் அழகு மங்கை:

இடுகாட்டு மல்லி என அழைக்கப்படும் ஒன்று தான் இந்த நித்திய கல்யாணி. இதை ஏன் இடுகாட்டு மல்லி என அழைக்கிறார்கள்? அதாவது சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்து செல்லும் வழியில் இந்த பூக்கள் நம்மை பார்த்து சிரிக்குமாம். "அன்று என் பயன் அறியாது, என்னை பார்த்து சிரித்தாய். இன்று உன்னை பார்த்து நான் சிரிக்கிறேன்..." என...அட ஆமாங்க, இந்த நித்திய கல்யாணி மிகவும் பயனுள்ள ஒரு செடி என்பது உங்களுள் எத்தனை பேருக்கு தெரியும்.

நித்திய கல்யாணி செடியின் பயன்கள்:

கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் தேவையான ஒன்று என்றாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதன்பின்னர் பருகுவது மிக நல்லது. ஆம், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த நித்திய கல்யாணி உதவுகிறது. உங்கள் கணவர் ஆபிஸ் வேலையால் அழுத்தத்துடன் காணப்பட்டால்  அவர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இந்த நித்திய கல்யாணி உதவுகிறது. மேலும் இதன் பயன்கள் எண்ணற்றவை என்பதோடு வீட்டின் அழகுக்காகவும் வளர்க்க பலரும் தொடங்கிவிட்டனர்.

இந்த செடியை வீட்டின் வேலி ஓரங்களில் வைப்பதன் மூலம் வைத்தியத்திற்கும் உதவுவதோடு வீட்டை அழகாக்கவும் இது உதவுகிறது.

கொல்லைப்புறத்து காவலன்:

கிராம புறங்களில் இவன் இல்லாத வீட்டை பார்க்க முடியாது. அவன் தான் வாழை மரம்.

உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் வாழை தோட்டம் வைப்பதன் மூலம் ஒட்டுமொத்த வீடும் பார்ப்பதற்கு செழிப்பாக தெரிகிறது. வாழை மரத்தில் காய்த்து தொங்கும் வாழைக்காய், உங்கள் வீட்டை மணக்கோலம் பூண்ட செய்கிறது. அத்துடன் வீட்டுக்கு ஒரு வாழை மரம் வளர்ப்பது, நாட்டிலிருக்கும் வியாதிகளுக்கு எமனாகவும் அமைகிறது. இதன் தண்டு, காய், வாழைப்பூ, வாழையிலை என அனைத்தும் மருத்துவ மற்றும் பாரம்பரிய சிறப்புகள் கொண்டது.

தடுக்கி விழுந்தால் தக்காளி தோட்டம்:

வருடத்தில் வரும் முக்கியமான பிரச்சனைகளுள் தக்காளியும் ஒன்று. விலை ஏறினால் கழுத்தில் கிடக்கும் தங்கம் மின்னுகிறதோ இல்லையோ! கண்டிப்பாக, தக்காளி ஒருவர் பார்வையில் மின்னும். இந்த தக்காளி செடியை வீட்டில் வைத்து., பழுக்கும் முதல் பழ சுவை இருக்கிறதே... எவ்வளவு தான் கடைகளில் வாங்கினாலும், இதன் சுவையை மிஞ்ச எதனாலும் இயலாது என உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றும்.

தக்காளியை முதன் முதலில் நாற்று நடும்போது காலை பொழுதில் நடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தேவையான கால அவகாசம் இரவிலே கிடைப்பதால் மாலை வேளையில் நடுவது தான் சிறந்தது. செடி வளர, சில சமயங்களில் சாய்ந்துவிடவும் கூடும். அதனால், ஒரு கம்பை செடியுடன் சேர்த்து கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் முளைத்த பின்னர் ஒரு செடியுடன் இன்னொரு செடி ஒட்டி உறவாடாதவாறு தள்ளி வைத்திருக்க வேண்டும். அப்போது தான் தேவையான காற்றோட்டம் கிடைக்க, கலப்பும் ஏற்படாமல் இருக்கும்.

எந்த செடியை எங்கே வைக்க வேண்டும் என்பதை கவனமாக கையாள, இதனால் செடியின் வளர்ச்சியும், வீட்டின் அழகும் மேம்பட உதவுகிறது. முடக்காத்தான் கீரை, பசலி கீரை, முசுமுசுக்கை இவற்றையெல்லாம் வேலியின் ஓரத்தில் வைக்கலாம். இதன் மருத்துவ குணங்களுடன் காணப்படும் யாவும், வீட்டுக்கு அழகு சேர்த்து வந்து செல்வோரை வெகுவாக கவர்வதோடு, நாளை பொழுதில் அவர்களும் வீட்டில் வளர்க்க ஏற்ற சூழ்நிலையை மனதில் உருவாக்கி தருகிறது.

Tinystep Baby-Safe Natural Toxin-Free Floor Cleaner

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon