Link copied!
Sign in / Sign up
1
Shares

தொப்புளில் அழுக்குகள் சேர்ந்துவிட்டால் விளைவு என்ன??

குளிக்கும்போது உடலை நன்கு தேய்த்து சுத்தப்படுத்துவது போல், தொப்புள் பகுதியையும் சுத்த‍ம் செய்ய முயன்றால், அது சுத்தமாக மாறுவதில்லை. ஏனெனில், அது வயிற்று பகுதியில் ஒரு சிறு குழியாக இருப்பதால், அங்கு எளிதில் அழுக்கு தஞ்சமடைந்து விடுகிறது. இதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் தொப்புளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அதாவது புண்கள் ஏற்பட்டு இதனால், பல வியாதிகள் பரவும் அபயமுள்ளது. அதிலும் முக்கியமாக பெண்கள் தங்கள் தொப்புளை அழுக்கு சேராமல், நன்கு பராமரித்து வரவேண்டும். தொப்புளில் சேரும் அழுக்குகளால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன மற்றும் அழுக்குகளை நீக்குவது எப்படி என இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

பல நாட்கள் கவனியாது இருந்து விட்டதால், தொப்புளில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து விட்டதை உணர்கிறீர்களா? கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்புவை நீரில் கரைத்து, தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து, பஞ்சால் துடைத்துவிட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல், மாயமாய் மறைந்து போய்விடும்.

தொப்புளை சுத்தம் செய்யும் விதம் குறித்து முந்தைய பதிப்பில் படித்தறிந்தோம்..! இப்பொழுது இந்த பதிப்பில் தொப்புளில் அழுக்குகள் தங்கி இருந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என படித்தறியலாம்..!

விளைவு 1

நமது அழுக்குகள் உள்ள தொப்புளில் 65 வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன; இவை நீங்கள் பயன்படுத்தும் வியர்வை சோப்புகள் அல்லது இறந்த செல்களின் மூலம் உருவாகின்றன. இந்த பாக்டிரியாக்களால் பலவித நோய்த்தொற்றுகள் உண்டாகலாம்..!

விளைவு 2

ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருமே தொப்புளை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை எனில் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுண்டு; தாய்க்கு கர்ப்பகாலத்தில், இந்த ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால், குழந்தைக்கும் இது தொற்ற வாய்ப்புள்ளது.

விளைவு 3

தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டிருப்பதை எப்படி தெரிந்து கொள்வது என கேட்கிறீர்களா? தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டு இருந்தால், வலி, அரிப்புகள், கொட்ட துர்நாற்றம் போன்றவை உண்டாகும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon