Link copied!
Sign in / Sign up
3
Shares

தொப்புள் சுத்தம் பெண்களுக்கு அவசியமா?

குளிக்கும்போது உடலை நன்கு தேய்த்து சுத்தப்படுத்துவது போல், தொப்புள் பகுதியையும் சுத்த‍ம் செய்ய முயன்றால், அது சுத்தமாக மாறுவதில்லை. ஏனெனில், அது வயிற்று பகுதியில் ஒரு சிறு குழியாக இருப்பதால், அங்கு எளிதில் அழுக்கு தஞ்சமடைந்து விடுகிறது. இதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் தொப்புளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அதாவது புண்கள் ஏற்பட்டு இதனால், பல வியாதிகள் பரவும் அபயமுள்ளது. அதிலும் முக்கியமாக பெண்கள் தங்கள் தொப்புளை அழுக்கு சேராமல், நன்கு பராமரித்து வரவேண்டும். தொப்புளில் சேரும் அழுக்குகளை நீக்குவது எப்படி என இந்த பதிப்பில் படித்தறியலாம்..!

காயங்கள்

நம்மில் சிலர் தொப்புளுக்குள் இருக்கும் அழுக்கினை சுத்தம் செய்வதாக எண்ணி நகத்தினால் சுரண்டி எடுப்பார்கள்; இவ்வாறு எடுக்கும்போது, தொப்புளில் நகக்கீறல்கள் ஏற்பட்டு, இதனால் மெல்லிய ரத்த‍க் கசிவு ஏற்படலாம்; மேலும் அங்கு பாக்டீரியா போன்ற கிருமிகள் எளிதாக‌ தொற்றிக்கொண்டு சீழ் கட்டி மற்றும் புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால், அது ஆறுவதற்கு வெகு நாட்களாகும்; அதற்கு காரணம், புண் ஏற்பட்ட பின் தொப்புளை சுத்தம் செய்வதும், அவ்விடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிகக்கடினம்.

பஞ்சுகள்

காதை சுத்தம் செய்ய உதவும், பட்ஸை எடுத்து, அதனை சிறிதளவு எண்ணெய் அல்லது தண்ணீரில் நனைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் பட்ஸை கொண்டு தொப்புளை சுத்தம் செய்ய வேண்டும்; கவனமாக, மிகவும் அழுத்தம் இல்லாது தேய்க்க வேண்டும்; அதன்பின் மற்றொரு பஞ்சினை எடுத்து தொப்புளில் எஞ்சி இருக்கும், எண்ணெய் அல்லது தண்ணீரை சுத்தமாக துடைத்து எடுத்துவிட வேண்டும்.

உப்பு நீர்

மிதமான சூடுள்ள நீரில், சிறதளவு உப்பை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்; இந்நீரில் பஞ்சை நனைத்து, தொப்புளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின் தொப்புளை உலர்ந்த ஒரு பட்ஸினால் சுத்தம் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

சில சமயங்களில், தொப்புளில் நிறைய அழுக்குகளிருந்தால், எளிதில் சுத்தம் செய்யஇயலாது; தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு செய்து, தொப்புளில் தடவி, கடிகார முள் திசையிலும், அதன் எதிர்திசையிலும் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தொப்புளிலுள்ள அழுக்குகள் விரைவில் அகன்றுவிடும்; பின் ஒரு சுத்தமான பஞ்சை வைத்து தொப்புளை துடைத்துவிடவும். 

ஈரப்பதம்..!

உங்களது தொப்புளைச்சுற்றியுள்ள பகுதிகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்; தொப்புளை சுற்றியுள்ள பகுதிகளில் மாய்சுரைசர் தடவ வேண்டியது அவசியமாகும். இதனால் தொப்புளில் அரிப்புகள் உண்டாவதைத் தடுக்கலாம். மேலும் தினமும் குளிக்கையிலேயே நகமில்லாத விரலால், தொப்புளுக்குள் சிறிது சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும்.

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
0%
Not bad
0%
What?
scroll up icon