Link copied!
Sign in / Sign up
37
Shares

தொப்புள் கொடி குருத்தணுக்கள் (stem cell) பற்றி உங்களுக்கு தெரியுமா?

அனைத்து பாலூட்டிகளுக்கும் தொப்புள் கொடி தொடர்புடையது என்பது நாம் அறிந்ததே. இது வளரும் கரு வளர்ச்சிக்கும் நஞ்சுக்கொடிக்கும் இடையேயான இணைப்பு என்பதோடு, கர்ப்பத்தின் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய, கருப்பையின் உள்ளே இணைக்கப்பட்ட ஒரு உறுப்பாகும். இந்த தொப்புள் கொடி மூன்று இரத்த நாளங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதன் முக்கியத்துவம் இதுவரை அறியப்படவில்லை. கர்ப்பகாலத்தின் போது, தொப்புள்கொடியானது ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம், மற்றும் ஆக்ஸிஜனேற்றப்படாத இரத்தம் ஆகியவற்றை நஞ்சுக்கொடி வழியாக தொப்புள் இரத்த குழாய்கள் மற்றும் நரம்புகளுக்கு எடுத்து செல்வதை வேலையாக செய்கிறது.

தொப்புள் கொடியில் அதிக அளவிலான குருத்தணுக்கள் நிறைந்துள்ளன. குருத்தணுக்கள் பெருகும் பொழுது அவை மேலும் பல குருத்தணுக்களையோ அல்லது வேறு வகை உயிரணுக்கள் பலவற்றையோ உருவாக்க கூடியவை. உதாரணமாக, தோலில் இருக்கும் குருத்தணுக்கள் மேலும் பல தோல் குருத்தணுக்களையோ அல்லது பிற விசேஷ கடமை கொண்ட தோல் உயிரணுக்களையோ உருவாக்க கூடியவை. விசேஷ கடமைக்கு ஓர் உதாரணம் தோலுக்கு கருமை தரும் மெலனின் எனப்படும் சாயம் செய்வது.

குருத்தணுக்கள் இருவகைப்படும். ஒன்று தொப்புள் கொடி இரத்த குருத்தணுக்கள், மற்றொன்று தொப்புள் கொடி திசு குருத்தணுக்கள். இந்த வருடத்தில் அதிக அளவிலானோர், இந்த குருத்தணுக்களை அவற்றிற்கான வங்கிகளில் சேமிக்கின்றன. குழந்தை பிறந்த பிறகு, குருத்தணு வங்கிகளில் குருத்தணுக்களை சேமித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அது எதிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும்.

தொப்புள் கொடி இரத்த குருத்தணுக்கள்

இரத்த குருத்தணுக்கள் நஞ்சுக்கொடியிலும், தொப்புள்கொடியிலும் குழந்தை பிறந்த பிறகு இருக்கும் இரத்தம். இதில் இளம் குருத்தணுக்கள் நிறைந்திருப்பதால், அவை தங்களை தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவை. இரத்தத்தில் காணப்படும் மற்ற அனைத்து உயிரணுக்களையும், நம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள் உட்பட அனைத்து செல்களையும் இவற்றால் உருவாக்க முடியும். லுகேமியா, லிம்போமா, SCID, இரத்த சோகை, கட்டிகளின் வகைகள் மற்றும் பிற நோய்கள் போன்ற இரத்த நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த குருத்தணுக்களில் மாற்றம் செய்யலாம்.

தொப்புள் கொடியில் காணப்படும் இந்த குருத்தணுக்கள், எலும்பு மஜ்ஜையில் காணப்படும் குருத்தணுக்களை போலவே இருக்கின்றன. இருப்பினும், எலும்பு மஜ்ஜையில் இருந்து பெறப்பட்டவைகளைவிட தொப்புள் கொடியில் உள்ள குருத்தணுக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொப்புள் கொடி திசு குருத்தணுக்கள்

தொப்புள் கொடி திசு என்பது தொப்புள் கொடியின் புறணி சவ்வு ஆகும். இது நஞ்சுக்கொடியை உள்ளடக்கிய அம்மோனிக் மென்சவ்வின் நீட்டிக்கப்பட்ட ஒரு பகுதி ஆகும். இந்த தொப்புள் கொடி திசு குருத்தணுக்கள், விவகாரமான இரு குருத்தணுக்களை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. தோலிழமத்துக்குரிய குருத்தணுக்கள்அம்மோட்டிய அடுக்குகளிலிருந்து பெறப்படுகின்றன. இடைநுழைத் திசுக் குருத்தணுக்கள் துணை-அம்னோடிக் அடுக்குகளிலிருந்து பெறப்படுகின்றன.

இந்த குருத்தணுக்களை கொண்டு நெருக்கிய குடும்ப உறவுகளுக்கும் உதவ முடியும். இந்த தொப்புள் கொடி திசு குருத்தணுக்களை கொண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சரி செய்ய இயலும். இந்த செல்கள் மூலம், நுரையீரல் புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.

குருத்தணுக்களின் முக்கியத்துவம்

நாம் காயப்படும்பொழுதோ அல்லது நோய்வாய்ப்படும் பொழுதோ நமது உயிரணுக்களும் காயப்படவோ இறக்கவோ நேரிடுகின்றது. இது நிகழும்பொழுது, குருத்தணுக்கள் செயல்படுத்தப்படுகின்றன. உடலில் காயப்பட்ட திசுக்களை சரிபார்ப்பதும் இறந்த உயிரணுக்களுக்கு மாற்று உண்டாக்குவதுமே குருத்தணுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையாகும். இச்செயல்களால் குருத்தணுக்கள் நம்மை ஆரோக்கியமாக வைத்து நம் உடலை வேகமாக மூப்படையாமல் பார்த்துக்கொள்கின்றன. ஆகையால் குருத்தணுக்கள் நம் உடலின் பிரத்தியேகமான நுண்ணிய மருத்துவப்படை போல செயல்படுகின்றன.

இவ்வளவு நன்மைகள் கொண்ட குருத்தணுக்களை பாதுகாத்து, வருக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து உங்கள் குழந்தைகளை காத்திடுங்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க மற்றும் demo-வினைப் பெற இன்றே! இங்கே! பதிவு செய்யுங்கள்: 

 

Click here for the best in baby advice
What do you think?
0%
Wow!
0%
Like
100%
Not bad
0%
What?
scroll up icon